28. கலகலப்பு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மீனா ஷங்கர் வனிதா ஆகிய மூவரும் பலவற்றை பேசிக்கொண்டு இருக்க, அர்ஜுன் தலையும் புரியாமல் வாழும் புரியாமல் அதை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தான்.... அவனை அனைத்தும் பேசி முடித்த பின்பு தான் அர்ஜுனை கவனித்தனர்... பின் அவனிடமும் Flashback கூறி முடிக்கையில் மணி இரவு 9 ஆகி இருந்தது...

பின் தான் மீனாவிற்கு நியாபகம் வந்தது அர்ஜுன் ஷங்கரின் Sports meet பற்றிய எண்ணம்... அப்போது மீனா...

மீனா: "டேய் அர்ஜுன் என்ன ஆச்சுடா இன்னைக்கு  Games win பண்ணீங்களா, இல்ல சொதப்பிடிகளா டா...." என்று புன்னகையுடன் கேட்க அர்ஜுனும் ஷங்கரும் அப்போது தான் நிம்மதி அடைந்தனர்...

அர்ஜுன்: "நாளைக்கு எனக்கு shuttlecork Finals,  badmitton ல தான் சொதப்பிட்டேன்..." என்று உதட்டை ஒரு மாதிரி வைத்து கொண்டு கூற அங்க இருந்த மூன்று பெண்களும் சிரித்தே அவனை ஒருவழி செய்து விட்டனர்.... அவன் கொடுத்த Reaction அப்படி....

மீனா: "அதுக்கு ஏண்டா அப்படி ஒரு Reaction கொடுக்கற... கொஞ்சம் சாதாரணமா தான் சொல்றது... எங்களுக்கு வயிறு வலிக்குது..." என்று சிரித்து கொண்டே கூறினால்....

ஷங்கர்: "ஏய் சும்மா இரு நீ அவனை கிண்டல் பண்ணிட்டு இருக்க, நானும் தான் Win பண்ணேன் Volley ball ல..." என்று கூறினான்.... அதை அனைவரும் அமைதியாக ஆச்சரியமாக கேட்டனர்...

அர்ஜுன்: "எனக்கு என்னமோ அப்படி சிரிச்சீங்க, அவன் ஜெயிச்சேன் னு சொன்னதும் அமைதி ஆகிடிக... ஏன் அவனுக்கும் சிரிக்கறது..."

வனிதா: "Hey என்னடா சின்ன குழந்தைக மாரி அவனுக்கு சிரிக்கல எனக்கு ஏன் சிரிக்கற னு கேக்கற... லூசு..." என்று மீண்டும் சிரிக்க ஆரம்பித்தனர்....

பின் மூன்று பெண்களும் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்ந்து கிண்டல் செய்து கொண்டு இறுதியாக அனைவரும் நாளை அர்ஜுனின் பள்ளிக்கு சென்று அவனது விளையாட்டை காண்பதாக முடிவு எடுத்தனர்....

சிந்து அவளது அம்மாவிடம் கேட்க வேண்டும் என்று சொன்ன அடுத்த நொடி அவள் அம்மா மீனாவின் அறைக்கு வந்தார்...

சிந்து அம்மா: "என்ன கேக்கணும் என் கிட்ட..." என்று சொல்ல

மீனா: "நாளைக்கு அர்ஜுன் finals விளையாட போறான் அத்தை அதான் அங்க எல்லாரும் போலாம் னு யோசனை ல இருந்தோம்... அத பத்தி தான் உங்க கிட்ட சிந்து கேக்கணும் னு சொல்லிட்டு இருந்த...."

சிந்து அம்மா: மீனா பேசியதை கேட்டு அவள் அருகே சென்று "உனக்கு அவ வரணும் னு விருப்பம் இருந்த கூட்டிட்டு போடா... இதுக்கு ஏன் என் கிட்ட கேட்டுட்டு...." என்று அவளது தலையை தடவியவாறே கூறினார்...

அர்ஜுன்: "நிஜமாவா அத்தை..." என்று முந்திக்கொண்டு கேட்க

அவன் அத்தை என்று கூறியதை கேட்டு மகிழ்ந்தவர்...

சிந்து அம்மா: "ஆமா அர்ஜுன்.... நீ நல்ல விளையாடுற னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க அப்படி இருக்க நீ விளையாடுறத பாக்க உன் நண்பர்கள் ஆசைப்படும் போது நான் வேண்டாம்னு சொல்வேனா..." என்று அன்பு வார்த்தைகளை தெளித்து விட்டார்... 

அவரது வார்த்தையில் மற்றவர் சிரித்து வைக்க சிந்துவோ ஆச்சரிய பார்வையை அம்மாவின் மீதும், கோபமான பார்வையை அர்ஜுனின் மீதும் காட்டிக்கொண்டு இருந்தால்....

அப்போது அர்ஜுன் சிந்துவை ஓரப்பார்வையில் பார்த்தான்.... அவன் பார்த்ததும்

அர்ஜுன் மனதில்: "எதுக்கு இந்த லூசு இப்படி முறைக்கறா... அவ அம்மா தான் நாளைக்கு போலாம் னு சொல்லிட்டாங்களே... அப்புறம் ஏன் இப்படி பாக்குற அவங்க அம்மாவை..." என்று சிந்திக்க ஆரம்பித்தான்....

அர்ஜுன்: "அப்படியா அத்தை சொன்னாங்க... ஆனா உங்க பொண்ணு கிட்ட தான் நான் தோற்றுவிட்டேனே..." என்றான் சோகமாக அவன் முகத்தை வைத்து கொண்டு...

சிந்து அம்மா: "நீ அவளுக்காக விட்டுக்கொடுத்துட்டா அவ ஜெய்துவிடாமல் வேற என்ன பண்ணுவா... நீ தான அவளுக்கு எல்லாம் சொல்லி கொடுத்தயாம்... அவ தாத்தா பாட்டி கிட்ட சொல்லி அவ்ளோ சந்தோமா சொல்லிட்டு இருந்தா... என் கிட்ட கூட சொல்லலை... ஆனா நான் சமையல் room ல இருந்து கேட்டுட்டேன்..." என்று சிந்துவை பார்த்து புன்னகைத்தார்...

அர்ஜுன்: "அயோ அத்தை நான் விட்டுக்கொடுக்கலாம் இல்ல, சிந்து தான் தன்னோட திறமையை வெளிப்படுத்தி Win பண்ணினா..."

இதை எதையும் நம்பாமல் அர்ஜுனிற்கே சாதகமாக சிந்துவின் தாய் பேசினார்... அதில்

சிந்து: "ஏன்மா என் மேல உனக்கு நம்பிக்கை இலையாமா... அர்ஜுனும் சொல்றாரு நானா விளையாடி தான் Win பண்ணேன்னு ஆனா நீ நம்பவே மாட்டேன்ற..." என்று கைகளை கட்டிக்கொண்டு முகத்தை சிலுப்பிக்கொண்டாள்...

அவலருகினில் சென்ற அவள் அன்னை... அவளது தாடையில் விறல் வைத்து நிமிர்த்தி

சிந்து அம்மா: "எங்க நீ உன் இதயத்தில் கைவைத்து சொல்லு உனக்கே நான் என்னோட திறமையினால் தான் ஜெயிச்சேன் என்ற அந்த சந்தேகம் இல்லைனு...." என்று கூற அவள் அன்னைக்கு இது எப்படி தெரியும் என்பது போல முழித்து கொண்டு இருந்தால்...

அவள் முழிப்பதை அர்ஜுனும் காணாமல் இல்லை... பின்

சிந்து அம்மா: "சரி சரி எல்லாரும் கிளம்புங்க, போய் சீக்கரம் தூங்குங்க நாளைக்கு அர்ஜுன் விளையாடுறத பாக்கணும் ல நீங்க லாம்..." என்று சொல்லி விட்டு "சரிப்பா அர்ஜுன் நீயும் சீக்கரம் வீட்டுக்கு போ... அப்பா அம்மா தேடுவாங்க... நாளைக்கு நல்ல விளையாடு சரியா..." என்று அவனது தலையை தடவினார்...

அர்ஜுன்: "சரி அத்தை..." என்று மட்டும் கூறி ஏதோ அளவில்லா சந்தோசத்துடன் வீட்டிற்கு சென்றான்... 



இந்த பதிவிலும் ஒரு Hint வைத்து இருக்கேன் முடிந்தால் முயற்சி செய்யுங்கள் பார்ப்போம்... 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro