பாகம் 3

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்று அவளுக்கு பிறந்த நாள். அதிகாலையிலேயே விழித்துக் கொண்டு குளித்து தம்பி வாங்கி வந்த புடவையை கட்டிக் கொண்டு வெளியே வந்த போது கூடத்திலிருந்த அப்பா எழுந்து வந்து அவளை தலையில் கை வைத்து வாழ்த்தினார். அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு சமையலறைக்குள் செல்ல அம்மா அவளுக்கு டிபன் பாக்சில் டிபனும் ஸ்வீட்டும் கட்டிக் கொண்டு இருந்தாள். மதுவைக் கண்டதும் முகம் நிறைய சிரிப்புடன் அவளுக்கு காபியைக் கொடுத்து விட்டு அவளை அள்ளி முகர்ந்தார்.

"Happy Birthday டி. இந்த வருஷம் உனக்கு நல்ல வருஷமா அமையட்டும். சீக்கிரமே கல்யாணம் பண்ணீட்டு நல்லா இரு" என்றாள் அம்மா.

மது அம்மாவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு காபியை அருந்தி விட்டு வழமைக்கு மாறாக ஆறு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு ஆபீசுக்கு கிளம்பி விட்டாள். இப்பொழுதே சென்றாள் தான் நடையிலேயே கோயிலுக்கு சென்று விட்டு அங்கிருந்து bank ற்கு bus எடுக்க நேரம் சரியாக இருக்கும். சிவராமனின் வீடு அண்ணா நகர் வெஸ்ட்டில் அமைந்து இருந்தது. அங்கிருந்து பாடிக்கு நடந்து செல்லும் தூரம் தான். பிறந்த நாள் ஆகையால் மது திருவல்லீசுவரர் கோயிலுக்கு சென்றாள். அதிகாலையில் கோயில் மிகவும் பவித்ரமாக காணப்பட்டது. அர்ச்சகரும் இன்னும் ஒரு இரண்டு மூன்று வயதில் மூத்த பெண்மணிகளையும் தவிர கோவிலில் சுத்தமாக கூட்டமே இல்லை. அந்த அமைதிக்காகவே கொஞ்சம் சீக்கிரமாக எழுந்து கோயிலுக்கு அதிகாலையே வரலாம் என்று நினைத்த படியே அர்ச்சனையை முடித்துக் கொண்டு கோயில் பிரகாரத்தை கண் மூடி சுற்றி வந்தாள் மதுரதி. சுற்றி வந்தவள் எங்கேயோ பார்த்தபடி வந்த மதனின் மீது முட்டி நின்றாள். மோதிய வேகத்தில் கையில் இருந்த தேங்காய் பூ பழம் யாவும் கீழே சிதறியது. யார் மீது யார் மோதியது யார் மீது பிழை என்பது அறியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மாற்றி மாற்றி மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். மதன் குனிந்து அவள் கீழே தவறவிட்ட அர்ச்சனைப் பொருட்களை அவள் அள்ளி எடுக்க அவளுக்கு உதவி செய்தான். அனைத்தையும் சேர்த்து எடுத்தபடி நிமிர்ந்தவள் மறுபடியும் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள். மதன் திரைத்துறையில் பிரபலமடைந்த பின்னர் இத்தனை அருகில் அவனை கண்டும் எந்தவொரு சலனமும் முகத்தில் காட்டாது மொத்தத்தில் மேலே மோதியது தவிர்த்து அவனை தனிப்பட்ட முறையில் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத ஒரு பெண் என்றாள் அது இவள் மட்டும் தான். அந்த இடத்தில் அவன் அவளிடம் இருந்து எந்தவொரு attention ஐயும் எதிர்பாராதது உண்மை தான். ஆனால் அதுவே அவனுக்கு ஒரு ஆச்சர்யத்தையும் கொடுக்க அவளை போகவிட்டு அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். திராவிட நிறம், மெல்லிய தேகம், நல்ல உயரம், உயிர்ப்புள்ள பெரிய கண்கள், நெற்றியில் ஒற்றைப் பொட்டு தவிர வேறெந்த செயற்கை அலங்காரமும் இல்லை. சுருண்ட ஈரக் கூந்தலை லூசாக விட்டிருந்தாள். சேலையில் கோயில் சிலை ஒன்று கால் முளைத்து நடந்து செல்வது போல இருந்தாள் அவள்.

மதனை பிரகாரத்தை சுற்றி விட்டு வரும் படி கூறி விட்டு அம்மா wheel chair இல் காத்திருந்தாள். மதன் கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்தான்.

"கூட்டம் சேர முன்னாடி கிளம்பிரலாமாப்பா..." என்றாள் அம்மா.

"இவளைத் தான் பிடிச்சிருக்குன்னு நான் யாரை கை காட்டினாலும் பண்ணி வெச்சிருவியா??" என்றான் வந்ததும் வராததுமாக.

"ஆ...." என்று இழுத்தாள் அம்மா. இவன் என்ன அப்பொழுது கேட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் சொல்கிறான் என்ற ஆச்சர்யத்துடன்.

"அதோ அங்க நிக்கிறா பாரு அந்த பொண்ணு. எனக்கு அவளை புடிச்சிருக்கு" என்றான் மதன் அவளைக் கை காட்டி மிக சகஜமாக. ஆனால் அவன் முகத்திலும் குரலிலும் ஒரு உறுதி இருந்தது.

சாரதாவுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக "யார்டா அந்த பொண்ணு? உனக்கு தெரிஞ்ச பொண்ணா?" என்றாள்.

"இல்லைம்மா. பார்த்தேன் புடிச்சிருக்கு. நீ தானே வரும் போது சொன்ன நான் புடிச்சிருக்குன்னு கை காட்னா மாத்திரம் போதும். நீ பண்ணி வெச்சிடுவேன்னு. அதான் இவளையே பண்ணிக்கலாம்னு..." என்றான் மொட்டையாக ஆனால் அவன் முகத்தில் இருந்த தெளிவு அவன் அதை விளையாட்டாக சொல்லவில்லை என்பதை காட்டியது.

அம்மா சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் அந்த பெண்ணையே கண்களால் அளவெடுத்தாள். பார்க்க என்னவோ குடும்பப் பெண்ணாகத் தான் தெரிகிறாள். ஆனால் யாரோ எவளோ யார் வீட்டுப் பெண்ணோ single ஓ committed ஓ married ஓ divorced ஓ இப்போது தான் பார்த்த பெண்ணை என்னவென்று சொல்லுவது. இப்பொழுதெல்லாம் யார் கழுத்திலும் தாலியும் இல்லை நெற்றியில் குங்குமமும் இல்லை. திருமணமான பெண்கள் கூட பார்வைக்கு சிறு பெண்கள் போல இருக்க இவனானால் கடைக்கு வந்து இந்த பொம்மை தான் வேணும் என்று கேட்டு அடம் பிடிக்கும் குழந்தை போல கோயிலில் கண்ட பெண்ணை மணம் முடித்து வைக்க கேட்கிறான். திருமணாமான பெண்ணாக இருந்தால் அடி வாங்கிக் கொண்டு நாளை பேப்பரில் தலைப்பு செய்தி ஆக நேரிடும்! ஆனால் அவன் இதுவரை விளையாட்டுக்கும் கூட இப்படிக் கேட்டதில்லை. இப்பொழுது என்ன செய்வது? இவள் யார் என்னவென்று எப்படி தெரிந்து கொள்வதென சாரதா யோசனையில் கரைய அதற்குள் சுவாமி கும்பிட்டு முடித்து விட்டு மதுரதி கோயிலிலிருந்து சென்று விட்டாள். அர்ச்சகரிடம் அவள் பேசி விட்டுச் சென்றதைப் பார்த்த சாரதா தன் சக்கர நாற்காலியின் உதவியுடன் அர்ச்சகரை நோக்கி சென்றாள். மதன் அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.

"இப்போ உங்க கிட்ட வந்து பேசிட்டு போனாலே ஒரு பொண்ணு. அவளை பத்தி ஏதாவது தகவல் தெரியுமா...?" என்று தயங்கிய குரலில் அர்ச்சகரை விசாரித்தாள் சாரதா.

"அதோ போறாளே அவளா? இங்க ரெகுலரா வரவா தான். இங்க பக்கத்துல தான் வீடு. அவங்கம்மா கூட ரெகுலரா வருவாங்க. பொண்ணு Indian Bank ல வேலை பார்க்கறால்ல? அதான் கார்த்தாலவே வந்துருவா. அவங்கம்மா சத்த நேரத்துல வருவா. என்ன கல்யாண விஷயமா? பாவம் அந்த பொண்ணு. தங்கமான குணம். ஆனால் கல்யாணம் தான் ஆக மாட்டேங்கறது. இன்னைக்கி அவளுக்கு பொறந்த நாளாம். இந்த வருஷமாவது அவ வாழ்க்கைல ஒரு நல்லது நடக்கட்டும்" என்று சொல்லி மேலே பார்த்த்து வேண்டிக் கொண்டார் அந்த அர்ச்சகர். திருமண தோஷங்கள் நீங்க அனேகர் வரும் ஆலயம் ஆதலால் இப்படியான சம்பாஷனைகளை அர்ச்சகர் ஏற்கனவே கண்டிருந்தார். ஆகவே சாரதா மதுரதி பற்றி விசாரித்ததில் அவருக்கு ஒன்றும் ஆச்சர்யம் இருக்கவில்லை.

பெண்ணின் குடும்பம், குலம், எந்த branch இல் வேலைப் பார்க்கிறாள் போன்ற அர்ச்சகருக்கு தெரிந்த விடயங்களை மேலோட்டமாக விசாரித்து விட்டு பெண்ணின் தாய் கோயிலுக்கு வந்தால் அவரிடம் வீட்டு விலாசத்தை கேட்டு வாங்கி வைத்திருக்குமாறு அர்ச்சகரிடம் கேட்டுக் கொண்டு சாரதா அவரிடம் விடை பெற்றுக் கொண்டாள். கார் அவர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு மறுபடியும் வீடு நோக்கி புறப்பட்டது.

"பொண்ணு Indian bank ல வேலை பார்க்கறாளாம். இன்னைக்கி அவளுக்கு பொறந்த நாளாம். வேற ஒன்னும் சரியா தெரியலை. மேற்கொண்டு விசாரிச்சுப் பார்க்கலாம் என்றாள் அம்மா. அம்மாவுக்கும் அந்தப் பெண்ணை பார்த்ததுமே ஏதோ ஒன்று சரியாகப் பட்டது. ஆனால் அதை அப்போதைக்கு அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அவனது reaction களை அவதானித்துக் கொண்டு வந்தாள் அம்மா. அம்மாவின் வார்த்தைக்கு பையனும் ஒன்றும் பெரிதாக react செய்யவில்லை ஆன போதும் Indian bank மற்றும் இன்று பிறந்த நாள் என்பதை மட்டும் அவன் மனது குறிப்பெடுத்துக் கொண்டது.

"ஏன்ப்பா நீ சீரியசா தான் இருக்கியா? இல்லை கல்யாணத்தை தட்டிக் கழிக்க என்கிட்ட எப்பவும் போல விளையாண்டுட்டு இருக்கியா? ஏதோ இதுக்கு முன்னாடி வேற பொண்ணுங்களையே பார்க்காதவன் போல கோயில்ல எதார்த்தமா பார்த்தப் பொண்ணைப் போய் புடிச்சிருக்குங்கற? இதெல்லாம் சரிப்பட்டு வருமாடா?" என்றாள் அம்மா நிஜமான வருத்தத்துடன்.

"எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடனும்னு நீ தீர்மானமா இருக்க. இதுல நான் விளையாடறதுக்கு என்னம்மா இருக்கு? சீரியசா தான் சொல்றேன்"

"கட்டிக்கிறதுன்னு முடிவு பண்ணீட்டா அந்த சுபீக்‌ஷாவையே பண்ணிக்க வேண்டியது தானேப்பா. அது நல்ல வரண் வேற. இது என்ன யாரு ஏதுன்னு ஒன்னுமே தெரியலையேப்பா.."

"கோயில்ல பார்த்த பொண்ணை கட்டிக்கத் தான்ம்மா சம்மதம் சொன்னேன். நீங்க பார்த்த அந்த பொண்ணை எனக்கு புடிக்கவே இல்லை. ஒரு பொண்ணை பார்த்ததுமே தோணனும்ல இவ தான் நமக்கானவன்னு. Photo பார்த்தப்பவும் சரி meet பண்ணி பேசினப்பவும் சரி எனக்கு சுபீக்‌ஷாக்கிட்ட vibe ஆகவே இல்லம்மா. இந்த பொண்ணு கிட்ட ஏதோ இருக்கு. அவளுக்கு என்னை யாருன்னே தெரியலைம்மா. என்னை அவ சுத்தமா கண்டுக்கலை." என்பதை ஏதோ பெருமை போல பெரிய ஆச்சர்யமாக சொல்லி விட்டு அவள் மீது மோதிக் கொண்டதை எண்ணி சிரித்தான் மதன்.

"ஆனா இவ பார்க்க ஒன்னும் அவ்ளோ நல்லாவும் இல்லையேடா, கலர் வேற ரொம்ப கம்மியா இருக்கு. குடும்பமும் ரொம்ப middle class போலத் தோணுது. சுபீக்‌ஷாக்கு என்ன குறை? சும்மா லட்டு மாதிரி இருக்கா."

"அம்மா.. சுபீக்‌ஷா பிரஜோதகம்மா.. இந்த பொண்ணு சாத்வீகம்மா..." என்று கை கூப்பி மதன் ஆக்‌ஷனோடு சொல்லவும் இருவரும் குபீரென சிரித்து விட்டனர். அதன் பின் வீடு வரை அந்தப் புன்னகை இருவர் முகத்திலிருந்தும் விலகவில்லை.

அம்மாவை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு மதன் ஆபீசுக்கு கிளம்பினான். மதன் தனது ஆபீஸ் அறைக்குள் சென்ற ஐந்தாவது நிமிடம் அவனது செக்கரட்டரி பூஜா அவனது அறைக்குச் சென்று அவனது அன்றைக்கான schedule ஐ அவனுக்கு படித்துக் காட்டினாள். அன்றைய தினம் shooting எதுவும் இல்லை. மாலை ஒரு interview மாத்திரம் இருந்தது. மற்ற படி அன்று வழமையான ஆபீஸ் வேலைகள் தான். பூஜா வெளியே சென்றதும் அவனது மேனேஜர் மற்றும் நீண்ட நாள் நண்பனான முரளி உள்ளே வந்தான். வந்தவன் எப்பொழுதும் போல அன்றைக்கான வேலைகள் பற்றி, மாலை interview பற்றியான விடயங்களைப் பற்றி பேசிக் கொண்டே போனான்.

"Indian bank ல ஒரு savings account open பண்ணனும். வரியா நேர்ல போய்ட்டு வந்துடலாம்." என்றான் மதன்.

தான் எதையோ பேசிக் கொண்டு இருக்க இவன் என்ன சம்மந்தமே இல்லாமல் பேசுகிறான் என்பதைப் போல மதனை பார்த்தான் முரளி.

"என்ன அப்படிப் பார்க்குற??" என்றான் மதன்.

"இல்லை. உன் மூஞ்சில ஏதோ சரி இல்லையே.." என்றான் முரளி புருவம் சுளித்து.

முரளியைப் பார்த்து சிரித்து விட்டு. கோயிலில் பார்த்தத பெண்ணைப் பற்றி கூறினான் மதன்.

"புதுசு புதுசா பண்ற.. பண்ணு! நம்ம என்னத்தை சொல்லி நீ என்னத்தை கேட்டு... பண்ணு பண்ணு.. I have no கருத்து in this matter. ஆனா எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணு. நீ எல்லாம் ஒன்னும் நினைச்சதுமே முன் வாசல் வழியா public ல போய்ட முடியாது. உனக்கெல்லாம் கொல்லை புறமா தான் entry. தெரியும்ல! நான் bank ஐ contact பண்ணி நம்ம வரதா சொல்லிடறேன். அப்போ தான் அவங்க அதுக்கு ஏத்தாப்ல arrange பண்ணுவாங்க" என்று சொல்லி விட்டு நகர்ந்தான் முரளி. நிஜமாகவே public இல் அதுவும் peek hours இல் செல்வதால் மதன் shirt இன் மீது Hoodie வைத்த jacket அணிந்து கருப்பு கண்ணாடி அணிந்து தான் செல்ல வேண்டி இருந்தது. பின் வாசல் வழியாக மதன் Bank manager இன் அறைக்கு அழைத்து செல்லப்பட்டான். மதன் கையில் ஒரு பூங்கொத்து வைத்திருந்தான்.

மதனை கண்டதும் மேனேஜர் கணேசனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. மதன் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றியும் அவரது பெண்கள் இருவரும் மதனின் தீவிர விசிறிகள் என்பது பற்றியும் பேசிக் கொண்டு இருந்தார். மதனிடம் autograph ம் அவனோடு selfie யும் எடுத்துக் கொண்டார். வங்கியின் மேல் பதவியில் உள்ள சில ஊழியர்களும் உள்ளே வந்து மதனோடு selfie எடுத்துக் கொண்டனர். கீழ் நிலை ஊழியர்கள் யாருக்கும் அவனது வருகை தெரியாமல் பார்த்துக் கொண்டது நிர்வாகம். மதன் டெப்பாசிட் செய்ய விரும்புவதாகக் கூறிய தொகையைக் கேட்டதும் மேனேஜர் கணேசனுக்கு தலை சுற்றாத குறை தான். ஆனால் மதன் கிளம்பும் நேரம் நெருங்கியும் அவன் கையில் இருந்த பூங்கொத்தை அவன் இன்னும் கொடுக்காதிருந்ததை மேனேஜர் நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தார்.

"உங்க staff யாருக்காச்சும் இன்னைக்கி birthday வா?" என்றான் மதன்.

"Staff ஓட birthday... என்று சொல்லி யோசித்தவர். சரியா தெரியலைங்களே sir. கொஞ்சம் இருங்க இதோ check பண்ணி சொல்றேன்" என்று கூறி அவர் யாரையோ தொலைபேசியில் அழைத்து கேட்க. 10 நிமிடத்தில் மறுபடி தொலைபேசி அழைத்தது.

"Digital banking section ல மதுரதிங்கற பொண்ணுக்கும் customer care ல கிரிதர்ங்கற பையனுக்கும் இன்னைக்கி birthday வாம் sir" என்றார் மேனேஜர்.

"அந்த பொண்ணை நான் மீட் பண்ணலாமா?" என மதன் வினவ.

ஏன் எதற்கு என்று யோசிக்காமல் தொலைபேசியில் அழைத்து அந்தப் பெண்ணை உடனடியாக தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தார் மேனேஜர்.

மேனேஜர் அழைக்கிறார் என்றதும் என்னவோ ஏதோவென டென்ஷனாக வந்தவளுக்கு மேனேஜர் அறையில் அவனைக் கண்டதும் தூக்கி வாரிப் போட்டது. 'மோதினதுக்கு தான் அப்பவே மன்னிப்பு கேட்டுட்டேனே. இவன் எதுக்கு இப்போ இங்க வந்திருக்கான்' என்று அவள் முகம் பயத்தில் சிறுத்தது.

அவளைக் கண்டதும் தன் இருக்கையை விட்டு எழுந்தவன் "Happy Birthday" என்று சொல்லி அவள் கையில் பூங்கொத்தை கொடுத்து விட்டு மேனேஜரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான்.

பார்வை ஒன்றில் காதல் கொண்டா
எந்தன் நெஞ்ஜெங்கும் நுன்பூகம்பம்
பேரே இல்லா பூவை கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ
நீ வாழவென்று என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ
ஓயாமலே பெய்கின்றதே என் வானில்
ஏனிந்த காதல்
♥️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro