🌚12🌚

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

விடிகின்ற ஒவ்வொரு காலையும் ஏதோ ஒரு வகையில் புத்துணர்ச்சியை தான் நமக்கு அளிக்கின்றது. காலை வேளையை இரசிப்பதிலே ஒரு மனக்குளிர்ச்சி இருக்கின்றது.

பல உளவியலாளர்கள் கூட இதமான காலையை ரசிப்பது கூட மனஅமைதிக்கான ஒரு மாமருந்தாகவே கருதுகின்றனர். அதிலும் பச்சை பசேலென இருக்கும் காலைவேளை அனைத்திலும் சிறப்புக்குரியதாகும். ஆனால் இதற்கெல்லாம் சந்தர்ப்பமே அளிக்காமல் இன்று உலகில் காங்கிரீட் காடுகள் தான் எங்கும் சூழ காணப்படுகின்றதே தவிர  இயற்கையை இயற்கையாக இரசிக்க கிடைப்பதே மிகமிக அரிதாகும்.

உலக சூழல் வெப்பநிலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது என்றால் அதற்கு இந்த கொங்க்ரீட் காடுகளும் பெருமளவு பங்கு வகிக்கின்றன. பகல் வேளைகளில் சூரிய வெப்பத்தை உறிஞ்சிக்கொள்ளும் இந்த கொங்க்ரீட் ஆனது இரவு வேளைகளில் அதனை வெளியிடுகிறது இதனால் தான் இரவும் வேளைகளில் பல போது நகர்ப்புறங்களில் அதிக வெப்பத்தை உணர முடிகின்றது.

இதை எல்லாம் உணரமுடியாத படிதான் "பீகொக் அவென்யூ" அமைந்து காணப்படுகின்றது. இங்கு  இருப்போருக்கு எந்நேரமும் ஒரு குளுமை இருக்கும். சூழ பசுமையான காட்சிகளே தென்பட ஒவ்வொரு வீட்டை சுற்றியும் அழகான பச்சை பசேலென தோற்றமளிக்கக்கூடிய தோட்டம் என்று பார்க்கவே கண்களுக்கு ஒரு குளிர்ச்சி தான்.

அலுவலகம் செல்ல வேண்டிய அனைத்து ஆயத்தங்களையும் செய்து முடித்து விட்டு ரிதூவின் வருகையை எதிர்பார்த்தபடி அந்த வண்ணமயமான காலைக் காட்சியை ரசித்துக்கொண்டிருந்தாள் நிரு.

"போலாமா நிரு"
என்றபடியே வந்தாள் ரிதூ.

"ஹேய் என்னாச்சுடி எந்த யோசனையில இப்டி பார்த்துட்டு இருக்க?"
தான் வந்ததை கூட உணராமல் இருக்கும் நிருவைப் போட்டு உலுக்கினாள் ரிதூ.

"ஹாங்"
என்று விழித்து வினாடியில் சுதாகரித்துக்கொண்டவள்,
"வந்துட்டியா ரிதூ. வா போலாம்" என்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய போனாள்.

"இரு இரு"
என்று அவளது கையை பிடித்து நிறுத்தியவள்,
"உனக்கு என்ன ஆச்சு நிரு?
நானும் கொஞ்ச நாளா பார்த்துட்டு தான் வர்றேன் திடீர் திடீர்னு ஏதாவது உலகத்துக்கு போயிடற.
ஆரம்பத்துல நான் தான் எதுலயும் பிடிப்பில்லாம இருந்தன்னா இப்போ உனக்கு என்ன ஆச்சு?
சரியா பார்த்தா உன் அண்ணா தான் கனவுலகத்துக்கு போய் போய் வரனும்.
ஆனா நீ தான் இங்கே இருந்துட்டு அடிக்கடி கனவுலகத்துக்கு போய் போய் வர்ற?"
ஆரம்பத்தில் சீரியஸாக தொடங்கி கேலியாக முடித்தாள் ரிதூ.

"ஹா ஹா.
அது ஒன்னும் இல்ல ரிதூ. நா இங்க இருக்கேன் இன்னும் டூ மந்த்ஸ்ல கல்யாணம் அதான் அம்மா மட்டும் எப்டி சமாளிப்பாங்கன்னு தெரியல.
அததான் யோசிச்சுட்டு இருக்கேன்.
வன் வீக் லீவ் போடணும். அண்ட் உங்க எல்லாருக்கும் கல்யாணம் இருக்குற அந்த வீக் புல்லா லீவ் கேட்டு எடுக்கணும்" -நிரு

"என்னது நமக்கும் வன் வீக் முன்னாடியே லீவ் கேட்டு எடுக்க போறியா?" -ரிதூ

"ம்ம்ம் யெஸ்.
அதுக்கு ஏன் வாய பொலக்குற?" -நிரு

"இல்ல நா தெரியாம தான் கேக்குறேன், இது உங்கப்பா கம்பனியாடி?  நீ கேக்கும் போதெல்லாம் லீவ் தர்றதுக்கு?
அது பத்தாதுன்னு நம்ம நாலு பேருக்கும் சேர்த்தே லீவ் கேக்க போறதா வேற சொல்ற?
உனக்கு என்னடி நடந்திருக்கு?
உன் கற்பனை எல்லாம் நடக்கும்னு நெனக்குரியா?" -ரிதூ

"என் கற்பனை சாத்தியம் ஆகுறதும் இல்லாததும் அப்புறம் இருக்கட்டும் டார்லிங்.
உனக்கு லீவ் வாங்கி தந்தா நீ வருவியா மாட்டியான்னு மட்டும் சொல்லு பார்க்கலாம்?" - நிரு

"ம்ம்ம்ம்...
சித்தப்பா ஒகேன்னாருன்னா கண்டிப்பா வருவேன்." -ரிதூ

"அப்போ நீ வர்ற.
சித்தப்பா கிட்ட எல்லாம் நா எப்போவோ பேசிட்டேன் டார்லிங்.
மீதி மூணு பேர தான் சரிக்கட்டனும்.
ஏறு போலாம்."
என்றவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய பின்னால் ஏறிக்கொண்ட ரிதூ விசித்திர பிறவியொன்றை பார்ப்பது போல் நிருவை கண்ணாடி வழியே பார்த்தாள். ரிதூவின் பார்வையை உணர்ந்த நிரு சத்தமாகவே சிரித்தும் விட்டாள்.

வழக்கமாகவே நிரு கொஞ்சம் வேகமாகத் தான் வண்டியை செலுத்துவாள். இன்றும் அதே வேகத்துடன் வந்த இவர்கள், அலுவலக வளாகத்துக்குள் நுழைந்து வாகன தரிப்பிடத்திற்குள் நுழையும் போது நேஹாவின் ஸ்கூட்டியில் அவளுடன் வந்து சேர்ந்தாள் அஞ்சலி.

"ஹா ஹா"
என்று அவர்களைப் பார்த்து சிரித்தாள் நிரு.

"எதுக்குடி சிரிக்குற?"
முறைத்தபடியே கேட்டுக்கொண்டு இவர்கள் அருகில் வந்தாள் அஞ்சலி.

"இல்ல உங்க பாசப்பிணைப்பு கொஞ்ச நாள் காணாம போயிருந்தது இல்ல. அதான் சும்மா சிரிப்பு வந்துடுச்சு அஞ்சல்ஸ்"
என்று கூறி மேலும் சிரித்தாள் நிரு.

"என்ன நக்கலா?"

"நோ நோ.
சீரியஸா சொல்றேன்டி.
கொஞ்ச மாசமா நீங்க ரெண்டு பேரும் தான் முறைச்சிட்டு சுத்தினீங்கன்னு சொன்னா இந்த உலகமே நம்பாது தெரியுமா.
என்ன ஒரு பாசம். என்ன ஒரு அன்பு. என்ன ஒரு கருணை."
என்று நிரு சிரித்தபடி சொல்லும்போதே

"அடங்குடி"
என்று அவளை கிள்ளி வைத்தாள் அஞ்சலி.

"சரி சரி பாவம்னு விட்றேன்.
பொலச்சி போய்க்க." -நிரு

"அந்த பயம் இருக்கட்டும்." -அஞ்சலி

"சரி எப்போ தாம்பூலம் மாத்திக்க போறீங்க?" -ரிதூ

"அதெல்லாம் எப்போவோ மாத்திட்டோம் டார்லிங்.
கூடிய சீக்கிறாமாவே கட்டிமேளம் கட்டிமேளம் தான்."
கைகளை அடுத்தபடியே சொன்னாள் அஞ்சலி.

"இப்போவே கல்யாணப்பொண்ணு கண்ணமெல்லாம் செவக்குது நிரு. அங்கபாறேன்"
வேண்டும் என்றே ரிதூ சொல்ல

"போங்கடி"
என்று சிணுங்கினாள் நேஹா.

அன்றைய சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வெங்கடின் வீட்டில் தினமும் காலையில் தொற்றிக்கொள்ளும் பரபரப்பு இருக்கவில்லை.

வெங்கட்டின் மனைவி மதிவதனி அவருடைய காலத்து பாடலொன்றை முணுமுணுத்தபடி சமையலில் ஈடுபட்டிருக்க ஹாலில் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார் வெங்கட்.

"குட்மோர்னிங் பா."
என்ற படி அவருக்கருகில் வந்தமர்ந்தாள் அவர்களின் பாசமகள் ப்ரியா.

அவளுக்கு பதில் சொல்லாமல் கடிகாரத்தையும் அவளையும் மாறிமாறி பார்த்தபடி இருந்தார் வெங்கட்.

"ஹீ ஹீ.
எதுக்குப்பா இத்துன தடவ கடிகாரத்த பாக்குறீங்க.
நீங்க பாக்குற கேப்ல செக்கன் முள்ளு மட்டும் தான் நகருது." -ப்ரியா

"அது எனக்கு தெரியாம தான் பாக்குறேனாக்கும்"
என்று காட்டமாகவும் கொஞ்சம் சத்தமாகவும் சொன்னவரை கோபமாக கண்களை உருட்டி பார்த்தாள் அவரின் அன்பு மகள்.

மெதுவாக அவளை தனக்கருகில் வருமாறு அழைத்தவரிடம் சமயல் அறைப்பக்கம் பார்வையை வீசியவாறே  வந்தாள் ப்ரியா.

அவளது காதுக்கருகில் குனிந்தவர்,
"குட்டி.!
இவ்ளோ நேரம் கழிச்சு எந்திருச்சு இருக்க? அம்மா திட்ட போறாங்க.
அதுக்கு முன்னாடி நா கொஞ்சம் உன்னை திட்டினேன்னுவை உங்கம்மா கொஞ்சம் கம்மியா திட்டுவாங்க. அதுக்கு தான் இந்த பில்டப்.
கணக்குல எடுத்துக்காதடா" -வெங்கட்

சத்தம் வராமல் மெதுவாக சிரித்த ப்ரியா,
"ம்ம்..ம்ம்"
என்று தலையை ஆட்டினாள்.

"அம்மாஆஆ"
என்று குளித்து முடித்து வந்த வினீத் வேண்டும் என்றே கூக்குரலிட்டான்.

"என்னடா கண்ணா"
சமையல் அறையில் இருந்தே குரல் வந்ததே தவிர ஹாலிற்கு அவர் வரவில்லை.

"அப்பாவும் மகளும் ஏதோ சிதம்பர ரகசியம் பேசுற மாதிரி பேசிட்டு இருக்காங்கமா.
இங்க கொஞ்சம் வந்து பாருங்களேன்." -வினீத்

"நா அப்போவே நெனச்சேன் கண்ணா.
ஒரு நாளும் இல்லாம உங்கப்பா அவரோட செல்ல மகளுக்கு லெக்சர் பண்ண போறாரேன்னு.
இதுலையும் தில்லு முள்ளு தான்."
என்றபடி சமையல் அறையில் இருந்து வெளியே வந்து வெங்கட்டை முறைத்தாள் அவரது சரிபாதி.

"ஹஹ்ஹா.
விடு மதி.
சின்ன பொண்ணு" -வெங்கட்

"ஆமா நா ரொம்ப சின்ன பொண்ணு மதி.
பொலச்சி போகட்டும்னு விட்டுரு மதி." -ப்ரியா

"யாரு இவளா சின்ன பொண்ணு?
உங்க முன்னாடி சின்ன பொண்ணு மாதிரி எக்ட் பண்றாள் பா இவளையெல்லாம் நம்பாதீங்க. இவளோடு வாயிருக்கே இந்த உலகத்தையே வித்துருவாள் பா.
ஜான்சி ராணி" -வினீத்

"அண்ணாஆஆ.." -ப்ரியா

"யெஸ் பாசமலரே.
என்ன சொல்லணும்"
என்று ரஜனி ஸ்டைலில் அவள் புறம் திரும்பினான் வினீத்.

"உனக்கு எத்துனை தடவ ஜான்சி ராணி சொல்லாதேன்னு சொல்லிருக்கேன்.
உனக்கு..."
என்று அவனை அடிப்பதற்கு விரட்டிக்கொண்டு ப்ரியா ஓட அவளிடம் இருந்து தப்பிப்பதற்காக வாயல் கதவின் பக்கம் வினீத் ஓடவும் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

சட்டென்று நின்றவன் திரும்பி ப்ரியாவிடம் வாயல்கதவை கண் அசைவினாலே காண்பித்தவன் அவர்களின் விளையாட்டுக்கு ஐந்து நிமிட அவகாசத்தை செய்கையாலே கேட்டு வாங்கிக்கொண்டு கதவின் பக்கம் சென்றான் வினீத். கதவை திறக்க அங்கே ஒரு வயதானவர் இருந்தார். புருவங்கள் முடிச்சிட அவரை ஒரு நொடி ஆராய்ந்தவன், அவரது பார்வை தன்னை உரிமையுடன் தலை முதல் கால் வரை ஊடுருவதைப் பார்த்தான்.

வெள்ளைநிற ஸ்லீவ்லஸ்  டீசேர்ட்டும் கருநீல நிற ஷார்ட்ஸும் அணிந்துகொண்டு தன் முன்னால் நின்றுகொண்டிருக்கும் ஆறடி இளைஞனை பார்வையாலே அளவெடுத்து முடித்தவர் இப்பொழுது அவனது முகத்தில் தன் பார்வையை நிறுத்தி சிநேகமாக புன்னகைத்தார்.

"இது கொஞ்சம் உங்களுக்கே ஓவரா தெரியலையா தாத்தா"
என்று மனதிலே அவருடன் மென்மையாக கடிந்துகொண்ட வினீத்
"நீங்க...?"
என்று கேட்டான்.

பதில் சொல்லாமல் புன்னகைக்கும் அவரை பார்த்து பதிலுக்கு தானும் புன்னகையை உதிர்த்தவன்,
"உள்ள வாங்க தாத்தா"
என்றழைத்தான்.

"இப்போவாச்சும் உள்ள கூப்பிடியே ராசா."
என்று வினீத்தை வாஞ்சையோடு பார்த்தவர் தன் இடது பக்கம் திரும்பி "வாங்க உள்ள போலாம்.
என் பேரன் உள்ள கூப்பிட்டுட்டான்"
என்றான்.

அந்த வயதானவரை ஒருநொடி விசித்திரமாக பார்த்துவிட்டு எட்டி அவர் பார்த்த புறம் பார்த்து கண்களை அகல விரிக்கவும் வெங்கட் அவ்விடத்திற்கு வரவும் சரியாக இருந்தது.

வந்திருக்கும் நபரை அடையாளம் கண்டுகொண்ட வெங்கட்டுக்கு ஏனோ வார்த்தைகள் வர மறுத்தன. சுமார் இருபத்தேழு வருடங்களாக தொடர்பு அருந்துபோயிருந்த ஒரு உறவு தன் வீட்டு வாசலின் முன் வந்து நின்றிருக்கிறார் என்றார் யாரால் தான் பேசமுடியும். வெங்கட்டின் கண்கள் கூட கலங்கின.

உள்ளே திரும்பியவர்,
"மதி மதி"
என்று அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலுமாக தன் மனைவியை அழைத்தார்.

"எதுக்குங்க இப்டி சத்தம் போட்..."
வந்தவளின் வார்த்தைகள் வாசலில் நின்றிருக்கும் நபரை பார்த்ததும் அப்படியே நின்றது.

"அப்பா"
என்ற படியே வாசலுக்கு ஓடியவள் அவரது கால்களில் விழப்போக அவளை தடுத்து நேராக நிறுத்தினார்.
"உள்ள வாங்க பா"
என்று தழுதழுத்த குரலில் அழைக்க, பலவருடங்கள் கழித்து தன் மகளைப் பார்க்கும் தந்தையான அவரின் கண்களும் கலங்கியிருந்தது.

"உன் அண்ணனும் வந்திருக்கான் குட்டி"
என்று ஏனையவரகள் நின்றிருக்கும் இடத்தை காட்ட, சந்தோஷத்தில் மதியின் கண்களில் இருந்து கண்ணீரே கொட்டியது.

வெங்கட் ஓடிப்போய் மதியின் அண்ணனான தன் ஆருயிர் நண்பனைக் கட்டிக்கொள்ள அவருக்கு அருகில் இருந்த வித்யா மற்றும் அவளது அண்ணன் இருவரும் சந்தோஷப் பார்வையை பரிமாற்றிக்கொண்டனர்.

ஆனால் பாவம் ப்ரியாவும் வினீத்தும் தான் ஆரம்பத்தில் குழம்பிப்போய் ஏதோ ஒரு மாதிரியாக இவர்களுக்கு இடையிலான உறவை அறிந்து கொண்டனர். வினீத்திற்கு வித்யாவின் உறவு இன்னும் சரியாக
புரியாமல் இருந்தாலும் ப்ரியா கூறியதன் விளைவாக அறிந்து கொண்டான். ப்ரியா வித்யாவுடன் தன் அண்ணனை கோர்த்து விட்டு அவனிடம் இருந்து முறைப்பை பரிசாக பெற்றுக்கொள்ளவும் மறக்கவில்லை.

இவர்களின் தாத்தா தன் பேரக்குழந்தைகளுக்கு தங்கள் யாரையுமே அறிமுகப்படுத்தி இல்லை என்று மதியுடன் உரிமையுடன் கடிந்து கொள்ளவும்  மறக்கவில்லை.

அதோடு தன் பேத்தியான வித்யாவின் பார்வை தன் பேரனான வினீத்திடம் அடிக்கடி போய் மீள்வதனையும் அவ்வளவாக கவனிக்காமலே கணித்தும் விட்டிருந்தார். அனுபவங்கள் அவரை அந்தளவு வளர்த்து விட்டிருந்தது. இந்த முறை அவரது பார்வை பேத்தியின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற கோணத்தில் தான் இருந்தது.

வினீத் வித்யாவின் அண்ணனோடு மிகவும் சுவாரஸ்யமாக கதைத்துக்கொண்டிருக்க வித்யா ப்ரியாவுடன் கதைத்துக்கொண்டிருந்தாள். ஆக மொத்தத்தில் ஒரு காதல் திருமணத்தால் பிரிந்திருந்த குடும்பம் இன்று எவ்வாறோ சேர்ந்திருக்கின்றது. அங்கு எந்த மனக்கசப்புக்களும் இன்றி கலகலப்பு மட்டுமே நிறைந்திருக்க சிரிப்பொலி அவ்வீட்டையே நிறைத்திருந்தது. திடீரென கேட்ட குக்கரின் விசில் சத்தத்தில் சிரிப்பொலி ஒருநொடி நின்றாலும் மறுநொடி மீண்டும் ஆரம்பித்திருந்தது.

விஜய்யின் வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் அழகான தோட்டம்.
விஜய் ஏதோ தீவிர சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருந்தான். இவ்வளவு நேரம் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்த அவனது பையனும் பொண்ணும் தங்களின் பேச்சை தந்தை கவனிக்காமல் இருப்பதை பார்த்து குழம்பித்தான் போயிருந்தனர்.

கணவனையும் பிள்ளைகளையும் பார்த்தபடியே அனைவருக்குமான மாலை நேர டீயை எடுத்துக்கொண்டு வந்து அங்கிருக்கும் கொங்க்ரீட் கதிரையில் அமர்ந்தாள் தர்ஷினி.

"அம்மா"
என்றழைத்த அவர்களின் மகன் கண்களாலே தன் அப்பாவை அம்மாவுக்கு காட்டினான். பதிலுக்கு அவனைப் பார்த்து புன்னகைத்து கண்சிமிட்டி வைத்தவள், விஜய்யின் தோளைப்பிடிக்க அப்பொழுதுதான் தன் யோசனையில் இருந்து விடுபட்டான் விஜய்.

"ஹைய் அப்பா இந்த உலகத்துக்கு வந்துட்டார்"
என்று பிள்ளைகள் இருவரும் குதூகலிக்க இந்த முறை தர்ஷினியை முறைத்தான் விஜய்.

"எதுக்குங்க என்ன முறைக்குறீங்க?" -தர்ஷினி

"அதானே ஏம்பா அம்மாவ முறைக்குறீங்க?" -மகன்

"நீ எதுக்குணா அப்பாவையே கேள்வி கேக்குற?" -மகள்

"ஹஹ்ஹா"
என்று இவர்கள் மூவரின் கேள்வியிலும் சிரித்தான் விஜய்.

"அய்.
அப்பா சிரிச்சிட்டார்ணா. நம்ம வந்த வேலை முடிஞ்சுது.
வா நாம போய் நம்ம விளையாட்ட கண்டினிவ் பண்ணலாம்."
என்று ஒரே இழுப்பில் டீயை குடித்து முடித்தவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தனர்.

அவர்கள் செல்லும்வரை அவர்களையே இருவரும் சிரித்தபடி பார்த்திருக்க அவர்கள் சென்றதும் தர்ஷினி தான் பேச்சை தொடர்ந்தாள்.

"என்ன யோசனை சார். ரொம்ப பலமா இருக்கு" -தர்ஷினி

"இல்ல...
உன்ன எப்டி கலட்டிவிடலாம்ணு யோசிச்சுட்டு இருக்கேன்.
எந்த ஐடியாவுமே சிக்க மாட்டேங்குது தர்ஷு.
ம்ம்ம். உனக்கேதாவது தோணுதா?"
என்று சீரியஸாக கேட்டவனைப் பார்த்து முறைப்புக்கு இடையிலும் சிரித்து வைத்தாள் தர்ஷினி.

"என்னையே உங்களால சமாளிக்க முடியல.
இதுல என்ன கலட்டி விட்டுட்டு இன்னொன்னு பிடிக்க போறீங்களாக்கும்.
அது தான் இந்த ஜென்மத்துக்கும் நடக்காதுன்னு தெரியுமில்ல. ஸோ எனார்ஜிய வேஸ்ட் பண்ணாதீங்க."
என்றவள் விஜய்யின் தோளோடு தோள் இடித்தாள்.

"ஹஹ்ஹா"
என்று தர்ஷினியின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன் சிறிது இடைவெளி விட்டு,

"இல்ல தர்ஷுமா நாம செய்ய போறத ரிதூ எப்டி எடுத்துப்பாளோன்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன்டா.
அப்பா அம்மா உயிரோட இருந்தும் அவளுக்குன்னு இருக்குறது நாம மட்டும் தான். அதான் யோசிச்சுட்டு இருந்தேன்." -விஜய்

"அவளும் நம்ம பொண்ணு போலதானேங்க.
நாங்க எது செஞ்சாலும் அவ நல்லத்துக்கு தான் செய்றோம்னு அவ புரிஞ்சிக்காமலா இருப்பா?
எது எப்டியோ எனக்கு அவமேல இருக்குற நம்பிக்கையை விட நிரு மேல கொஞ்சம் அதிகமாவே இருக்குதுங்க.
நிரு எப்டியும் ரிதூவ சரிக்கட்டிடுவாங்க.
நீங்க கவலைய விடுங்க."

"நிரு இருக்கும் வர ரிதூவ விட்டுற மாட்டா தான்.
ஆனாலும் ரிதூ பக்கமும் பார்க்க
வேணாமா? அதான் தரஷு ஒரே யோசனையா இருக்கு.
ஒத்துக்குவாளான்னு தான் தெரியல" -விஜய்

"கண்டிப்பா அவ ஒத்துக்குவா.
அவ இப்போ எல்லாம் ரொம்ப மாறிட்டாங்க."

"அதனாலதான் தர்ஷு நா இதுக்கு ஒத்துக்கிட்டதே.
அவ லைஃப் சிறப்பா அமையனுங்குறது தான் இப்போதைக்கு என்னோட வேண்டுதலே."
சோகமாக கூறும் கணவனின் கையை அழுத்திக்கொடுத்து விஜய்க்கு ஆறுதல் அளித்தாள் தர்ஷினி.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro