பூ - 22

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"உங்க ரெண்டு பேருக்கும் அங்க என்ன வேலை ரெண்டு பேரும் ஆபீஸ் போங்க.... நாங்க மட்டும் தான் போவோம்...." என இருவரையும் விரட்டி கொண்டிருந்தாள் அபி...

''உன்னையெல்லாம் காலேஜ் அனுப்பி இருக்கனும் ஏதோ பாவமுணு லீவ் போட சொன்னா ரொம்ப பண்ற அமைதியா வா இல்ல உன்ன கூட்டிட்டு போக மாட்டோம்" என அஸ்வின் அவளுடன் சண்டைக்கு நிக்க

"ஹலோ மாம்ஸ் உங்களையே நாங்கதான் கூட்டிட்டு போகணும் ஞாபகம் இருக்கட்டும்.... என்ன சிவாம்மா உங்க பங்காளி ரொம்ப பேசுராரு நீ அமைதியா இருக்க...." என மோனு சிவாவை வம்பிளுக்க....

"டேய் நீ வேற அமைதியா இருடா.... அந்த இரா மீசைய சம்மாளிக்க இந்த மெதாவியாள மட்டும் தான் முடியும் எப்படிதான் சமாளிக்கிறாலோ....!!??" என அவனது மாமனாரை நினைத்து புலம்ப அப்பொழுதே அஸ்வினுக்கும் ஞாபகம் வந்தது தனது மாமாவை பற்றி....

"அது.... இதுகெல்லம் ஒரு திறமை வேணும் சிவாமா.... உங்களுக்கெல்லாம் இல்லை" என தனது டாப்பின் காலரை தூக்கி விட

" இப்பையாச்சும் போலாமா...?" என இருவரும் சேர்ந்து கத்த....

"அச்சோ அவ்வுளவு அவசரமா.... சிவாமா...." என அவனை பார்த்து கிண்டலடிக்க....

"ஆமா மோனு அவசரம் தான் போல முகத்தை பாரேன் பாவமா இருக்கு சரி வா போகலாம்...." என பெரிய மனதுடன் அபி ஒப்புக்கொள்ள

"எல்லாம் என்னோட நேரம்" என இருவரும் தலையில் அடித்து கொண்டனர்.

"சார் எல்லாம் ரெடி..." என SI கூற

"ஓகே நா ஜர்ஜ் கிட்ட பேசிட்டேன் இன்னைக்கே இந்த கேஸ் முடுஞ்சுரும் அதுக்கு அப்பரமா பிரஸ் கிட்ட சொல்லலாம் ஃபுல் ஜட்ஜ்மெண்டும் வராம யாருக்கும் சொல்ல வேண்டாம்.... வாங்க போகலாம் போற வழியில ஹாஸ்பிடல்ல இருக்க ரெண்டு பேரையும் பிக் பண்ணிக்கலாம்...." என வெளியே செல்ல அவனுக்கான போலீஸ் வாகனம் தயாராக நின்றது....

"வாங்க மாப்பிள்ளை... நீங்களும் தான் வாங்க மாப்பிள்ளை வா அபி..." என சுகந்தி அனைவரையும் வரவேற்க

"என்ன சுகந்திமா மகள மறந்தாச்சா....???" என நக்களுடன் மோனு வினவ....

"மறந்தது நாங்களா இல்லை நீயா.... எப்ப வர சொன்னா எப்ப வர்ற.... "

"அச்சோ என் செல்லத்துக்கு கோவம் வருதே.... எல்லாம் அந்த ரெண்டு தெண்டங்களால வந்தது... (வைனுவும் அம்முவும் தான்) பத்தரமா இருக்கணும் வெளிய எங்கையும் போக கூடாது.... அப்படி இப்படின்னு ஆயிரம் கண்டிசன் இப்பதான் நிம்மதியா இருக்கு.... "

"என்ன சொல்லுற அப்படினா அவுங்கள பிடிச்சாச்சா....???" என்றாள் மகி ஆச்சர்யமாக... மற்றவரும் அதே போல் தான் நின்றனர்.

( இந்த பையன் தாம்பா கொஞ்சம் ஓவரா பில்டெப் பண்ணிட்டான் அதனாலதான் அவள உடனே குணா வீட்டுக்கு கூட்டிட்டு போக எல்லாரும் ஒத்துகிட்டாங்க)

"அதுவா....!!" என இவள் இழுக்க....

"ஏய் யோசிக்காம சொல்லு பிடுச்சாச்சா..??" என்றான் சிவா

"ஆ.... பிடிச்சாச்சு.... இன்னைக்கு கோர்ட்ல புரோடுஸ் பண்ண போறாங்க.... "

"பட் பிரஸ் யாருக்கும் சொல்லல.... " என்றாள் மது.

"அட என்னாச்சு அக்கா.... கல்யாண பொண்ணு மாறி இருங்க ஏன் திடீர்னு பத்திரிகையாளரா மாறிட்டிங்க அது உங்க வேலை தான் பட் இப்ப வேணாம்... மீ பாவம்...." என அவளை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல.... மற்றவரும் உள்ளே நுழைந்தனர்.

என்னைய மட்டும் நல்லா மாட்டி விட்டுட்டான் சிக்கட்டும் இருக்கு என வைனுவை மனதினுள் வருத்தெடுக்க.... "என்ன மோனு எங்க அண்ணனை மனசுக்குள்ள திட்டுற போல...." என அம்மு அவளை வம்பிழுக்க...

"அண்ணனை திட்டுணதும் மூக்கு வேர்துருச்சா.... எனக்கும் ஒரு அண்ணன் இருக்கானே... எங்க அவன்...??? "

"அதோ அங்க..." என கைகாட்ட கார்த்தி அங்கு இருந்தவர்களிடம் ஏதோ வேலை சொல்லி கொண்டிருந்தான்.

"டேய் அண்ணா அங்க என்ன டா பண்ணுற.... உன் ஆளு இங்க இருக்கா.... "

"அடியெய்.... இப்பதான் அவன கஷ்ட பட்டு அனுப்பி வச்சேன் உனக்கு அது பொருக்களையா...???" என்றாள் அம்மு.

"அச்சோ என் செல்ல தங்கச்சி இதுக்குதான் நீ வேணும் இதோ இப்ப வர்றேன்.... யாரும் கூப்பிடாமல் வர கூடாதுனு சொண்ணேல இப்ப என்ன பண்ணுவ....??" என வேகமாக வந்தான் கார்த்தி. அவர்களை பார்த்து அனைவரும் சிரிக்க அம்மு அவளை முறைத்து கொண்டிருந்தாள்.

இவளோ ஈ ஈ ஈ என இழுத்து வைக்க... சுகந்தி அனைவருக்கும் ஜுஸ் எடுத்து வந்தார்.

"மா அப்பா எங்க...???" என்றாள் மோனு.

"ரூம்ல இருக்காருடா கூப்படவா???" என சுகந்தி வினவ...

சிவாவும் அஸ்வினும் ஒரு சேர "வேண்டாம் அத்தை...'' என கத்த....

"ஏன்... இந்த கொல்ல வெரி... நாங்க அங்கையே போறோம் யூ டோண்ட் வொரி கத்துர கத்துல வந்துற போறாரு...." என அவர்களை எச்சரித்து விட்டு உள்ளே சென்றாள். ( கொஞ்ச நேரம் அவரை உள்ளேயே அடைத்து வைக்கும் படி கேட்டு கொண்டுதான் உள்ளே நுழைந்தனர் மாப்பிள்ளைகள் இருவரும்)

"பா... "

"குட்டிமா.... "

"மாமா...." என்றனர் அபியும் அம்முவும்...

"வாங்கடா.... என்ன மூணு பேரும் ஒண்ணா வந்திருக்கீங்க.... "

"இல்ல மாமா கார்த்தி சிவா அப்பறம் அஸ்வின் எல்லாரும் தான் வந்திருக்கோம்" என்றாள் அபி கோர்வையாக.....

"என்ன மாப்பிள்ளை வந்திருக்காங்கலா...???" என அவர் கேட்க மற்ற இருவரும் அவளை முறைத்தனர்.

"ம்ம்ம் ஆமா பா தனியா எங்கேயும் போக கூடாதுனு தான் எல்லாரும் சொல்லி இருக்கீங்கலே அதுதான் துணைக்கு கூட்டிட்டு வந்தேன்" என ஏதோ ஒன்றை கூற

"அதுவும் சரிதான் சரி வாங்க வெளிய போலாம்...." என அழைக்க

"அய்யோ... வேண்டாம் மாமா" என அபி கத்தி மறுபடியும் இருவரிடம் இருந்து முறைப்பை பெற்று கொண்டாள்.

"ஏன்டா.... வெளிய வேணாம்... "

"ஆ... அது...வா.... பா.... அது.... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் அதுதான் இங்கைனா நல்லா இருக்கும் வெளியான...." என அவள் இழுக்க....

"ஆமா மாமா இன்கையே பேசலாம்" என தோழிக்கு உதவ கரம் தந்தாள் அம்மு.

"சரி சொல்லுங்க என்ன பேசணும்.... ''

"பத்திரிக்கை எல்லாம் ஓரளவு குடுத்தாச்சு.... நீங்களும் எல்லாம் குடுத்து முடிச்சாச்சு அப்படினு கார்த்தியும் கோபியும் நேத்து சொன்னாங்க.... அதுதான் அடுத்த வேலைய பாக்கலாம்னு.... நாளைக்கு பந்த கால் நடலாம்... அப்பதான் கரெக்டா இருக்கும்... நிச்சியத்துக்கு தான் டிரஸ் எடுத்துறுக்கோம் முகூர்த்த புடவை எடுக்கணும் இன்னைக்கு நாள் நல்லா இருக்கு சோ இன்னைக்கு இவிங்க் ஐஞ்சு மணிக்கு கடைக்கு போலாம்னு அத்தை சொல்ல சொன்னாங்க... ஏற்கனவே சொல்லிட்டாங்க இருந்தாலும் என்னையும் சொல்ல சொன்னாங்க.... "

"சரிடா... போய்ட்டு வந்தாரோம் உங்களுக்கெல்லாம் டிரஸ்... "

"மாமா அதெல்லாம் நாங்க எடுத்துட்டோம்..." என வேகமாக கூடியவள் அம்முவை பார்த்து "எல்லாருக்கும் ஒரே மாறி...." என உள் நுழைந்த குரலில் கூற அவரோ வாய்விட்டு சிரித்து கொண்டே

"சரிடா எடுத்தாச்சுள... அப்பறம் என்ன... விடு அம்மு சின்ன பிள்ளை...." என அருணா கூற அங்கு வந்த சுகந்திக்கு சந்தோசம் கண்ணீர் இரண்டும் ஒன்றாக வந்தது... பின்னே தனது கணவர் இவ்வளவு சிரித்துள்ளாரே நீன்ட நாட்களுக்கு பிறகு.... (பெண் பிள்ளைகள் வளர வளர அவரது சிரிப்பு காணாமல் போனது எல்லா தந்தைக்கும் இருக்கும் ஒரே கவலை தான் அவர்களை நல்முறையில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான்)

"சரி இப்பயாச்சும் வெளிய போலாமா.... இல்ல யாராச்சும் வந்து நம்மல கூப்பிடுவாங்கலா...??? "

"அப்படியெல்லாம் இல்ல பா வாங்க போகலாம்" என வெளியே வந்தவர்கள் எப்போதும் போல் வரவேற்பு முடிய மண்டபம் முதல் அனைத்தையும் மூவரும் கூற அனைவருக்கும் சம்மதமே....

அனைவரும் மதிய உணவை உண்டு தான் செல்ல வேண்டும் என சுகந்தி கட்டளை பிறப்பிக்க அனைவரும் உண்டு விட்டே புறப்பட்டனர்.

அங்கு.... மீடியா முன்னிலையில்.....

"சார் இந்த கேஸ் பத்தி சொல்லுங்க...ஏன் இந்த கேஸ் பத்தி எதுவுமே சொல்லல...."

"இந்த கேஸ் ரொம்ப சென்சிடிவானது.... கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல பொண்ணுங்களோட வாழ்க்கை கேள்வி குறி ஆயிடும்.... அதுதான் ரொம்ப கான்பிடென்சியலா மூவ் பண்ணினோம். போதை பொருட்கள் மூலமா பெண்களை தவறான முறையில் நடத்தி அவர்களின் வாழ்க்கைய சீரழித்து இருக்கானுங்க "

"சார் இந்த கேஸ் உங்களோட ஓல்டு கேஸ்சொட கண்டினியு மாறி இருக்கே.... "

"கரெக்ட் அதோட சம்பந்த பட்டது தான் ஆனா அது போதை பொருள் கேஸ் மட்டும் தான் இது அப்படி இல்லை.... அதுல ரொம்ப சந்தேகம் இல்லாத மூணு பேரும் ஒண்ணா சேர்ந்துதான் இந்த கேஸ் ல முக்கியமான குற்றவாளிகள் அதனோட இங்க இருக்கிற லோக்கல் அக்கியுஸ்ட் ரெண்டு பேர் என அஞ்சு பேர் மேல கேஸ் பைல் பண்ணி மூனு பேருக்கு ஆயுள் தன்னடையும் இன்னும் ரெண்டு பேருக்கு மூன்று வருட தண்டனையும் கேடச்சுருக்கு....."

"சார் அவுங்கனால உங்களுக்கு பெர்சனல ஏதாச்சும் பிராப்ளம் வந்ததா.... ஏன் கேக்குறேன் அப்படினா.... " என கேட்கப்பட்ட கேள்வியை இடையில் நிறுத்தியவன்

"எல்லா கேஸ்லையும் ஏதோ ஒரு பிராப்ளம் இருக்கும் இத பெருசாக்க வேண்டாம்...." என அங்கிருந்து நகர

"சார் லாஸ்ட் கொஸ்டீன்...." என பின் தொடர அவனோ மத்த பார்மால்டிக்காக SI மற்றும் அவனது டீம் உடன் சென்றான்.

"மாம்ஸ் என்ன ஆச்சு ஏன் அமைதியா வர்றீங்க.... "

"இல்ல குட்டிம்மா... இன்னைக்கு மாமா எல்லருகிட்டையும் நல்ல பேசுனாரு.... அதுதான் யோசிச்சேன்.... "

"அதுவா எல்லா அப்பாக்கும் இருக்கும் கவலை தான் ரெண்டு பொண்ணு பையன் இல்ல நல்ல இடத்தில கல்யாணம் பண்ணி தரணும் அங்க அவுங்க சந்தோசமா இருக்கணும்.... அப்படினு நிறையா நினைச்சுகிட்டு இருந்திருப்பாங்க.... இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வந்து சந்தோசமா நாங்களும் உங்களுக்கு பையன் தான் என சொன்னிங்க லா அதுதான் மனசுல உள்ள கவலை எல்லாம் போய் சந்தோசமா இருக்காங்க.... "

"உன்ன நா எண்ணமோனு நினைச்சேன் உனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு" என்றாள் அம்மு....

"உன்னை எல்லாம் கார்த்திகிட்ட புடுச்சு குடுத்துறுக்கணும் நா கூட்டிட்டு வந்தேன் பாத்தியா...." என நொந்து கொள்ள....

"என்ன மோனு பூச்சாண்டி கிட்ட புடிச்சு குடுக்குற மாறி சொல்லுற ஏன் அம்மு கார்த்தினா அவ்வளவு பயமா...???" என அஸ்வின் ஆர்வமாக கேட்க....

"அட நீ வேற அவனுக்கு நாங்க இப்ப பிளான் பண்ணி சேத்து வச்சதே தப்புன்னு நினைக்கிரோம் இதுல நீ வேற அவன இன்னும் கொஞ்ச நாள் சுத்த விட்டுருக்கணும்..!!!!" என்றான் சிவா.... சிரித்து கொண்டு... ( இவர் மட்டும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண போவாராம் கார்த்தி மட்டும் தனியா இருக்கணுமா....???)

"என்ன பிளான்...???" என அஸ்வினும் அபியும் கேட்க

அம்மு "இரண்டு வருசம் முன்னாடி வந்து என் கிட்ட சொன்னான்.... நா உன்ன லவ் பண்ணுறதா.... நா என்ன சொல்லுறது அப்படினு அமைதியா இருந்தேன்.... இத இவ கிட்ட சொல்லவும் மேடம் அவன் கிட்ட போய் நா சொல்லுறத கேட்டா அம்மு உனக்குத்தான் அப்படினு சொல்லிருக்கா அதையே சிவான்னாவும் சொல்ல மகியும் ஆமான்னு சொல்ல அவன் இவ சொல்லுரதை கேட்டு என்கிட்ட பேசாம என் வீட்டுல இருக்க எல்லார்கிட்டயும் பேசி அவுங்க எல்லாரையும் ஒத்துக்க வச்சு கடைசில நா ஓகே சொல்ல அவுங்களும் இவளுக்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்க... ஆனா என்னோட படிப்பு முடிந்ததுக்கு அப்பறம் தான் லவ் அப்படினு இவளே எல்லருக்கிட்டையும் சொல்லி இருக்கா அதுனால அவுங்களும் ஓகே சொல்லிட்டாங்க.... அப்பறம் தான் அன்னைக்கு நடந்தது தெரியுமே... உங்களுக்கு எல்லாருக்கும்..." என தனது காதல் கதையை சொல்ல

"வீடு வந்தாச்சு...." என மோனு காரை நிறுத்தி விட்டு இறங்க

"குட்டிம்மா சூப்பரா கார் ஓட்டுன வீட்டுக்கு வந்ததே தெரியல...." என அஸ்வின் புகழ

"அண்ணா அவ நீங்க எல்லாரும் வரவும் தான் இப்படி அவ கிட்ட தனியா காரை தந்து பாருங்க அப்ப தெரியும்..!!!" என்றாள் அம்மு.

"சரி விடு அம்மு..." என வீட்டிற்குள் அபியை அழைத்து கொண்டு உள்ளே நுழைய அஸ்வின்னும் சிவாவும் உள் நுழைந்னர்.

அங்கு பூஜா அவளது அப்பா அம்மா சுந்தரம் பிரியா மற்றும் மகாவின்  அண்ணன் மகளும் இருக்க பூஜாவும் அந்த பெண்ணும் உள்ளே சிரித்து கொண்டு நுழைந்த மோனுவை பார்த்து முறைத்தனர்.

ஏன்.......????!!!!
பூஜா வேலையா இருக்குமோ....???!!!
எதாச்சும் எடக்கு முடக்கா சொல்லி இருப்பாளோ...??!!





Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro