21

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஜனனியின் ஒவ்வொரு செய்கையும் ஜீவாவையும் சாரதாவையும் முகம் பார்த்து பேச வைக்க சங்கோஜப்படுத்தியது. அது குற்றனர்வாலோ அல்லது அவமானத்தாலோ வரும் சங்கோஜம் கிடையாது. மாறாக வெட்கத்தால் வரும் சங்கோஜம். இப்போதெல்லாம் ஜீவா அடிக்கடி ஜனனியை ஸ்கூல் முடித்ததும் ஏதாச்சும் ஐஸ் க்றீம் பார்லருக்கு அழைத்துச் செல்வான். இதற்கான அனுமதியை ஒரு நாள் அவன் சாரதாவிடமே கேட்டு விட்டான்.

தனது இடைவேளை நேரத்தில் ஸ்டாப் ரூமில் சாரதா மட்டும் தனியே அமர்ந்திருக்க ஜீவா அங்கு சென்றான். அவன் வருவதை கண்டதும் அவள் சாந்தமாக ஒரு புன்னகையை சிந்தினாள்.

" எப்படி இருக்கீங்க மிஸ்"

" பார்த்தா எப்படி தெரியிது சார், நான் ரொம்ப நல்லா இருக்கேன்" என்றவள் ஏதோ கேட்க தயங்குவது அவனுக்கு புரிந்தது.

" என்ன மிஸ் ஏதோ ஒன்னு கேட்க தயங்குற மாதிரி இருக்கு" என்று கேட்டான்.

" அது.... ஜனனி உங்களை ரொம்ப கிண்டல் பண்றாலா? அவ என்னையே ரொம்ப ஓட்டுவா. இதுல நீங்க வேற வாலண்டியரா வந்து மாட்டி இருக்கீங்க. எனக்கு அந்த டோர்னமண்ட்ல நடந்தத அவ எப்படி எடுத்துக்குவான்னு ரொம்ப பயமா இருந்திச்சி. சனா கூடவும் பேசுறதில்ல. ஆனா உங்க கூட கொஞ்சம் ப்ரெண்ட்லியா பேசுறதால அவ ரிலாக்ஸ்டா இருக்குற மாதிரி எனக்கு தோனுது. அதான் நான் அவகிட்ட எதுவுமே சொல்லல. அவ பேசுறது ஏதும் உங்கள சங்கடப்படுத்தி இருந்தா சொல்லிடுங்க. நான் அவள கண்டிச்சி வைக்கிறேன்" என்று பட்டும் படாமலும் சாரதா கூறியது 'ஜனனி ஒரு அறுந்த வாலு, அவ பண்ற வாலுத்தனத்துக்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்' என்பது போல இருந்தது.

" ஐய்யோ மிஸ், நீங்க வேற. ரொம்ப போரிங்கா போயிக்கிட்டு இருந்த என் வாழ்க்கையில என் தங்கச்சிங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணேன். அந்த வெறுமையை ஜனனி ஈடு செய்யிறா. எனக்கு அவ இப்படி என்கூட ஜாலியா பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு. அதுலயும் என் மூக்க பிடிச்சி ஆட்டிக்கிட்டே பேசுவா பாருங்க செம்ம க்யூட்டா இருக்கும். யாருகிட்ட அத கத்துக்கிட்டாலோ தெரியல. அப்புறம் அப்பப்போ அவள ஸ்கூல் முடிஞ்சதும் வெளியில கூட்டி போகட்டுமா. அவளுக்கும் கொஞ்சம் மனசுக்கு சந்தோசமா இருக்கும்" என்றான். சாரதாவுக்கு அவன் கூறியது மிகவும் சந்தோசமாகவும் ஒரு புறம் வெட்கமாகவும் இருந்தது. ஏனென்றால் சாரதா அடிக்கடி ஜனனியின் மூக்கை பிடித்து இழுத்து விடுவாள். அவளுக்கு அந்த வெட்கம் ஏன் வந்தது என்று யோசிக்க அவகாசம் அவளுக்கு இருக்கவில்லை.

" இட்ஸ் ஓக்கே சார். ஆனா ஏதும் கடையில போய் சாப்பிட்டீங்கன்னா ஒரு நாளைக்கு நீங்க செலவு செய்ங்க். அடுத்த தடவை அவ செலவு செய்யட்டும். எப்போமே நீங்க மட்டும் செலவு செய்ய வேணாம்" என்று கூறியவளை ஜீவா முறைத்துப் பார்த்தான்.

" அய்யோ சார் தப்பா எடுத்துக்க வேணாம். பொண்ணுங்களுக்கு எப்போமே அடுத்தவங்க செலவு செஞ்சிக்கிட்டு இருந்தா ஒரு மாதிரி இன்செக்யூர் உணர்வு உண்டாகும். அத அவளுக்கு வர வேண்டாம்னுதான் அப்படி சொன்னேன்" என்று கூறினாள். ஜீவாவுக்கு சாரதாவின் சமயோசித பேச்சு மிகவும் பிடித்தது. அவனுக்குத்தான் சாரதா எது செய்தாலும் பிடிக்குமே.

" ஜீவா சார் சொல்ல மறந்துட்டேன். நெக்ஸ்ட் வீக் ஸ்கூல் ஸ்கவுட் பொண்ணுங்க பீல்ட் டிரிப் ஒன்னு போறோம். அதுவும் உங்க ஊருக்குத்தான். அங்க நம்ம பசங்க தங்குறதுக்கு ஒரு இடம் ஏற்பாடு செய்யனும். முடியுமா? ஏன்னா ஸ்கூல் பட்ஜட்ல ஹோட்டல்ல ரூம் போட முடியாது. கொடுத்திருக்குற பட்ஜட் முடியிற வரைக்கும் எங்கள டூர்ல இருக்க சொல்லியிருகாங்க. ஹோட்டல்ல ரூம் போட்டா அடுத்த நாளே நாங்க ரிட்டன் ஆகனும்" என்றாள். இதை கேட்ட ஜீவாவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இந்த டூரில் சங்கவி, ஆனந்தியுடன் சாரதாவை சந்திக்க வைத்து விடலாம் என்று.

" ஒரு ப்ராப்ளமும் இல்லை மிஸ். அதெல்லாம் பண்ணிடலாம். எங்க ஊர்ல சில வீடுங்க காலியா இருக்கு. அதுல ஒன்ன நம்ம வாடகைக்கு எடுத்துக்கலாம். வாடகையும் பெருசா இருக்காது. சமைக்கிறதுக்கும் ஒரு ஆள செட் பண்ணிட்டோம்னா சாப்பாட்டு செலவும் கம்மியாகிடும். நீங்க் ரொம்ப ப்ரீயா உங்க டிரிப்ப எஞ்சாய் பண்ணலாம்"

" ஓஹ் சூப்பர் சார். ஸ்டூடண்ட்ஸ், அப்புறம் நான், வித்யா, பாதுகாப்புக்கு குமார் சார்னு ஒரு இருபது பேர் வரும். அதுக்கு ஏத்தமாதிரி அர்ரேஞ்ச் பண்ணிடுங்க. முடியும்னா ஒரு இரண்டு நாளைக்குள்ள கன்பார்ம் பண்ணிடுங்க. இல்லைன்னா வேற ஏற்பாடு செய்யனும்ல" என்று கூறினாள்.

சாரதாவை பார்த்து புன்னகைத்த ஜீவா,
" அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்லை. உங்களுக்கு வீடு கன்பார்ம். சமைக்க ஆளு நான் நாளைக்கே ஏற்பாடு செய்துட்டு உங்களுக்கு சொல்றேன்" என்றவனுக்கு குமார் மீது கோபம் வந்தது. குமாருக்கு பதிலாக தான் சென்றால் சாரதாவுடன் நேரம் செலவழிக்க முடியும் என்று தோன்றியது.

சாரதா வீட்டில்...

" அம்மா டிரிப் போறோமா. சூப்பர்மா. லிஸ்ட்ல என் பெயர் இருக்கா?" என்று ஜனனி கேட்டாள்.

" உன் பேரு இருக்கு ஜனனி. ஆனா சனா வரமாட்டா போல. ஜீவா சார் ஊருக்குத்தான் போறோம். அங்க தங்குறதுக்கு அவரு வீடு ஒன்னு பார்த்து கொடுக்குறேன்னு சொல்லியிருக்காரு" என்று தனது கொண்டையிட்ட முடியை அவிழ்த்துக் கொண்டே பதில் அளித்தாள் சாரதா.

" அய்ய் அப்போ ஜீவாவும் வர்றானா நம்ம கூட" என்று ஜனனி ஆச்சர்யம் கலந்த சந்தோசத்தில் கேட்டாள்.

" இல்ல ஜனனி, நமக்கு பாதுகாப்புக்கு குமார் சார் மட்டும்தான் வர்றாரு" என்று கூற ஜனனியின் முகம் சுருங்கியது. ஜனனிக்கு எப்படி சரி ஜீவாவை இந்த டிரிப்புக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று தோன்றியது. தன் அம்மாவை இதற்கு சம்மதிக்க வைத்தாள் ப்ரின்சிபல் எதுவும் கூற மாட்டார். தன் தாயை இதற்கு எப்படி சம்மதிக்க வைப்பது என்று ஜனனி யோசிக்க ஆரம்பித்தாள்.

சாரதா செய்த இரவு உணவை அம்மாவும் மகளும் உண்டு கொண்டிருக்க ஜனனி பேச்சை ஆரம்பித்தாள்.

" மம்மி, மம்மி" என்று ஜனனி பம்முவதை சாரதா கவனிக்காதது போல இருந்தாள்.

" சாரதா மம்மி"

" ஹ்ம்ம் சொல்லு"

" நம்ம கூட ஜீவாவையும் கூட்டி போவோமா"

" ப்ரின்சிபல் ஒரு மேல் டீச்சர கூட்டி போகத்தான் பர்மிசன் கொடுத்திருக்காறு. நம்ம ஜீவா சாரையும் கேட்டோம்னா அப்புறம் நம்ம டிரிப் கேன்சல் ஆனாலும் ஆகிடும். எப்படி வசதி" என்று சிரித்தவள், " உனக்கு உன் ப்ரெண்ட கூட்டி போகனும் அதுதானே" என்று சிரித்தாள். சாரதா சிரிப்பதை பார்த்து ஜனனி கடுப்பானாள்.

" லூசு சாரதா, குமார் சாருக்கு ஜீவா ஊர பத்தி என்ன தெரியும். அப்புறம் நமக்கு ஏதும் அவசரமா தேவைன்னா ஜீவா கூட இருந்தா நல்லா இருக்குமேன்னு சொன்னா ரொம்பதான் என்ன ஓட்டுற நீ" என்றாள். சாரதாவுக்கு ஜனனி கூறுவது சரி என்று தோன்றியது. ஆனால் குமாரிடம் எப்படி சொல்வது என்று யோசித்தவள் முதலில் ஜீவாவிடம் கேட்டு விடலாம் என நினைத்தாள்.

" ஆமா ஜனனி நீ சொல்றதும் கரக்ட்தான். நான் இதை யோசிக்கவே இல்லை. சரிப் முதல்ல ஜீவா சார் கிட்ட கேட்கலாம் அவருக்கு நம்ம கூட வர்றதுக்கு விருப்பமான்னு" என்று ஜீவாவுக்கு கால் செய்தாள் சாரதா. ஜனனி தன் மொபைலை எடுத்து யாருக்கோ மெசேஜ் செய்ததை சாரதா கவனிக்க தவறினாள்.

" என்ன் மிஸ் திடீர்னு கால் பண்ணியிருக்கீங்க. ஏதும் அர்ஜண்டா?" என்று ஜீவா கேட்டான்.

" இல்லை சார், உங்க ஊருக்கு போறோமே நீங்களே எங்க கூட வந்தா நல்லா இருக்கும்னு தோனுது. என்ன சொல்றீங்க?" என்று சாரதா கேட்க,

" அதெப்படி மிஸ், ஆல்ரெடி குமார் சார் ரெடியாகி இருப்பாரு. இடையில நான் வந்தா அது நல்லா இருக்காதுள்ள. உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் எனக்கு கால் பண்ணுங்க. என் தங்கச்சிங்க ஊர்லதான் இருக்காங்க. அவங்க எல்லாமே பண்ணிக் கொடுப்பாங்க. என் சின்ன தங்கச்சி கூட அவ ஸ்கூல் ஸ்கவுட் டீம்ல இருக்கா. சோ உங்களுக்கு இன்னும் ஈசியா இருக்கும்" என்றான். ஜீவாவின் பதிலை கேட்ட சாரதா ஜனனியை நோக்கி உதட்டை பிதுக்கி ' பெயிலியர்' என்பது போல காட்டினாள்.

ஜனனிக்கு கோபம் சுர் என்று ஏறியது. ' இந்த ஜீவா மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான். ஜாலியா டிரிப் போகலாமான்னு கேட்டா முடியாதுன்னு சொல்றான். மவனே நாளைக்கு நீ ஸ்கூல் வா. உனக்கு இருக்கு' என மனதுக்குள் ஜீவாவை திட்டினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro