பாகம் 4

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒரு நிமிடம் ஈ ஆடவில்லை மதுவின் முகத்தில். சற்று நேரத்தில் தன்னிலை உணர்ந்து "சார் யார் சார் அவரு?" என்றாள் மேனேஜரிடத்தில்.

"ஏம்மா யார்மா நீ??" என்றார் பதிலுக்கு மேனேஜர். இந்த பெண்ணுக்கு மதன் சக்கரவர்த்தியை யாரென்று தெரியாதது ஒரு அதிசயம் என்றால் இவளுக்கு ஏன் அவன் பூ கொடுத்து விட்டு போகிறான் என்பது இன்னொரு அதிசயமாய்த் தோன்ற.

என்ன சொல்லுவதென்று தெரியாமல் மது விழிக்க "போம்மா போய் வேலையைப் பாரு" என்றார் அவர்.

மதுவும் தலை ஆட்டி விட்டு வந்து தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள். அன்றைய நாள் முழுவதும் அவளது மேலதிகாரிகள் அனைவரும் அவளை ஒரு மார்க்கமாகவே பார்த்து விட்டு சென்றார்கள்.

"யார்னே தெரியலைடி. காலைல அந்த ஆளு மேல கோயில்ல தெரியாமல் மோதிட்டேன். என்னை தேடி வந்து வாழ்த்து சொல்லி பூ குடுத்துட்டுப் போறான்" என்று தன் ஒரே தோழி சாருவிடம் மட்டும் நாள் பூராகவும் சொல்லி புலம்பிக் கொண்டு இருந்தாள் மது.

"யாரா இருந்தா என்ன? கையைப் புடிச்சா இழுத்தான்? பூ தானே குடுத்தான்??? உன்னை வேணாம்னு சொன்ன ஆம்பளைங்க மத்தில எவனோ ஒருத்தன் உன் பிறந்த நாளும் அதுவுமா உன்னை தேடி வந்து பூ குடுத்து இருக்கான்னா சந்தோஷப் படுவியா... சும்மா புலம்பிட்டே இருக்க.." என்றாள் சாரு.

"ஹ்ம்ம்ம்..." என்றாள் மது பதிலுக்கு அசுவாரஸ்யமாக.

"அடியே ஆனாலும் நீ இன்னைக்கி ஏதோ புதுசா ஒரு திணுசா தான்டி இருக்க. எப்போமே இப்படி லூஸ் ஹேர் விட்டு சாரி கூட இப்படி லூசாவே விட்டு கட்டுடி. நிஜம்மா நீ இன்னைக்கி ரொம்ப அழகா இருக்க" என்று கூறி மதுவுக்கு கையால் திருஷ்ட்டி சுற்றினால் சாரு.

"எப்போதும் பண்ணா எல்லாமே அலுத்து போயிறும்டி. அப்பப்ப பண்ணா தான் எதுக்குமே மதிப்பு" என்று கூறி சலித்துக் கொண்டாள் மது.

"யார் உன்னை என்னல்லாம் சொல்லி இருக்காங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் நீ ஒன்னும் அவ்ளோ மொக்கை ஃபிகர்லாம் கிடையாது. Natural ஆ நீ அழகான பொண்ணு தான். ஆனால் என்ன சுத்தமா self confidence இல்லை self care உம் zero ஏனோ தானோனு இருக்க. தலைல தினம் அரை லிட்டர் எண்ணையை வச்சு நடு வகிடு எடுத்து தலையை இறுக்கி பிண்ணிக்க வேண்டியது, புடவை ஜாக்கெட் எல்லாம் அப்படியே முழுசா மூடி போர்த்திக்க வேண்டியது, தோல்ல நீலமா strap வச்ச உங்க ஆத்தா காலத்து hand bag ஒன்னு. மாற வேண்டியது உன்னை சுத்தி இருக்கவங்க கிடையாது. நீ தான்" என்றால் சாரு நிஜமான அக்கறையுடன்.

சாருவை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மது தொடர்ந்து கணினியையே தட்டிக்கொண்டிருக்க,

"நான் இவ்ளோ சொல்றேன் கம்னு இருக்க? என்னடி பண்ற உன் salary ஐ? உனக்காகவும் தான் கொஞ்சம் செலவு பண்ணேன்" என்றாள் சாரு கோபமாக.

"Salary அப்படியே account ல தான்டி இருக்கு. என் கல்யாண செலவுக்காக வச்சிருந்ததை வச்சு தான் வீட்ல விதுக்கு பண்ணீட்டாங்களா so என் கல்யாணத்துக்கு நான் தான் சேர்த்தாகணும். இப்போலாம் பொண்ணு கருப்பா இருக்குன்னுட்டு நிறைய வரதட்சணை கேட்குறாங்கடி" என்றாள் மது பதிலுக்கு.

மது அப்படி சொன்னதும் சாருவுக்கு என்னவோ போல் ஆகி விட்டது. மதுவிடம் நேரடியாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் இந்த பொண்ணுக்கு ஒரு நல்லதை நடத்திக் குடுப்பா என மனதுக்குள் வேண்டிக் கொண்டாள் சாரு.

ஆனால் சாரு கூறியதென்னவோ நூற்றுக்கு நூறு உண்மை தான். மது கருப்பாக இருந்தாலும் நல்ல கலையான முகம் நளினமான உடல்வாகு. அவளது குறையே அவளது நிறம் அல்ல. அவளுக்கு அவளை எப்படி present செய்துக் கொள்வது என்பது தெரியாதிருந்தது. அதில் நாட்டம் இருக்கவில்லை என்பதுவும் ஒன்று. கொஞ்சம் தனக்காக மெனக்கெட்டால் மது ஒரு அழகி தான். ஆனால் என்ன அதை அவள் பொருட்படுத்த மாட்டாள். மதுவிடம் எல்லாவற்றிற்கும் ஒரு அளவுகோல் இருந்தது. சிரிப்பில் இருந்து அழுகை வரை, உண்பதில் இருந்து உடுத்துவது வரை, செலவு செய்வதில் இருந்து எல்லாவற்றுக்கும் ஒரு அளவுகோல் வைத்திருப்பாள். நீங்கள் என்ன பெரிய ஜோக்கை சொன்னாலும் அவளுக்கென்று ஒரு சிரிப்பு உண்டு அதைத் தாண்டி உங்களால் அவளை சிரிக்க வைக்க முடியாது. என்ன பெரிய துன்பம் வந்தாலும் அவளை அவ்வளவு சீக்கிரத்தில் அழ வைக்கவும் முடியாது. ரொம்பவும் கல் நெஞ்சக்காரி. அலட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் அவளுக்கு வரவே வராத கலைகள். அவளிடம் கொஞ்சம் கூட செயற்கைத் தனம் என்பதே கிடையாது. மிகவும் natural ஆக original ஆக இருப்பாள். அது தான் அவளுக்கு அழகும் கூட. அவளின் ஒரே மைனஸ் என்னவென்றாள் மதுவுக்கு எப்போதுமே தன்னைப் பற்றிய தன்னம்பிக்கை மிக மிக குறைவு. தன்னை எப்போதுமே மிக குறைவாகவே மதிப்பிட்டிருந்தாள் அல்லது அப்படி பழக்கப் பட்டிருந்தாள். அவள் தன் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாததற்கு அதுவும் ஒரு காரணம்.

Lunch break இன் போது சாருவும் மதுவும் அம்மா கட்டித் தந்த கலந்த சாதத்தையும் ஸ்வீட்டையும் சேர்ந்து உண்டார்கள். Off ஆவதற்கு ஒரு சில நிமிடங்களே இருந்த போது ஏதோ வேலையாக வேறு department வரை சென்று விட்டு சாரு பரபரப்பாக ஒடி வந்தாள். வந்தவள் அவசர அவசரமாக தன் கைப்பேசியைத் தட்டி காலையில் பூக் கொண்டு வந்து தந்தவனின் படத்தை கைப்பேசியில் தேடி எடுத்து "உனக்கு காலைல பூ குடுத்தது இவராடி?" என்றாள் கண்கள் மின்ன.

அவளுக்கு பூ கொண்டு வந்து தந்தவனின் ஃபோட்டோ எதற்கு ஃபோனில் வந்து இருக்கிறது என புரியாமல் பார்த்து ஆமென தலையாட்டினாள் மது.

"ஐயோ ஐயோ ஐயோ.. இந்த விவரம் கெட்ட பொண்ணை வச்சுட்டு நான் என்னத்த பண்ணுவேன். அடியே கிறுக்கி இது யாருனு நினைச்ச? இது இன்னைக்கி தேதில ஊர்ல உள்ள எல்லா பொன்ணுங்களோட heart throb மன்மதன் மதன்சக்கரவர்த்திடி. பெரிய சினிமா ஸ்டார். மதன் யாருனு தெரியாமல் நீலாம் உயிரோட இருக்கறதே வேஸ்ட். அங்க அவன் அவன் மதன் கூட ஒரு selfie எடுக்க முடியலைனு வயிறு எரிஞ்சிட்டு இருக்கான். அவர் என்னன்னா உன் birthday கு wish பண்ணி bouquet குடுத்துட்டு போயிருக்கார். நீ அவர் யாருனு கூட தெரியாமல் இங்க உட்கார்ந்து அந்த ஓட்டை கம்ப்பியூட்டரை கட்டி அழுதுட்டு இருக்க" என்று சொல்லி புலம்பித் தீர்த்தாள் சாரு.

"ஓஹ்ஹ்... சினிமாக் காரனா? அப்போ இது confirm ஆ ஏதாவது prank ஆ தான் இருக்கும். நான் கூட யாரோ ஏதோனு நாள் பூரா tension ஆகிட்டேன். நீ அந்த ஆளு fan ஆ? இந்தா அப்போ இந்த bouquet வை நீயே வச்சுக்கோ. பாரு இதுல அந்த ஆளு autograph கூட இருக்கு. சரிடி நான் வரேன். சத்யா ஊர்ல இருந்து வந்துருக்கான். நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்." என்று விட்டு bouquet வை அப்படியே விட்டு விட்டு ஏதோ பெரிய பாரத்தை இரக்கி வைத்தாற் போல நிம்மதிப் பெருமூச்சிடன் விட்டை நோக்கி நடையைக் கட்டினால் மதுரதி.

மது அப்படி சொல்லிவிட்டு சென்ற பின்னர் இது நிஜமாகவே ஏதாவது prank ஆகத் தான் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் சம்மந்தமே இல்லாமல் மதன் சக்கரவர்த்தி எதற்காக மதுவை தேடி வந்து பூங்கொத்து தர வேண்டும். ஆனால் prank ஏ ஆனாலும் மதன் கையால் bouquet வாங்குவதென்றால் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது புரியாமல் தூக்கிப் போட்டு விட்டு போகிறாள் லூசு என தோழியை நொந்து விட்டு bouquet வை ஆசையாக எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சாரு.

மது வீட்டுக்கு வந்த போது மணி இரவு 7:30 ஐ தொட்டிருந்தது. காலையில் அவள் வேலைக்கு செல்லும் போது காது வரை போர்த்திக் கொண்டு படுத்திருந்தவன் அவள் வீடு வந்த போது ஓடி வந்து அவளை உற்சாகமாக் கட்டிக் கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தான். ஒரு கேக்கை வாங்கி வந்து சுற்றி வர பலகாரங்கள் வைத்து அவள் வரும் வரை காத்திருந்தது அவள் வீடு. மதுவுக்கு எப்போதுமே இந்த ஆடம்பரம் ஆரவாரம் எல்லாம் பிடிக்காத போதும் 'இப்போ எதுக்கு இதெல்லாம்? நான் என்ன பாப்பாவா? முப்பது வயசாச்சு. சொன்னா யார் கேட்குறா' என தன் குடும்பத்தை செல்லமாக கோவித்துக் கொண்ட படி கேக் வெட்டி அவர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தாள். அன்று மது குளித்து உடை மாற்றி வந்ததும் அனைவரும் சீக்கிரமே ஒன்றாக அமர்ந்து இரவு உணவு உண்டார்கள். காலை கோயிலில் நடந்தது பற்றியோ ஆபிஸில் நடந்தது பற்றியோ ஏனோ மது யாரிடமும் மூச்சு விடவில்லை. இரவு உணவுக்கு பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்த சமயம் தங்கை வித்யா அழைத்தாள்.

"Hello.. சொல்லுடி" என்றாள் அக்கா.

"Happy birthday மது" என்றது தங்கை.

"என்ன இப்போ தான் ஞாபகம் வந்திச்சோ??" என்று தங்கையை வம்பிழுத்தாள் மது.

"ஏ.. இல்லைடி. நாளைக்கு ரகு டெல்லிக்கு போறாரா. அதான் packing அது இதுனுட்டு ரொம்ப வேலை. நீயும் ஆபீஸ்ல இருப்பபேனு தான் ஒரடியா நீ வீட்டுக்கு வந்தப்பறமா கூப்பிட்டுக்கலாம்னு இருந்துட்டேன். அப்பறம் நீ சொல்லு பிறந்த நாள்லாம் எப்படி போகுது?"

"ஹ்ம்ம்.. எப்போவும் போலத் தான்டி. சத்யா வந்திருக்கான். சொன்னானா? அவன் வந்தது தான் special. ஒரு புடவை வாங்கிட்டு வந்து கொடுத்தான். வேற ஒன்னும் இல்ல"

"ஓஹோ.. புடவை photo WhatsApp பண்ணி விடு. எருமை உன் பிறந்த நாளை ஞாபகம் வச்சிருக்கான். இந்த வாட்டி என் பிறந்த நாளை மறந்துட்டான் தெரியுமா?? அவனுக்கு எப்போமே நீ தான் favourite"

"உங்க பிரச்சினைல என்னை கோர்த்து விடாதீங்க. அதை நீ நேரா அவன் கூட டீல் பண்ணிக்க. ஆமா சென்னை வர மாதிரி ஐடியா இருக்கா இல்லையா? வரேன் வரேன்னு தான் சொல்ற. வரதா தெரியலையே"

"உனக்கு தான் தெரியுமேடி. இங்க நான் இல்லாமல் ஒன்னுமே நடக்காது. எல்லாத்துக்கும் நான் வேணும். ஒரு வாரம் டெல்லில போய் தனியா என்ன பண்ணப் போறாரோ தெரியலை. நீயுந்தான் சீக்கிரமா ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோயேன்டி. அதை சாக்கா வச்சு ஒரு பத்து நாள் அங்க வந்து டேரா போட்டுடலாம்"

"அது சரி! நீ சென்னை வரதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கணுமா??" என்று சொல்லி சிரித்தாள் மது.

பின்னர் தொலைபேசி அம்மா அப்பா சத்யா என கை மாற்றப்பட்டது. மதுவும் விதுவும் நேர் எதிர் துருவங்கள். மது கருப்பாக ஒல்லியாக நெட்டையாக இருப்பாள். விது நல்ல கலராக கொஞ்சம் பூசினாற் போல நடுத்தர உயரமாக இருப்பாள். மது வேலைக்கு செல்ல ஆரம்பித்த நாள் முதல் புடவை மட்டும் தான் கட்டுவாள். வித்யா சுடிதார், டாப்ஸ் என கொஞ்சம் வெஸ்டர்னாக உடுத்திக் கொள்வாள். இவளுக்கோ தன்னை பற்றி கொஞ்சம் கூட அக்கறை கிடையாது. வித்யாவானால் தனக்காக ரொம்பவும் மெனக்கெடுவாள். மது அளவாக சிரிப்பாள் மெதுவாக பேசுவாள். வித்யாவுக்கு கொஞ்சம் வால்யூம் ஜாஸ்த்தி. ஆனால் அந்த வீட்டில் எல்லோரும் அறிந்த ஆனால் யாரும் வெளிப்படையாக வெளியே சொல்லாத ரகசியம் அங்கு விதுவை விடவும் எல்லோருக்கும் மது மீது கொஞ்சம் பிரியம் அதிகம். அதனாலேயே விதுவுக்கு எப்போதும் மது மீது கொஞ்சம் பொறாமை உண்டு. விது எப்போதும் மதுவை கொஞ்சம் இழக்காரமாகத் தான் பார்ப்பாள். ஆனால் மது மனதில் எந்த கலங்கமும் இல்லை. மதுவுக்கு அலங்காரம் ஆடம்பரங்கள் இல்லை ஆனால் அவள் முகத்திலும் மனதிலும் ஒரு பரிசுத்தம் உண்டு. வித்யா திருமணம் முடித்தும் சத்யா வேலைக்கென்று வெளியூரும் சென்ற பின்னர் அந்த வீட்டில் யாரும் டீவி பார்ப்பதில்லை. மதன் யாரென்று அந்த வீட்டில் அறியாதவர்கள் மதுவும் அவள் பெற்றோரும் தான். வித்யாவும் சத்யாவும் மதனுக்கு ரசிகர்கள் தான். அப்பேர்ப்பட்ட மதனுக்கு மதுவைப் பிடித்திருப்பது தெரியும் போது விதுவின் மனநிலை எப்படி இருக்கும்? மது மதனை ஏற்பாளா???

வயசு கன்னியோ மனசு கடவுளோ
புடவை கட்டிப் போகும்
பொல்லாத குழந்தையோ
ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சி கிளி இவளோ
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா
நாளை என் தாயின் மருமகளோ
எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலையே
சிறு முந்தாணை மூடிடும் தெய்வமே
உன்னை முத்தாட தோணலையே
♥️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro