27. மறைக்கப்பட்ட கேள்விகள்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்...

இந்த பதிவில் நாம் சென்ற வாரம் பதிவின் பற்றிய மறைக்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களையும் காண்போம்....

என்னுடைய எழுத்துக்கள் என்றும் மற்றவர் மனதில் பதிய வேண்டும் என்பதை விட மற்றவருக்கு சில சிந்தனைகளையும் கருத்துக்களையும் தரவே நான் ஆசை கொள்கிறேன் ஒரு ஒரு பதிவின் போதும்... 

சரி வாருங்கள் நான் என்ன என்ன கேள்விகளை சென்ற பதிவிலே விட்டு இருந்தேன் என்பதை பார்ப்போம்... நான் பெரிய எழுத்தாளன் அல்ல என்றாலும் என்னால் முடிந்ததை செய்கிறேன்....



முதல் கேள்வி....

அர்ஜுன் ஏன் மீனாவின் அந்த நிலையிலும் அவளை காணாமல் வெளியே சென்றான்...

நண்பர்களே Hero என்றாலே இதை செய்தாக தான் வேண்டுமா என்ன... அல்ல... ஒரு சக மனிதாக்கப்பட்ட அனைவருக்குமே வேறு வேறு கோணங்களில் சிந்திக்கும் தன்மை அடிக்கடி இருக்க வேண்டும்... அது போலவே அர்ஜுனும் அங்கே அவ்வாறு செய்தான்.... நால்வர் இருக்கும் இடத்திலே ஒருவருக்கு முடியவில்லை என்றால் நால்வரும் அங்கேயே இருக்க கூடாது... ஒருவர் அவர்களை பார்த்து கொண்டு இருக்கும் பொது மற்றவர் அவருக்கு தேவையான முதலுதவி இல்லை என்றாலும் அவருக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.... மற்ற ஒருவர் உதவிக்கு அழைக்க முயற்சித்தல் வேண்டும்... நன்மையோ தீமையோ முதலில் வெவ்வேறு கோணங்களில் சிந்திப்பதை மனதிலே கொண்டு இருக்க வேண்டும்... 



இரண்டாவது கேள்வி

ஏன் செவிலியர் அக்கா மீனாவிற்கு காய்ச்சல் என்று பொய் கூறினார்

இந்த உலகம் என்பதை விட நாம் வாழும் இந்த தமிழ்நாட்டில் ஒரு பழக்கம் என்பது மாற வேண்டும்... எதற்கு என்றாலும் பெண் குழந்தைகளையே குறை கூறுவது தான்.... பல இடங்களில் இது நடைபெற்றுக்கொண்டு தான் உள்ளது....

பெண்ணிடத்தில் மட்டும் தான் அந்த இறைவன் குறைகளை விட்டு சென்றாரா இல்லையேல் ஆணிற்கு மட்டும் தான் உடல்நலத்தை வாரி வழங்கி விட்டாரா... பெண்களும் ஆண்களும் சமமே என்று காண வேண்டும், அந்த நிலை என்று ஏற்படுகிறதோ அன்றே மனிதர்களிடத்தில் வேறுபாடு இல்லாமல் இருக்கும்....

அன்றைய கால கட்டத்தில் மீனாவிற்கு வலிப்பு உள்ளது என்று அத்தனை பேர் முன்னிலையிலும் அவர் தெரிவித்து இருந்தால், அந்த தகவல் காட்டுத்தீயை விட அதிகமாக பரவி இருக்கும்... அப்படி நடந்து இருந்தால் மீனாவை காணும் இடத்தில எல்லாம் பரிதாப பார்வையும் சிலரிடத்தில் ஏளனமும் தான் ஏற்பட்டு இருக்கும்.... அப்படி ஒரு நிலை ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டு விட கூடாது என்பதற்காகவே செவிலியர் அவ்வாறு கூறினார்....

அவர் மருத்துவமனையில் இருப்பதினால் பல்வேறு சூழ்நிலைகளில் உள்ளவர்களையும் அவர்களில் வாழ்க்கை சூழ்நிலைகளையும் கேட்பதனாலே அவர் அந்த உண்மையை மறைத்து கூறினார்...



மூன்றாவது கேள்வி

ஏன் மீனாவிற்கு அப்படி ஏற்பட்டது

மீனா தனக்கு இப்படி ஒரு குறையேற்பட்டதில் இருந்து தன்னுடைய பலவீனம் எவருக்கும் தெரிய கூடாது என்பதற்காகவே அனைவரிடமும் மனம் விட்டு பேசியும் மகிழ்ச்சியுடனுமே வாழ்ந்து வந்தால்... அவளுக்கு அப்படி முதலில் ஏற்பட்டது 5 வருடங்களுக்கு முன்பு ஷங்கரிடம் கோபித்து கொண்டு மயங்கி போனது சமயத்தில் தான்....

எந்த ஒரு குறையும் தானாக ஏற்படுவதில்லை ஏற்பட்டு விடுகின்றனர் தற்செயலாகவே.... மீனாவை பொறுத்தவரை அன்புகொண்டாள் அளவில்லாமல் எவ்வாறு இருக்கிறாளோ அதே போல தான் கவலை வந்தாலும் அளவில்லாமல் தான் போய்விடுகிறது அவளிற்கு.... அவள் அதீத கவலை கொள்ளும் நேரங்களில் எல்லாம் இவ்வாறு ஆகி விடும்...



நான்காவது கேள்வி

வனிதா ஏன் அமைதியாக எந்த உதவியும் செய்யாமல் நின்றிருந்தால்

வனிதாவை பொறுத்தவரை அவளிற்கு கோபம் வந்தால் ஏதாவது ஒரு விதத்தில் அதை வெளிப்படுத்தி ஆகா வேண்டும்... அல்லது அந்த கோபத்தை தீர்க்கும் வகையில் காரணங்கள் கூற வேண்டும்...

பொங்கல் பண்டிகையின் பொழுது ஏற்பட்டது அவளுக்கு தற்செயலாகவே இருந்ததுபோல தான் எண்ணி அமைதியாக இருந்தால்... ஆனால் ஷங்கர் நடந்தவற்றை ஒரு தருணத்தில் கூறவேண்டியதாக இருந்த காரணத்தினாலே அதை தெரிந்து கொண்டு மீனாவின் மீது கோபம் கொண்டால்....

அதனை நீக்கவே சிந்து விளையாடும் போது மீனாவின் மகிழ்ச்சி அவள் தான் முதல் பரிசு வெல்ல போகிறாள் என்பது தான்... அவள் மீது இருந்த கோபத்தை சிந்துவை வென்றே அவளது எண்ணத்தை மூழ்கடிக்க நினைத்து தனது முழு திறமையையும் காட்டினாள்... அப்போதே அவளது கோபம் போய்விட்டது... ஆனால் மீனாவை பற்றி ஷங்கர் கூறியது அவள் மீது ஷங்கர் கொண்ட அன்பும் வனிதாவை மீனாவிடம் பழக ஆசை தூண்டியது... ஆனாலும் சகஜமாக இருக்க கூடாது என்பதற்காகவே சிந்துவை சந்தித்து பேசியதும் மீனாவை சீண்டியதும்...

தான் அவளிடத்தில் விளையாடாமல் நேரடியாக பழகி இருந்தால் இவ்வாறு நடந்து இருக்காது என்று அவளே தன்னை வருத்திக்கொண்டு இருந்ததனால் தனிமையில் இருக்க நினைத்தால்....



இந்த கேள்விகள் தான் தங்களிடத்தில் கேட்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.... இருந்தாலும் நானே கூறுவேன் என்று கூறி இருந்த காரணத்தினால் கேட்க்காமல் இருந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...

சரி நண்பர்களே அடுத்த பதிவில் காண்போம்....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro