🌚14🌚

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சில தவறுகள் காலத்தால் மறக்கடிக்கப்பட்டு விடும். ஆனால் தவறு செய்தவர்களால் தாங்கள் செய்த தவறை தங்கள் மரணம் வரை மறக்க முடியாது ஆகும்.

அஜய் - ராணி தம்பதியினரும் அவர்கள் குடும்பத்தாரும் ரிதூவுக்கு செய்த துரோகத்தை அந்த கிராமமே மறந்திருக்கலாம் ஆனால் அவர்களால் அதனை மறக்க முடியவேயில்லை. மறக்கவும் மாட்டார்கள். அவர்களை பொறுத்த வரையில் ரிதுர்ஷிகா யாராலோ திருவிழாவில் கடத்தப்பட்டு விட்டாள். அதுவும் தாங்கள் செய்த தவறினால் என்று இன்று உணர்ந்திருக்கின்றனர். காலம் கடந்து கிடைத்திருக்கும் ஞானம்.

ஆனால் இதற்கான பரிகாரம் என்னவென்று தெரியாமல் ஒவ்வொரு ஆலயம் ஆலயமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தனரே தவிர வேறு என்ன செய்வதென்று அவர்களுக்கு புரியவே இல்லை. இவ்வாறு இருந்தவர்களை தான் நவநீதன் சந்தித்தான். அவர்கள் மடமையினாலும் அறியாமையினாலும் பறிகொடுத்த அவர்களது மகள் தொடர்பான ஆதி முதல் அந்தம் வரையான அனைத்து தகவல்களையும் கூறினான்.

அந்நேரத்தில் நவா அவர்களுக்கு, தங்கள் மகளை அறிய கடவுளால் அனுப்பப்பட்ட தூதனாகவே தெரிந்தான். அதன் பின் ஒரே ஒரு தடவை விஜய் தன் குடும்பத்தாரை சந்தித்தான். பல வருடங்களுக்குப் பின். அதுவும் அவர்களின் மனமாற்றத்தால். இல்லாவிட்டால் நிச்சியமாக நவாவோ விஜய்யோ அவர்களை சந்தித்திருக்கமாட்டனர். அவர்களின் மாற்றம் தெரியவராமலிருந்தால் நவா தன் மனைவிக்காக அவர்களை சந்திக்க முயற்சி எடுத்திருந்தாலும் விஜய் அதை தடுத்திருப்பான்.

கடவுளின் ஏற்பாடு, இன்று அந்த மொத்த குடும்பமும் அவர்களது தவறை உணர்ந்திருக்கின்றனர். அதனால் தான் இன்று விஜய், அவனது குடும்பம் மற்றும் ரிதூ அவர்களுடன் இணைந்திருக்கின்றனர்.

ரிதூவின் குடும்பத்தவர்கள் அனைவருக்குமாக திருமணத்திற்கும்  அதற்கு முந்தைய நாள் நிச்சியதார்த்தத்திற்குமாக நவா பத்திரிகை வைத்து முறைப்படி அழைப்பு விடுத்திருந்தான். அவர்கள் அனைவருமாக பெங்களூர் வந்து தங்குவதற்குமான ஏற்பாடுகளையும் நவா செய்திருந்தாலும் அவற்றை அவர்கள் மென்மையாக தடுத்து அவர்களாகவே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.

உண்மையில் அவர்கள் யாரும் இயல்பிலேயே கெட்டவர்களோ மனிதாபிமானம் அற்றவர்களோ கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களை அவ்வாறு ஆக்கிவிட்டது. இதுவே உண்மையும் ஆகும். மனிதன் மட்டுமே தவறும் செய்து திருந்தவும் செய்கின்றவன் அல்லவா.

ரிதூவின் குடும்பத்தவர்கள் நவாவின் வீட்டுக்கு வரும் போது நவா அங்கிருக்கவில்லை. அவன் கல்யாண வேலைகளில் மூழ்கியிருக்க, அங்கிருக்கமுடியாத சூழ்நிலை. ரிதூவிடம் ஏற்கனவே விஜய் இவர்களது வருகை தொடர்பாக எடுத்துக்கூறியிருக்க அவள் எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை. "சரி" என்ற ஒற்றை வார்த்தை தான்  விஜய்க்கு ரிதூவிடம் இருந்து பதிலாக வந்தது.

ஆனால் அவர்கள் அனைவரும் வந்ததும் அழுது புரண்டு அந்த இடத்தையே இல்லை என்றாக்கி விட்டாள் ரிதூ.  அவளது தாயும் தந்தையும் அவளது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கப்போக அவர்கள் இருவரையும் தடுத்தவள் இருவரையும் கட்டிக்கொண்டு தன்னால் முடியுமான வரை அழுது தீர்த்தாள். அங்கிருந்த அனைவரின் கண்களுமே கண்ணீரால் மூழ்கின.

இத்தனை வருட காலம் அவள் அனுபவித்த துன்பங்கள் அனைத்தையும் அவள் மட்டுமே முழுமையாக அறிவாளே தவிர வேறு எவருமே அறிய மாட்டனர்.

அவளோடு சேர்ந்து அஜய்யும் ராணியுமே அழுது தீர்த்தனர். அழுது அழுது ஓய்ந்து போனவளை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு ராணி அவளது அறைக்கு செல்ல, தன் வாழ்வில் முதன் முதலாக   அம்மாவின் மடியில் தலை வைத்து நிம்மதியாக உறங்கிப்போனாள் ரிதூ.

இப்பொழுது அவளது முகத்தில் ஒரு தெளிவு, நிரந்தரமான தெளிவு. தன் வாழ்வில் அனைத்துமே கிடைத்து விட்டது போன்ற ஒரு உணர்வில் நிம்மதியாக தன் அன்னையின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தாள் ரிதூ.

எழுந்தவளுக்கோ உடனடியாக நவாவை பார்த்து அவனை கட்டியணைத்து முத்தம் கொடுத்து நன்றி சொல்ல வேண்டும் போல் இருந்தது.  அவனது அறைக்கதவு அரைவாசி மூடியிருக்க இலேசாக  தட்டிவிட்டு உள்ளே போனவளை வெறும் அறையே வரவேற்றது.

அவன் இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. நிச்சியதார்த்தத்திற்கு முன் அவனை சந்திக்க வேண்டும் என அவள் நினைத்தாலும் அதற்கு வாய்ப்பே கிட்டவில்லை. நவாவை நினைத்து அவளே பெருமைப்பட்டுக்கொண்டாள். அவனை தன் சரிபாதியாக பெற என்ன புண்ணியம் செய்தேன் என்று அவளே அவளுக்குள் கேட்டு சற்று குழப்பிக்கொள்ளவும்  தவறவில்லை.

நவாவின் வீடே கலைகட்டியிருந்தது. வீட்டில் நடக்கும் முதல் விசேடம். நிகிழனிக்கோ மிகவும் மகிழ்ச்சி. தன் மகனை நினைத்து ஒரு பக்கம் பூரிப்பு. தன் காதல் மனைவியின் மீது அவன் வைத்திருக்கும் அன்பு என்றென்றும் அவர்கள் இருவர் மத்தியிலும் நிலைத்திருக்க வேண்டும் என்று மனதார பிராத்தித்துக்கொண்டார்.

சனாவும், உறவினர்கள் நண்பர்கள் என்று வீடே கலைகட்டியிருக்க உல்லாசமாக வலம்வந்து கொண்டிருந்தாள். இவ்வளவு இருந்தும் மனதின் ஓரத்தில் நிகில் இல்லாதது அவளை ஆஃப் மூடிற்கு அடிக்கடி கொண்டு சென்று கொண்டிருந்தது.

வீட்டின் கடைக்குட்டியோ எந்த கவலைகளும் இன்றி குஷியாக அலைந்து கொண்டிருந்தாள். நாளை அவளது அண்ணனுக்கு கல்யாணம் என்பது மட்டுமே அவள் மனதில் அப்பொழுது இருந்தது. அனைவரையும் விட சின்னவள் இவளே அதிக சந்தோஷத்தில் இருந்தாள்.

அன்று மாலை நிச்சயதார்த்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க இதற்கு அவ்வளவாக வெளியாட்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை. மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

நவாவை சூழ அவனது நண்பர்கள் இருக்க ரிதூவை சூழ்ந்து கொண்டு இவளது தோழிகள் நால்வரும் சனாவின் தோழிகள் பலரும் இருந்தனர். அடிக்கடி அவனது நண்பர்கள் "சிஸ்டர் சிஸ்டர்" என்று அழைத்து நவாவோடு இவளை கோர்த்துவிட பலபோது சிரித்தும் சில போது விழித்தும் வைத்து எப்படியோ சமாளித்துக்கொண்டாள் ரிதூ.

இவர்கள் இருவரையும் அப்படி இப்படி என்று போட்டோ கிராஃபர் வேறு பாடாய் படுத்தி எடுத்திருந்தார்.

நிச்சியதார்த்தம் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. ரிதூவுக்கு நவாவுடன்  ஒழுங்கான முறையில் பேசுவதற்காவது சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. அவனுடன் பேச வேண்டும் என்ற ஆவல் அவ்வாறே இருக்க இரவு உடைக்கு மாறி தூங்கவும் தயாராகிவிட்டாள் . அதிகாலையிலேயே முகூர்த்தம் இருக்க அனைவரும் உறங்கியும் போயினர்.

கட்டில் அங்கும் இங்கும் புரண்டு தூக்கத்தை துணைக்கு இழுக்க முயன்ற ரிதூவிடம் நான் வருவேனா என்று முரண்டு பிடித்துக்கொண்டிருந்தாள் நித்திராதேவி. அதே நேரம் நவாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் விடாமல் அவளை ஆட்டுவித்துக்கொண்டிருந்தது.

"இவ்வளவு நேரம் அவன் கூட தானே இருந்தாய்?" மனசாட்சி இவளிடம் கேலியாக கேட்க. "நா அவரோட முகத்த சரியா பார்க்க கூட இல்ல தெரியுமா?" மனசாட்யிடம் மல்லுக்கு நிற்கவே தயாராகியிருந்தாள் ரிதூ.

நேரம் தான் கடந்ததே தவிர இவளுக்கு தூக்கம் தான் வரவே இல்லை. மெதுவாக தன் அறையை விட்டு வெளியே வந்த ரிதூ நவாவின் அறையை நெருங்கி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வேகமாக உள்ளே நுழைந்து கதவை அடைத்தாள்.

பூனை நடை போட்டு கட்டிலை நெருங்கியவள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை மிக நெருங்கி அமர்ந்து கொண்டு அவனது அடர் கேசம் மறைத்திருந்த விரிந்த நெற்றியில் அழுத்த இதழ் பதித்தாள்.

பாவம் ரிதூ. சிறிய சத்தத்திலும் நவாவுக்கு தூக்கம் கலைந்து விடும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

இவள் நெருங்கி அமரும் போதே தன்னவளின் மென்மையான உரசலில் அவனது தூக்கம் கலைந்திருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அப்படியே படுத்திருந்தான்.

குனிந்து அவன் நெற்றியில் இதழ் பதித்தவள் மென்மையாக அவனது தலையை கோதிவிட்டாள். அவன் தலைமுடியை கோதிவிடும் போதே ஏதோ ஒரு புதுவிதமான உணர்வு இதமாக தாக்கிச்செல்வதை  நன்றாக உணர்ந்தாள் ரிதூ. அப்படியே அவனது சிகைக்குள் கரத்தை விட்டு கோதிக்கொண்டே இருக்க வேண்டும் போல் எழுந்த உணர்வை தட்டி அடக்கிக்கொண்டவள் எழப்போக, இவ்வளவு நேரம் ரிதூவின் செய்கைகளை ரசித்துக்கொண்டிருந்தவன் சட்டென்று அவள் கையை பிடித்து இழுத்து தன் மேல் விழச்செய்து நொடியில் அப்படியே அவளை படுக்கையில் புரட்டினான்.

நவாவின் முழு உடலும் ரிதூவின் மேல் இருக்க சற்றுமே எதிர்பார்க்காத தன்னவனின் இந்த திடீர் தாக்குதலில் ஒரு நொடி அதிர்ந்து விழித்தவள் மறுநொடியே தன் மீது மின்சாரம் பாய்ச்சி மேனி எங்கும் சூடாகுவதைப் போல் உணர்ந்தாள்

அவளையே பார்த்திருந்தவன் அவளது மாற்றங்களை எல்லாம் தன்னுள் பதித்துக்கொண்டாலும் எதுவும் நடவாதது போல் அவள் இடையில் பதித்திருந்த கையை மேலும் இறுக்கிக்கொண்டவன் விழிமூடி அசையாது அப்படியே இருந்தான்.

இவனது அதிரடியில் நாவு வரண்டிருக்க அதனை சரிப்படுத்திக்கொண்டவள்,

"ப்.. ப்ளீஸ் நீதன்.
நா.. நா..ன் போகணும்"
ஏனோ வார்த்தைகள் தந்தியடித்தபடியே தான் வெளியே வந்தது அவளுக்கு.

அவளது குரலில் விழிகளை வேகமாக திறந்து உற்சாகத்துடன் உல்லாசமாக விசிலடித்தவன்,

"வாவ் நீதன்...!
நேம் நல்லா இருக்குஇல்ல பேபி.
என்ன யாருமே இந்த நேம்ல கூப்பிட்டதே இல்ல பேபி"
காதல் போங்க அவனது குரல் வெளியே வந்தது.

"ஆனாலும் நீ "மாமா"ன்னு கூப்பிடனும்னு தான் எனக்கு ஆசையா இருக்கு.
உன் விஷ் பேபி. எப்டி தோணுதோ அப்டியே கூப்பிடு"
அவள் முகம் பார்த்து சிறுப்பிள்ளைக்கு கூறுவதைப் போல் கூறினான் நவா.

அவள் இருக்கும் நிலைமையில் இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் "ம்ம்ம்ம்" கொட்டி வைத்தாள். அவள் பாடு அவளுக்கு அல்லவா தெரியும்.

"என்ன பேபிமா 'ம்ம்ம்' கொட்டுற.
எனக்கென்னமோ பேசாம இன்னைக்கே நம்ம வெடிங்க வெச்சுருந்திருக்கலாம்னு தோணுது."
குரலில் குழைவில்லாமல் சீரியஸாக சொன்னவனின் பார்வையில் காதலையும் தாண்டி எதையோ கண்டாள் ரிதூ.

இதற்கு மேல் இங்கிருந்தால் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்தவள் மீண்டும்
"நான் போனும் நீதன்"
என்றாள்.

"ஓஓஹ் மறந்துட்டேன் பாரு,
நீ போகணும் இல்ல பேபி."
என்றவன் மந்தகாசமாக புன்னகைத்தான்.

"ஓகே இங்க ஒன்னே ஒன்னு கொடுத்துட்டு சமத்து பிள்ளையா போய்க்க.
மீதியை நான் சரியான டைம்க்கு வாங்கிக்கிறேன்"
என்று தன் உதட்டை தடவிய படி கூலாக கூறியவன் ரிதூவைப் பார்க்க, அவளவனோ வேகமாக  தனக்குள் திட்டம் தீட்டி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டாள்.

அவளையே பார்த்திருந்தவன்,
"என்ன பேபி.
புருஷன் கேக்குறேன். நீ உன் பப்பி பேஃஸை காமிச்சு உல்ட்டா போட்டு எஸ்கேஎப் ஆகிறலாம்னு பாக்குறியா?

நோ பேபி.

சிவனேன்னு தூங்கிட்டு ஜாலியா உன் கூட டூயட் பாடிக்கிட்டு இருந்த என்ன நீ தானே  உசுப்பேத்தி விட்டிருக்க. ஸோ ஒன்னே ஒன்னு."
என்று தன் கன்னம் கிள்ளி அழகாக கேட்பவனைப் பார்த்து தன்னை தொலைத்தவள், போட்டிருந்த திட்டம் எல்லாம் காணாமல் போயிருக்க இப்போ என்ன செய்யலாம் என்று தீவிர சிந்தனையில் இறங்கினாள் ரிதூ.

"ஓஓஹ் புருஷன் இல்ல.
தாலிய காணோமே மாமா"
என்று தன் கழுத்தை தடவிப்பார்த்தவள் "நீதன்" இல் இருந்து "மாமா" வுக்கு சென்றிருந்தாள்.

"பேபியா இருந்தாலும் இந்த விஷயத்துல கொஞ்சம்  விபரமா தான் இருக்கடா"
என்றபடி அந்த பெரிய கட்டிலின் தலைப்பகுதியை ஒட்டினாற் போல் இரு பக்கத்திலும் போடப்பட்டிருக்கும் கட்டிலின் உயர்த்திற்குட்பட்ட விதத்தில் இருக்கும் பக்க கபோர்ட்களில் தன் பக்கம் இருக்கும் கபோர்டின் இரண்டாவது ட்ராவரை திறந்தவன் அதில் இருந்த அவனது பிளாட்டினம் மாலை ஒன்றை எடுத்து அவள் தலையை சற்று உயர்த்தி போட்டு விட்டு அவளைப் பார்த்து "இப்போ எப்டி வசதி" என்ற தோரணையில் கண்ணடித்தான்.

"இங்க ஒண்ணும் வைக்களையே..."
நெற்றி வகிட்டை காட்டினாள் ரிதூ.

"அட ஆமால்ல பேபி.
இப்போ என்ன பண்ணலாம்?" என்று போலியான யோசனையோடு தன் நாடியை தடவினான் அவளவன்.

"ஒன்னும் வேணாம். நீங்க இப்டியே இருங்க.
நான் இப்டியே தூங்க போறேன் என்றவள் கண்களை இறுக மூடிக்கொள்ள.

"வாட்!
இங்கயே தூங்க போறியா."
அவனது குரலில் இருந்தது  உண்மையான அதிர்ச்சியா இல்லாவிட்டால் போலியாக அதிர்வது போல் நடிக்கிறானா என்று எதுவும்  பிடிபடவில்லை ரிதூவுக்கு.

கண்களை திறக்காமல்
"ம்ம்ம்ம்"
என்று பதிலாக முனங்கினாள் ரிதூ.

"ஓகே பாஃய்ன். நானும் இப்டியே தூங்கிக்கிறேனே "
என்றவன்,
அவள் மேல் முழுவதுமாக சாய ரிதூவின் மேனி ஒரு வினாடி அதிர்ந்து அடங்கியது.

அதை உணர்ந்த நவா மர்மப்புன்னகையோடு தலை உயர்த்தி அவள் முகம் பார்க்க இரவு விளக்கொளியிலும் அவளது முகம் தன்  செம்மையை அவனக்கு காட்டிக்கொடுத்தது. அப்படியே சற்றே நகர்ந்து அவளது  உச்சியில் இதழ் பதித்தவன்.
"இதுக்கே இப்டி ஷாக் ஆகினா எப்டி பேபி. இது வெறும் மில்லி செக்கன் டெய்லர் பேபி. இன்னும் மெய்ன் பிக்சர் எவ்ளவோ இருக்கு."

சிரித்தபடி கூறிக் கண்ணடித்தவன், அப்படியே அவளை மேல்புறம் புரட்டியிருந்தான்.

இவனுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா? ஒரு நிமிடம் விழிவிரித்தாலும் எப்படியோ தன் திட்டம் ஏதோ ஒரு வகையில் வெற்றியடைந்ததை நினைத்து உள்ளூர சிரித்துக்கொண்டவள் பட்டும் படாமல் அவன் கன்னத்தில் முத்தம் இட்டு வேகமாக எழுந்து "டியூப் லைட் மாமா நீ" என்று விட்டு அதே வேகத்தில் அறையை விட்டே ஓடியிருந்தாள்.

"பேபிமா நீ ரொம்ம்ம்ம்ப ரொம்ப தேறிட்டடி.
இன்னேக்கி தப்பிச்ச இல்ல.
நாளைக்கு இருக்கு பேபி உனக்கு கச்சேரி"
கொஞ்சம் சத்தமாகவே கூறியவன் அவளது நினைவுகளில் சிரித்தபடி அப்படியே உறங்கிப் போனான்.

"நவநீதன் ராகவ் வெட்ஸ் ரிதுர்ஷிகா" என்று இலத்திரனியல் திரையில் பொன் எழுத்துக்களால் மின்னி வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்த அந்த பெரிய மண்டபமே வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்டிருக்க நவாவின் உறவினர்கள், நண்பர்கள், அவன் தந்தையின் நண்பர்கள், தொழில்முறை நண்பர்கள், சிலபல பெரியவர்கள், ரிதூவின் பக்க உறவினர்கள், சனா மற்றும் நிஷ்மிதாவின் நெருங்கிய தோழிகள் என பலரும் வந்து சேர்ந்திருக்க கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.

அஜய், விஜய், நவாவின் மாமா ரகு, மற்றும் அவன் சின்ன சித்தப்பா ஆகியோர் வருபவர்களை வரவேற்க,  நிகிழினியும் ராணியும் இவர்களோடு இணைந்தவாறு சற்றே உள் இருந்து வருபவர்களை  வரவேற்றுக்கொண்டிருந்தனர்.

சரியாக அப்பொழுது இவர்களை நோக்கி  வந்து கொண்டிருந்த நபரை பார்த்து நவாவின் சின்ன சித்தப்பா ஒரு நிமிடம் அவரையே முறைத்து பார்த்தாலும் மறுநொடி என்ன நினைத்தாரோ ஏனையவர்களோடு சேர்ந்து அவரை வரவேற்றார்.

வந்தவர் வேறுயாருமல்ல நவாவின் பெரிய சித்தப்பா தான்.
அவர் மனைவி நிகிழினியைப் பார்த்ததும் "அக்கா" என்று கட்டியணைத்து கண் கலங்கினார்.  ஏனோ நிகிழினிக்கும் அவளை பார்த்து முகம் சுழிக்கத் தோன்றவில்லை. நிகிழினி அவ்வாறு செய்யக்கூடியவரும் கிடையாது.

பதிலுக்கு தன் உடன்பிறவா தங்கையை தானும் அணைத்துக்கொள்ள அவரது கண்களும் ஏனென்று தெரியாமலே கலங்கியது.

உள்ளே ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு எதையோ எடுக்க வேகமாக சென்று கொண்டிருந்த அஞ்சலி யார் மீதோ மோதி நின்றாள்.

"சா..."
இது அஞ்சலி.

"சா..."
என்று அஞ்சலியோடு மோதியவனும் சாரியை முடித்து வைக்காமல் ஒருவர் இன்னொருவரைப் பார்த்து முறைத்து வைத்து

"நீயா?
பார்த்து வரக்கூடாது"
என்று இருவருமே ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.

மோதிய பெயர் தெரியாதவன் அஞ்சலியைப் பார்த்து புருவங்கள் இரண்டையும் மேலேற்றி
"நீ என்ன இங்க பண்ணிட்டு இருக்க?

ஓஓஹ்... இன்விடேஷன் கொடுக்காமலேயே பெங்களூர் வந்த மாதிரி மண்டபத்த பார்த்ததும் சாப்பாட்டுக்கு ஓடி வந்திட்டியோ"
நக்கலாக கேட்டான் அவன்.

"வார்த்தைய பார்த்து விடுங்க மிஸ்டர்"
அவனை நேராக பார்த்து பல்லிடுக்கில் வார்த்தைகளை கக்கினாள் அஞ்சலி .

தன் நாக்கை வெளியே நீட்டி கண்களை உருட்டி பார்த்து வைத்த அவன்,
"எப்படி CB வார்த்தைய பார்க்குறது? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லி தாயேன்" என்றான்.

"ஹலோ மிஸ்டர்....."
என்று மேலே சொல்லப்போனவளை நிறுத்தும் படியாகவும்,

"யாரிவன்?" என்று நீங்கள் அனைவரும் கேட்பதை உணர்ந்தும்,
"டேய் தர்ஷு"
என்ற தன் நண்பனின் அழைப்பில் அஞ்சலியை முறைத்து வைத்தவன்,
"உலகவாயாடி ஒதுங்கி நீ போடி..."
என்று பாடியபடியே அவளை கடந்து தன் நண்பனிடம் சென்றான்.

அவன் தான் நவாவின் நண்பனும் விஜய்யின் மனைவி அதாவது ரிதூவின் சித்தி தர்ஷினியின் அருமைத் தம்பியுமான தர்ஷன்.

"யாருடா அந்த சிஸ்டர்.
என்னமோ ஜென்ம பகையை ஒரே நேரத்துல தீர்த்துக்க போற மாதிரி அப்டி முறைச்சிட்டு நின்ன?" -நண்பன்

"நீ வேற.
அவள் சரியான CBடா" -தர்ஷன்

"ஓஓஹ் க்ரைம் ப்ரான்ச்ல ஓர்க் பண்றாவா.
அப்போ உனக்கெப்டி அவள தெரியும்"
ஆர்வமாகக் கேட்ட தன்  நண்பனை பார்த்து தலையில் அடித்துக்கொண்டான் தர்ஷன்.

"ஏன்டா"
ஆயாசமாகக் கேட்டான் நண்பன்.

"அவள் எங்க வேல பார்த்தா எனக்கென்னடா.
நா CB னு சொன்னது அவ, அவளோட திருவாய திறந்தா மூட மாட்ட.
அதான் அப்டி சொன்னேன்.
இப்போ வா. நவா இன்னேக்கி அவன் தான் ஹீரோங்குறதையே மறந்து  மேடையில இருந்த படி நம்மள தான் முறைச்சிக்கிட்டு இருக்கான்."
என்றவன் முன்னே செல்ல பின்னால் சிரித்தபடியே சென்றான் அவன் நண்பன்.

"இந்த குடமிளகாய் இங்க என்ன பண்றான்.
அவன நான் சென்னைல இல்ல ரெண்டு மூணு தடவ பார்த்துருக்கேன்."
யோசனைக்கு மத்தியிலே ட்ரெஸிங் ரூமுக்குள் சென்றிருந்தவள் ரிதூவைப் பார்த்ததும் வெளியில் நடந்ததையும் மறந்து வெளியில் பார்த்தவனையும் மறந்து, ஓடிச்சென்று தேவதை போல் அமர்ந்திருக்கும் அவளது கன்னத்தில் முத்தமிட்டாள்.

"செமையா இருக்கடி செல்லக்குட்டி.
இன்னேக்கி அண்ணா பாடு திண்டாட்டம் தான் போ.
பாவம் தலைவரு"
சிரித்தபடியே நவாவுக்காக பச்சாதாபப் பட்டுக்கொண்டாள் அஞ்சலி.

ரிதூவின் முகம் வெட்கத்தில் கீழ்வானமாக சிவக்க வேகமாக தலையை தாழ்த்திக்கொண்டாள்.

"பொண்ணு வெட்கப்படுறா"
கூறியபடியே ரிதூவின் அருகில் வந்து அவளது கன்னம் கிள்ளினாள் வித்யா.

அறையை விட்டு வெளியே சென்றிருந்த  அஞ்சலி அதே வேகத்தோடு மீண்டும் உள்ளே வந்தாள்.

"மறுபடியும் என்னடி?
புயல் மாதிரி வர்ற? சொல்லாமலே போயிடுற?"
கேட்டுவிட்டு சிரித்தாள் நேஹா.

அவளைப் பார்த்து கண்ணடித்து வைத்தவள்,
வித்யாவிடம் திரும்பி,
"ஹேய் வித்!!! ஹாட் நிவ்ஸ் ஒன்னு."

"ஹேய் என்ன குயிக்கா சொல்லு."
ஆர்வமாக அஞ்சலியின் புறம் திரும்பிக் கேட்டாள் வித்யா.

"உன் ஆளு வந்திருக்காருடி.
நவாண்ணா தோத்துட போறாரு பாரு.
அவ்வளவு தூக்கல்னா பாறேன். "
என்று சிரித்தபடி கட்டை விரலை உயர்த்திக் காட்டியவள் மறு நொடி வெளியே சென்றிருந்தாள்.

"இந்த மாமா நா பெங்களூர் போறேன்னு சொன்னதும் நல்லா தலைய ஆட்டி கேட்டுட்டு இருந்தாரே தவிர, அவங்க வர்றதா சொல்லவே இல்ல. டூ பேட்...

நான் போய் அத்தை, மாமா கூட பேசிட்டு வர்றேன்."
பேசிப் பேசியே அந்த அறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் ஒன்றுக்கு பல தடவை முன்னும் பின்னும் திரும்பித் திரும்பி தன்னை சரி பார்த்து விட்டு நகரபோக,

"அப்டியே அத்தை பையனையும் பார்த்துட்டு வா வித். உன் ஆளும் உன்ன தான் தேடுறாரு போல"
கூறிய படியே அறைக்குள் வந்த சனா வித்யா அவளை முறைப்பதைப் பார்த்து,
"போ போ.
போய் இன்னைக்காவது லவ் யூ மாமோய்ன்னு சொல்லு.
நீ புடவை வேற கட்டிருக்க உடனே தூக்கிட்டு போய் தாலி கட்டிடுவாரு."

"அந்த சாமியார் உடனடியா தாலி கட்டிட்டாலும்"
வாய்க்குள்ளே முனங்கினாள் வித்யா.

"அடிப்பாவி.
நா ஒரு பேச்சுக்கு சொன்னா,
இப்போவே உடனடியா கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா வேற மேடம்க்கு இருக்கோ.
சரி சரி நான் உன்ன வினீத் கூட சேர்த்து வைக்குறேன் நீ இப்போ போய் அவங்க கூட பேசு"
வித்யாவை விரட்டினாள் சனா.

"என்ன சேர்த்து வைக்கிறது அப்புறமா இருக்கட்டும்.
நிகில் அண்ணா இன்னேக்கு வர்றாரு தானே"
கேட்டே  விட்டாள் வித்யா.
காலையில் இருந்து கேட்க வேண்டும் என்று இருந்து மறந்து போயிருந்தாள்.

"ம்ஹும்"

மறுப்பாக தலையசைத்த சனா ஓஃப் மூடிற்கு சென்றிருந்தாள். அவளது தோளில் ஆதரவாக வித்யாவும் நேஹாவும் கை வைக்க ரிதூவோ என்ன சொல்வது என்று புரியாமல் அவர்களையே பார்த்திருந்தாள்.

சட்டென்று தெளிந்தவள்,
"ஹேய் நீ இன்னும் போகல."
என்ற படி வித்யாவை அறைக்கதவு வரை தள்ளிக்கொண்டு வந்தவள் அவளை வெளியே தள்ளி விட்டு திரும்பி வரும் போது அவளது இயல்பான குறும்புத்தனம் அவளை ஆட்கொண்டிருந்தது.

தன் மகனை மணமேடையில் மணமகன் கோலத்தில் பார்த்த நிகிழினிக்கோ உள்ளம் நிறைந்தது. ஆனால் இதையெல்லாம் தன்னோடு சேர்ந்து காண தன் கணவன் இல்லையே என்ற  உணர்வு அவரை வாட்டினாலும் அதை வெளிக்காட்டி தன் பிள்ளைகளின் சந்தோஷமான மனநிலையை வீணாக்க அவர் விரும்பவில்லை.

ஐயர் சொல்லும் மந்திரங்களை "கர்மமே கண்" என்ற தோரணையில் பக்தியுடன் கூறிக்கொண்டிருந்தாலும் உள்ளம் பூராவும் ஒரு நிறைவு சூழ்ந்திருந்தாலும் நவாவுக்கும் தன் அப்பாவின் நினைப்பு தான்.

தன் திருமணத்தில் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து சூழ்ந்திருந்தாலும் தன் தந்தை மட்டும் இல்லாமல் போய்விட்டார் என்ற ஏக்கம்  சிறு பிள்ளையாக மனதை மாற்றி அவனை வதைத்தது. இருந்தும் தன் தந்தை என்றும் தன் கூடவே இருந்து தன்னை ஆசீர்வதித்துக்கொண்டிருப்பார் என்று அவன் உளப்பூர்வமாக நம்பினான்.

தன் தந்தையின் நினைப்பில் உழன்று கொண்டிருந்தவன் ஐயரின்
"பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ"
என்ற குரலில் நடப்புக்கு வந்திருந்தான்.

ஆனாலும் மறந்தும் கூட தன் பார்வையை அவள் வரும் திசையில் அவன் திருப்பவே இல்லை. அவனுக்கல்லவா தெரியும் எங்கே தன் தேவதையை பார்த்து விட்டு இடம், பொருள் புரியாமல் "ஆஆஆஆ" என்று வாயைப் பிளந்து வைப்போமோ என்று உள்ளூர பயத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து எப்படி தன்னவளை காண்பான்.
பாவம் அவன் பாடு அவனுக்கு.

மணக்கோலத்தில் தேவதையாக வரும் தன் மகளைப் பார்த்த அஜய் மற்றும் ராணியின் கண்களும் குளமாகியிருந்தது. எவ்வளவு வளர்ந்து விட்டாள்! இந்தப் பாசம் இவள் பிறந்ததும் ஏன் எங்களுக்குள் எழவில்லை என்று தம் மனதை தட்டிக்கேட்டு நொந்து கொண்டனரே தவிர பதில் என்னவோ கிடைக்கவே இல்லை.

தனக்கருகில் இருக்கும் தன் தம்பியான விஜய்யின் கரத்தை இறுகப்பற்றிக்கொண்டவன்,
"தேங்க்ஸ் டா விஜய்.
நீ மட்டும் என் குட்டிய நமக்கிட்ட இருந்து காப்பாத்தாம இருந்திருந்தா நானும் உன் அண்ணியும் பாவியாகவே செத்துப் போயிருப்போம்டா.
என்ன சொல்ரதுன்னே தெரியலடா.
இன்னேக்கி அவ்ளோ சந்தோஷமா இருக்குடா. எவ்ளோ வளர்ந்திருக்கா?

இது எல்லாம் உன்னால தான்டா
உன்னால மட்டும் தான்."
என்றவனின் குரல் கரகரப்புக்கு மத்தியில் தான் வெளிவந்தது.

தன் அண்ணனின் குரல் கரகரப்பில் உள்ளம் குளிர்ந்து உருகினாலும் அதை அஜய்யிடம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனை முறைத்தான் விஜய்.

கண்களின் ஓரத்தில் துளிர்த்திருந்த நீரை துடைத்துக்கொண்டவன்,
"உனக்கு உன் அண்ணா மேல உள்ள கோபம் இன்னுமே போகலையாடா"

"போகல.
போகனுமான்னு நா எதிர்ப்பாக்குறேன்னான்னும் தெரியல"
சட்டென்று பதில் சொன்ன விஜய்யின் குரலும் உட்சென்றிருந்தது.

"கூடிய சீக்கிரம் போயிடும்டா.
எனக்கு நம்பிக்கை இருக்கு."
என்றான் அஜய்.

"போகும் போது அப்போதைக்கு பார்த்துக்கலாம்"
என்றவன் அவனிடம் இருந்து கையை உருவிக்கொண்டு நவாவுக்கு பக்கத்தில் போய் நின்று கொள்ள அவன் பின்னே சிரித்தபடியே சென்றான் ரிதூவின் தந்தை ஆகிய அஜய்.

"கெட்டிமேளம் கெட்டிமேளம்"
என்ற ஐயரின் குரல் ஆரம்பிக்கும் போதே தன்னவளின் சங்குக்கழுத்தில் தாலியை வைத்து முடிச்சு போட ஆரம்பித்திருந்தான் நவா. நாத்தனார் முடிச்சை போட வந்த சனாவை கண்களாலே வேண்டாம் என்று சொன்னவன் மூன்று முடிச்சுக்களையும் தானே போட்டு மூன்று முடிச்சுக்களின் மத்தியிலும் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் "ஐ லவ் யூ பேபி" என்று சொல்லவும் நவா மறக்கவில்லை.

தாலி கட்டும் போது முன்னைய நாள்  இரவில் அவளுக்கு அவன் போட்டுவிட்ட செயின் ஏனைய செயின்களுக்கு இடையில் இருந்து கொண்டு இவனைப் பார்த்து சிரிக்க அந்த செயினை பார்த்ததும் இவனுக்குமே சிரிப்புவர வெகு சிரமப்பட்டு அதை அடக்கிக்கொண்டான்.

அவள் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்தவன் அவள் முன்னுச்சியில் மென்மையாக இதழ் ஒற்றி எடுத்தான்.

அவன் தாலி கட்டும் போதும் சரி குங்குமம் வைத்து விடும் போதும் சரி இவனது கை உரசல் வேறு ரிதூவை பாடாய் படுத்தி எடுத்தது .

அக்னியை வலம் வரும் போது அவன் அவள் கையை மென்மையாக பற்றியிருந்த விதமும் காலில் மெட்டி அணிவித்து அவளது காலை முத்த மிட்ட நொடியும் இந்த உலகத்தையே வென்று விட்டது போல் உணர்ந்தாள் ரிதூ.

சம்பிரதாயங்கள் சடங்குகள் எல்லாம் முடிய, மணமக்களை வாழ்த்த, பரிசளிக்க மற்றும் போட்டோ எடுக்கவென ஒரு கூட்டமே மேடையை மொய்த்துக்கொண்டிருந்தது.

வித்யாவின் தாயோடு கதைத்து விட்டு சிரித்த படி நிமிர்ந்த சனாவின் கண்களில் சிக்கினான் அவன். நம்பமுடியாமல் மீண்டும் உற்று நோக்கினாள் சனா.
சந்தேகமே இல்லை.

அவனே தான்.

நிகில்.
சனாவின் நிகியே தான்.

கரு நீலநிற போர்மல் சேர்ட் மற்றும் சாம்பல் நிற பேண்ட் அணிந்திருந்தான். அவனுக்கு அந்நிறம் மிகவும் பொருத்தமாக அவனை மேலும் அழகனாக காட்டியது. அவனது உடம்பு சற்றே இளைத்திருந்தது.

ஆனாலும் புதிதாக முளைத்திருந்த ட்ரிம் செய்யப்பட்ட அவனது ஓவல் வடிவ தாடி அவனுக்கு எடுப்பை கொடுக்க ஏனோ சனாவால் அவனிடம் இருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.

"சனா"
என்ற தன் அம்மாவின் அழைப்பில் பார்வையை கஷ்டப்பட்டு திருப்பிக்கொண்டவள் அம்மாவிடம் சென்றாள்.

நிகிழினி தன் உறவினர்கள் ஓரிருவருக்கு சனாவையும் நிஷ்மிதாவையும் அறிமுகப்படுத்தி வைக்க அந்த அறிமுகப் படலம் முடிந்து மேடையை சுற்றி பார்வையை சுழலவிட்ட  சனாவின் பார்வைக்குள் நிகில் சிக்கவே இல்லை.

தன்னால் முடிந்த அளவு மண்டபத்தில் அங்கும் இங்குமாக அவனை தேடி அலைந்தாள். கூட்டம் வேறு அதிகமாக இருக்க சிரமத்துக்கு மத்தியில் அவனோடு இன்று எப்படியேனும் பேசியே ஆகவேண்டும் என்றே தேடினாள். ஆனால் நிகில் இவள் கண்களுக்கு சிக்கவே இல்லை. ஒருவேளை நான் தான் தவறுதலாக வேறொருவரை நிகிலென்று நினைத்து விட்டேனோ, அவன் வந்திருக்க மாட்டான் போல, என்று தன்னை தானே ஒருவாறு சமாதனப் படுத்திக்கொண்டிருக்கும் போது வந்தாள் அவள் தோழி பவித்ரா.

"என்ன சனா.
நிகில் அண்ணா வரமாட்டார்னு சொன்ன, வந்திருக்காரே"
புன்னகையோடு சொன்னாள் பவித்ரா.

"ஹேய் எங்கடி நிக்கி இருக்கான். நா அவன இப்போவே பார்க்கணும்"
சொன்ன சனாவின் கண்கள் கலங்கியிருந்தது.

"இப்போ தான் என் கூட பேசிட்டு அந்தப்பக்கம் போனாரு"
பவித்ரா காட்டிய திசையில் "இரு நான் அவன் கூட பேசிட்டு வந்துடுறேன்" என்று கூறிக்கொண்டே ஓடினாள் சனா.

சனா சென்ற திசையைப் பார்த்து பெருமூச்சொன்றை வெளியிட்ட பவித்ரா "கடவுளே இதுங்க ரெண்டயும் கூடிய சீக்கிரம் சேர்த்து வெச்சிடு " என்ற பிராத்தனையோடே தன் ஏனைய தோழிகளிடம் சென்றாள்.

அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாகவும் நிறைவாகவும் நிறைவு பெற மணமக்கள் நவாவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சடங்குகள் அனைத்தும் நிறைவுபெற்று அங்கே பல்வேறு பட்ட விளையாட்டுக்கள் கேலிப் பேச்சுக்கள் என்று எதற்குமே பஞ்சம் இல்லாமல் வீடெங்குமே கலகலப்பாக இருந்தது.

சனாவின் மாமா, அத்தை, நிகிலின்  அண்ணா அண்ணி என நிகில் குடும்பத்தினர் அனைவரும் இவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். ஆனால் நிகில் வந்திருக்கவிலை. சனா நிகிலை மண்டபத்தில் சந்திக்கவும் இல்லை.
அவன் அந்த மண்டபத்தில் அவள் தேடிச்சென்ற நேரத்தில் இருக்கவும் இல்லை. நிகில் சனாவை காணவும் இல்லை. பார்க்க வேண்டும் என்று எண்ணவும் இல்லை.

இது தான் நிகில். சிறுவயதில் இருந்தே அவனது பல ஆசைகளும் புறக்கணிக்கப்பட தனக்குத்தானே சமாதானம் கூறி தன்னை சரிப்படுத்திக்கொள்வான். இப்பொழுதும் அப்படித்தான். சனா தனக்கில்லை. அவள் தனக்கு சொந்தமானவள் இல்லை. அவள் என்னைச்சேரவே முடியாது. என்று அவன் தனக்குள் அடிக்கடி கூறிக் கொண்டு தன்னை ஓரளவு மீட்டிக்கொண்டுள்ளான். இவளைப் பார்த்திருந்தால் கூட எந்த சலனமும் இல்லாமல் ஏனையவர்களுடன் பேசுவது போலவே சாதாரணமாக பேசியிருப்பான். இது தான் அவன். அவன் அனுபவித்த காயங்கள் இந்த விடயங்களில் அவனை முதிர்வடையச்செய்திருந்தது.

என்னதான் இருந்தாலும் நிகில் சனாவின் மீது கொண்ட காதல் பொய் இல்லை. அது ஆழமானது. காலத்தால் கூட அதை அழிக்க முடியாது. இது மட்டும் உண்மையாகும்.

இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்ட நவா சிறிது நேரம் கழித்து தன் அறைக்குச் செல்ல அவன் பின்னோடே ராணியையும் அழைத்துக்கொண்டு  ரிதூ இருக்கும் அறைக்கு சென்றார் நிகிழினி.

தன் அம்மாவும் அத்தையும் தான் இருக்கும் அறைக்கு வந்ததும் அவ்வளவு நேரம் தோழிகளுடன் பதிலுக்கு பதில் பேசி சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ரிதூவினுள் பதட்டம் தொற்றிக்கொண்டது. என்னவென்று தெரியாத ஏதோ ஒரு படபடப்பு. இதயம் வேகமாக அடித்துக்கொள்வது போன்ற ஒரு பிரம்மை. இல்லை ஜெட் வேகத்தில் அடிக்கிறது போலும்.

நவாவின் அறைக்கதவை மெதுவாக திறந்து கொண்டு உள்ளே வந்த ரிதூவின் பார்வை அறையை அலசியது. நேற்று இரவும் வந்தாள் தான் ஆனால் என்னமோ இப்பொழுது தான் முதன்முதல் வந்திருக்கிறாள் போல உணர்ந்தாள்.

அறையில் இருந்த அலங்காரங்களும் பூக்களின் வாசமும் அவளை அவ்விடத்திலேயே சிலை போல் நிறுத்தியிருந்தது.

"ஹாய்!
வந்துட்டியா... வா பேபி"
என்று அவளை அழைத்தான் நவா.

நவாவின் குரலில் இன்று தான் முதன் முதல் நவாவைப் பார்ப்பதைப் போல் பார்த்தவளைப் பார்த்து சிரித்து வைத்தவன் அவள் அருகில் போய் கரம் பற்றி அழைத்துக்கொண்டு வந்து கட்டிலில் தனக்கருகில் அமர்த்திக்கொண்டான்.

"ஹேய் என்னடா.
இன்னேக்கி பேசா விரதமா?"
கேலியாகக் கேட்டான் நவா.

அவனைப் பார்த்து விழித்து வைத்தாள் ரிதூ.

"பயந்துட்டியா?"
மென்மையாகக் கேட்டான் நவா.

பதில் சொல்லாமல் தலையை தாழ்த்திக்கொண்டாள் ரிதூ.

"என்னப் பார்த்தா உன் பெர்மிஷன் இல்லாம ஏதாவது செஞ்சிருவேனோன்னு பயமா இருக்கா பேபி"
அவளது கரத்தை தன் கைக்குள் வைத்து மென்மையாக வருடியபடி அக்கறையாக கேட்டான் நவா.

"அச்சோ அப்டியெல்லாம் இல்ல.
என்னான்னு தெரியல மாமா ஒரே நேர்வேர்ஸ்ஸா இருக்கு."

இவள் இப்படிச் சொன்னதும் இப்படிப் பேசுகிறவள் தான் நேற்று இரவு தன்னை "ட்யூப்லைட் மாமா" என்று சொன்னது ஞாபகத்தில் வந்து சிரிப்பையூட்ட,

"இந்த ட்யூப் லைட் மாமாவ பார்த்து உனக்கு நேர்வேர்ஸ்ஸா இருக்கா பேபி"
இப்பொழுது இவன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தான்.

சிணுங்கிய படி அவன் தோளில் ரிதூ சாய்ந்து கொள்ள அவளை ஒரு கையால் அணைத்துக்கொண்டான் நவா.
"பேபி..."

"ம்ம்ம்ம்"

"நான் இன்னேக்கி எவ்ளோ ஹேப்பியா இருக்கேன் தெரியுமா ரிதூமா?
எல்லாமே கிடைச்ச மாதிரி பீஃல் ஆகுதுடா.

நா உன்ன முதன் முதலா பாக்குற போ எனக்கு ஜஸ்ட் டுவென்டி டூ தான். நா பிசினஸ் கூட ஆரம்பிச்சது கிடையாது. ரகு மாமா கூட நம்ம கேஸ் விஷயமா சென்னை வந்திருந்தேன்.

உன்ன பார்த்ததுமே என்னவோ நீ தான் என் சரிப்பாதீங்குற பீஃல்.
அப்போ நா யோசிக்கிறது சரியா பிழையான்னு கூட எனக்கு தெரியல. எனக்குன்னு பல பொறுப்புகள், சனா அண்ட் அப்போ நிஷ்மிதா வேற ரொம்ப சின்னவ. ஸோ என்ன செய்றதுன்னே எனக்கு புரியல.
நிஷ்மிதா இவ்ளோ வளர்ந்தும் இன்னும் கூட அதே மாதிரியே தான் எனக்கு  அவ தெரியுறா.

ஆனாலும் இங்க வந்ததுமே அம்மாகிட்ட உன்னை பத்தி சொன்னேன். அம்மா எதுவும் பேசல.
உன்னை பார்த்ததுக்கு அடுத்த நாள் தான் நம்ம கேஸ் கோட்டுக்கு வந்தது. நாங்க தான் ஜெய்ச்சோம். அப்போ என் அப்பா தான் என் கண் முன்னாடி வந்தாரு. "உனக்கு இனி எல்லாமே கைகூடும் கண்ணா" அப்டி ப்ளஸ் பண்ண மாதிரி தோணுச்சு.

இங்க வந்ததுமே நம்ம பிஸ்னச ஸ்டார்ட் பண்ணன். இடைக்கிடை உன்னையும் பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். நிறைய சாதிக்க வேண்டி இருந்ததனால உன்ன பத்தி ரெண்டு வருஷம் நா அம்மாகிட்ட எதுவுமே பேசல.
அதுக்கப்புறம் தான் அம்மாகிட்ட பேசினேன். அம்மா ஓகே சொன்னாங்க. சனாக்கு கூட தெரியாது.
ஆனாலும் என் பேபிமாவ சரிக்கட்ட வேணாமா?
ஸோ உன்ன சனா மீட் பண்றதுக்கு டூ, த்ரீ டேய்ஸ்க்கு முன்னாடி தான் சனாகிட்ட சொன்னேன்.
சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டா. எனக்கு தெரியும் நீ எப்டியும் மாறுவன்னு சொல்லி.
நா நினைச்சது நடந்தது பேபி.

அதே போல இன்னேக்கி நம்ம கல்யாணம் மூலமா நா நினைக்காதது ஒன்னு கூட நடந்தது. என் பெரிய சித்தப்பாவும் நாங்களும் கொஞ்ச நாள் பகை. ஆனாலும் நா அவங்க வீட்டுக்கே போய் இன்வைட் பண்ணிருந்தேன்.

இன்னேக்கி வந்த பெரிய சித்தப்பா எங்க அப்பாவோட எவ்ளோ சொத்துக்கள அப்போ எடுத்துக்கிட்டாறோ அத விட பெறுமதியில ரெண்டு மடங்கு சொத்த நம்ம மூணு பேருக்கும் கொடுத்திருக்காரு.
அதோட கண்கலங்க மன்னிப்பு வேற கேட்டு நிக்குறாரு.

அவர் கேட்ட
மன்னிப்பை கொடுக்கலாம். அத கொடுத்துட்டேன் பேபி.
ஆனா அவர் தந்த சொத்த எடுத்துக்க எனக்கும் சம்மதம் கெடையாது. அம்மாவுக்கும் சம்மதம் கெடையாது.

அப்பா இருக்குறப்போ நாங்க எல்லாம் ஒரே வீட்ல ஒன்னா வாழ்ந்தவங்க பேபி.
லாஸ்ட் பாய்வ் இயர்ஸ் பிரிஞ்சிருந்தோம்.

எப்டியோ இந்த கல்யாணம் நால நம்ம மொத்த பேஃமிலியும் சேர்ந்திருக்கு.
தேங்க்யூ  ஸோ மச் பேபிமா"
என்று கூறி அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து அதில் கன்னம் சாய்த்துக்கொண்டான் நவா.

இவன் தனக்காக எவ்வளவோ பார்த்துப் பார்த்து செய்து விட்டு இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதற்காக எனக்கு நன்றி வேறு சொல்கிறானே என்ற யோசனையில் இருந்து தெளிந்தவவள் சட்ரென்று தலையுயர்த்தி அவனிடம் இருந்து பிரிந்து அவன் கன்னத்தில் இதழ் பதித்து மெதுவாக "ஐ லவ் யூ" என்றாள்.

"லவ் யூ டூ பேபி"
என்று கூறி நவா தன் கைகள் இரண்டையும் எதிர்பார்ப்போடு விரிக்க தாய் கோழியைக் கண்ட  குஞ்சாக மாறி அவன் மார்பில் ஒட்டி அவனை இறுக அணைத்துக் கொண்டாள் ரிதூ. தானும் அவளை இறுக அணைத்துக்கொண்டவன் வெகு நேரம் கழித்து தன் அணைப்பை தளர்த்தி அவள் முகத்தை கைகளில் ஏந்தி முத்த ஊர்வலத்தை நடாத்த இறுதியில் அவன் இதழ்கள் தன்னிச்சையாகவே அதனது இணையை அடைந்திருந்தது.

முதல் இதழ் முத்தம். என்னவென்று புரியாத புது வித சுகமான அவஸ்தையாக இருந்தது. இன்னும் இன்னும் வேண்டும் போல் இருந்தது. செயல் முழுவதையும் நவாவே எடுத்திருந்தான். ஆண்மையுடன் கூடிய மென்மையான ஆழ் முத்தம். எவ்வளவு நேரம் நீடித்ததோ...

மூச்சுவாங்க தன்னை விடுவித்தவன் மார்பிலே ரிதூ தஞ்சம் புகுந்து கொள்ள, நவாவின் உணர்வுகள் எல்லாம் ஹை ஜம்ப் போட்டியில் இருந்தது.

"ரிதூமா நீ எனக்கு வேணும்டா"
முனங்கிய படியே தன்னை அணைத்திருந்தவளை அப்படியே கட்டிலில் சரித்தான் நவா. ரிதூவின் கைகள் இரண்டும் தானாக வந்து நவாவின் இடுப்பை சுற்றிக் கோர்த்துக்கொள்ள அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டவன் அவள் மீது மூழ்க ஆரம்பித்திருக்க, தன்னவனின் வித்தையில் கரைய ஆரம்பித்திருந்தாள் அவனவள்.

அன்றைய இரவு சனாவுக்கு தூங்கா இரவாகத் தான் இருந்தது. பக்கத்தில் வித்யாவும் அஞ்சலியும் கூடவே தூங்கியிருக்க எதையும் காட்டிக்கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருந்தாள். அவளது மூடிய விழித்திரைகள் இரண்டிலும் எங்கும் நிகில் தான் நிறைந்திருந்தான்.

அவன் புறத்தில் உண்மையில் எந்த பிழையும் கிடையாது என்பதை இப்பொழுது சனா நன்றாக உணர்ந்திருந்தாள். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிரிவு சனாவில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. விடிந்ததும் எப்படியாவது நிகிலை சந்தித்து பேசி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று உறுதி எடுத்தவளாக அப்படியே உறங்கிப் போனாள் சனா.

தன்னவனின் மார்பில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தவள், வெளியில் மெதுவாக வெளிச்சம் படருவதை உணர்ந்தாளோ என்னமோ மெதுவாக கண்களை திறந்து பார்க்க வெளியில் சற்றே வெளிச்சம் படர ஆரம்பித்திருந்தது.

தன்னவன் அணைப்பில் இருந்து மெதுவாக எழும்பியவள் கட்டிலை விட்டு இறங்கப்போக அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன்,
"இன்னும் கொஞ்ச நேரம் என் கூட தூங்கு பேபி"
என்று முனங்கினான்.

"ஐயோ அத்த தேடுவாங்க மாமா"
சிணுங்கினாள் ரிதூ.

"அம்மா உன்ன விட விபரம் பேபி.
நேற்று நமக்கு ப்ஃஸ்ட் நைட்.."

மேலும் சொல்லப்போனவனின் வாயை முகம் சிவந்த படி வேகமாக மூடினாள் ரிதூ.

"ஹஹ்ஹா"
ரிதூவின் செயலில் வாய்விட்டு சிரித்தவன் அவளது கையை மெதுவாக எடுத்து தனது கைக்குள் வைத்துக்கொண்டு,

"ஸோ... நா என்ன சொல்ல வர்றேன்னா... என் அம்மா உன்ன தேடிக்கிட்டு இருக்க மாட்டாங்க.
நீ பேசாம தூங்கு."
என்றவன் அவனது அணைப்பை இறுக்கியிருந்தான்.

காலையில் எழுந்து  டீ சாப்பிட்டு விட்டு அம்மாவிடம் கோயில் வரை போய் வருகிறேன் என்று கூறி காரை எடுத்துக்கொண்டு சென்றாள் சனா.  அவளை அதிசயமாக பார்த்த நிகிழினி தலையை சிழுப்பிவிட்டு அவர் வேலையை தொடர்ந்தார்.

காரை ஓட்டிக்கொண்டு கோயிலுக்கு முதலில் சென்றவள் முருகன் சந்நிதியில் தன் வேண்டுதலை வேண்டிவிட்டு அடுத்ததாக தன் மாமாவின் வீட்டுக்கு காரை செலுத்தினாள்.

கையில் பத்திரிக்கையுடன் அமர்ந்திருந்த ரகுவரன். வீட்டிற்குள் சனா தயங்கித் தயங்கி வருவதைப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டவாறே,
"ஹேய்...
வா வா சனா. குட் மோர்னிங் டா.
நேற்று ரொம்ப அலைச்சல் போல"
அக்கறையாக விசாரித்தார்.

புன்னகைத்தவாறே உள்ளே வந்த சனா,
"குட்மோர்னிங் மாமா.
ஒரு அலைச்சலும் இல்ல .
ரொம்ப நல்லா போச்சு."
என்றாள்.

இவர்களின் சத்தத்தில் தன் அறையில் இருந்து வெளியே வந்தார் சனாவின் அத்தை.

"அடடே  அதிசயமா என் மருமக இன்னேக்கி நம்ம வீடு தேடியே வந்திருக்காளே.
என்ன சாப்புடுற சனா.
டீ போடட்டுமா"
அக்கறையாக கேட்டார் அவள் அத்தை.

"இல்ல வேணாம் அத்தை.

நா நிகில் கூட.. கொ.. கொஞ்சம் பேசணும்"
ஏனோ வார்த்தைகள் கொஞ்சம் இடைவெட்டித் தான் வெளியே வந்தது.

சனாவின் அத்தையின் முகம் பூவாய் மலர்ந்தது.

"நிக்கி இருக்கானா அத்த?"
இருக்க வேண்டும் என்ற ஆவல் அவள் குரலில் தெரிந்தது.

முக மலர்ச்சியுடன் உற்சாகமாக பதில் சொல்ல வந்த தன் மனைவியை முந்திக்கொண்டார் ரகு.

"அடடே, நீ கொஞ்சம் ஏர்லியா வந்திருந்தா நிகிலை மீட் பண்ணிருக்கலாம்டா. இப்போ ஒரு டென் மினிட்ஸ் முன்னாடி தான் எயார்போர்ட்க்கு கெளம்பி போனான்டா.
வா நாம வேணா போய் பார்க்கலாம்"
என்று சனாவின் கரத்தை அவளது மாமா பற்ற அவரது பேச்சில் சர்வமும் அடங்கிப் போயிருந்த சனாவோ,

"இல்ல வேணாம் மாமா.
நான் பார்த்துக்குறேன்"
என்றவள் இவர்களிடம் கூட சொல்லத்தோன்றாமல் காரை வேகமாக கிளப்பிக்கொண்டு விமான நிலையத்திற்கு விரைந்தாள்.

சனா போவதையே கண்களில் கண்ணீர் நிறைந்தபடி ஆயாசமாக பார்த்துக்கொண்டிருந்த நிகிலின் அம்மா கணவனை நோக்கி குற்றம் சாட்டும் பார்வை ஒன்றை வீசி விட்டு மாடிக்கு சென்று தன் போனில் யாருக்கோ அழைப்பை மேற்கொண்டார்.

வாகன நெரிசலில் சிக்கி எப்படியோ ஒரு வழியாக விமான நிலையத்தை வந்தடைந்த சனா. வேகமாக போய் வெளிச்செல்லும் விமானங்கள் தொடர்பான விடயங்கள் உள்ளடங்கி இருக்கும் இலத்திரனியல் திரையை பார்க்க  அவளது கண்கள் தானாகக் கலங்க அங்கேயே அப்படியே அமர்ந்து விட்டாள்.

கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்து கொட்டிக்கொண்டு இருந்தது. காரணம் நிகில் செல்லும் விமானம் ஐந்து நிமிடங்களுக்கு முன் விமான ஓடு தளத்தை விட்டும் பறந்திருந்தது.

"போய்ட்டான்.
என்ன விட்டுட்டு திரும்பவும் போய்ட்டான்"
நினைக்கும் போதே குரல்வளை அடைத்தது.
கண்களிலோ கண்ணீர். "ஹையோ செத்துடலாம் போல இருக்கே..." அவளையும் மீறி உணர்ச்சி மிகுதியில் வார்த்தைகள் வெளியே கொட்டியது.

எவ்வளவு நேரம் அழுதாளோ தன் தோள் மேல் படிந்த கையை பார்த்து எழுந்தவள்,
"நவாண்ணா"
என்று கதறிக்கொண்டே தன் அண்ணனை கட்டிக்கொண்டு தான் இருக்கும் இடத்தையே மறந்து கத்திக்கதறித் தீர்த்தாள்.

"அவன் என்ன விட்டுட்டு திரும்ப போய்ட்டான்ணா.
போய்ட்டான்.

என்ன பார்த்து பேசனும்னு கூட தோணாம என்ன மொத்தமா மறந்துட்டு போய்ட்டான்ணா.

என்னால் முடியலணா.
ப்ளீஸ்ணா நா உடனே கனடா போகணும் அவன பார்த்து பேசணும்ணா.

ப்ளீஸ்ணா வேணாம்னு சொல்லாதேணா.
நா போகணும்ணா."
நவாவின் சேர்ட்டை பிடித்துக்கொண்டு பித்துப் பிடித்தவள் போல் கதறினாள் சனா.

"ரிலாக்ஸ் சனா ரிலாக்ஸ்.

என்னடா இது,
இது நம்ம சனா இல்லயே.
ப்ளீஸ்டா பெஃஸ்ட் ஒன்ன அண்டஸ்டேண்ட் பண்ணிக்கோ, நிகில் எப்போவும் உனக்கு தான்"
அவளுக்கு புரிய வைக்க முனைந்தான் நவா.

"நோ,
நீ என்ன சொன்னாலும் நா கேக்கமாட்டேன்.
நா அவன் பார்க்கணும். பார்த்தே ஆகணும்.
உனக்கு எனக்கு டிக்கட் போட முடியுமா முடியாதா?"
அழுகைக்கு மத்தியில் அழுத்தமாகக் கேட்டாள் சனா.

"ஓகே நான் டிக்கட் ரெடி பண்றேன்.
நீ போலாம்.
அதுக்கு முன்னாடி மாமா வீட்டுக்கு போய் டீடேயில்ஸ் கெலெக்ட் பண்ணலாம். அதோடயே அவன் ரூம்ல  உனக்கானது ஏதாவது விட்டுட்டு போயிருக்கானான்னு பார்க்கலாம். எனக்கென்னமோ அவன் ஏதாச்சும் விட்டுட்டு போயிருப்பான்னு தோணுது."
கதைத்துக்கொண்டே காருக்கு அருகில் சனாவை அணைத்தவாறே அழைத்து வந்திருந்தான் நவா.

காரில் ஏறாமல் அப்படியே யோசனையோடு நின்று கொண்டிருக்கும் சனாவை பார்க்க நவாவுக்கே கண்கள் கலங்கிவிட்டது.
"கெட்  இன் சனா.
பீ குயிக்"
என்றவன் அவளையும் ஏற்றிக்கொண்டு வேகமாக தன் மாமா வீட்டுக்கு காரை செலுத்தினான்.

ஒரு நொடி தன்னை சுற்றி நடைபெறுவது என்னவென்றே சனாவால் அறிந்து கொள்ள முடியவில்லை. "நிக்கி அவன் ரூம்ல எனக்கு என்ன விட்டுட்டு போக போறான். நவாண்ணா என்ன சொல்றான்?"
இந்த கேள்வியை தனக்குள் கேட்டுக்கேட்டே குழம்பிப்போனாள் சனா.

"சனா வீடு வந்துடுச்சு.
நீ நிகில் ரூமுக்கு போ நான் மாமா கூட பேசிட்டு வர்றேன்"
என்றவன் அவளையும் அழைத்துக்கொண்டு உள்ளே போனான்.

மறுவார்த்தை எதுவும் பேசாமல் மேல் மாடியில் இருக்கும் நிகிலின் அறைக்குள் நுழைந்தாள் சனா.
அக்கம் பக்கத்தில் இருந்து எந்த சத்தமும் அவளுக்கு கேட்கவில்லை. "எதைப் பார்ப்பது? எதை நிகில் விட்டு போயிருப்பான்?" எதுவும் தோன்றாமல் அவன் கட்டிலில் 'தொப்' என்று அமர்ந்தாள்.

நிகிலின் அறையின் உள்ள குளியலறைக் கதவு திறக்கும் சத்தம் அவளது யோசனைகளையும் தாண்டி கேட்க, வேகமாக அந்த திசையில் தலையை திருப்பியவளின் கால்கள் தானாக எழுந்து நின்றது.

குளியல் அறையில் இருந்து வெளியே வந்திருந்தவன் வேறு யாருமில்லை. சனாவின் நிக்கியே தான்.

முழங்கால் வரையான பேண்ட்டுடனும் வெற்று மார்புடனும் தோளின் ஒரு பக்கத்தில் துண்டுடனும் வெளியே வந்த அவனுக்குமே சனாவின் அளவு அதிர்ச்சி தான்.

அவனும் இவளை இங்கு துளியளவும் எதிர்பார்க்கவில்லையே. வேகமாக தன் துண்டை விரித்து இருபக்கமுமாக போட்டுக்கொண்டான் நிகில். ஏனோ இந்த செயல் சனாவை வருத்தியது.

முதலில் சுதாகரித்த நிகில்.
"ஹாய் சனா.
எப்டி இருக்க?"
என்றுகேட்க, பலமாதங்கள் கழித்து தன்னவனின் குரல் கேட்டவளுக்கோ இதழ்பிதுக்கிக்கொண்டு அழுகை வர கேவலுடன் ஓடி வந்து அவனை கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள் சனா.

இவ்வளவு காலம் அடக்கி வைத்திருந்த நிகிலின் காதல் மனம் இப்பொழுது மேலெழும்பி வந்திருந்தது.

"சனா..
ஹேய் காம் டவுன்டா.
என்ன இது அழுதுகிட்டு"
எனும் போதே அவனது கண்களும் கண்ணீரை சிந்த ஆரம்பித்திருந்தது.

"ஐம் ரியலி சாரிடா நிக்கி.

நா உன்ன புரிஞ்சிக்காம ரொம்ப ஹேர்ட் பண்ணிட்டேன்டா.
ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு நிக்கி.
ப்ளீஸ்"
என்றவள் மூக்கை உறிஞ்சிக்கொண்டு மீண்டும் அழ ஆரம்பித்திருந்தாள்.

"இல்லடா நான் தான் உன்ன ஹேர்ட் பண்ற மாதிரி அன்னேக்கி பேசிட்டேன். நான் தான் சாரி சொல்லணும்" -நிகில்

"நீ தானே மூச்சுக்கு மூணு லட்சம் வாட்டி எனக்கிட்ட சாரி சொல்லிருக்க நிக்கி.
நீ மன்னிப்பெல்லாம் கேட்கவே கூடாதுடா.
ப்ளீஸ் என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லு நிக்கி.
ப்ளீஸ் டா."
அழுகையினூடே சொன்னாள் சனா.

"ஓகே உன்ன மன்னிச்சிட்டேன்.
ப்ளீஸ் அழாத சனா .
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா."
தோய்ந்த குரலில் சொன்னான் நிகில்.

மூக்கை உரிஞ்சிக் கொண்டவள்,
"ஓகே நான் இனிமே அழவே மாட்டேன்.
நீ என்கூடவே இருப்ப இல்ல."
அவனது காதலுக்கு முன் சிறுப்பிள்ளையாகவே மாறியிருந்தாள் சனா.

"கண்டிப்பா.
இனிமே உன்ன விட்டு எங்கேயும் எப்போவும் போகவே மாட்டேன்.
ப்ரோமிஸ்"
என்று அவள் கையில் தன் கரம் வைத்தான் நிகில்.

உச்ச கட்ட சந்தோஷத்தில் நாம் என்ன செய்கின்றோம் என்பதையே மறந்தவள் அடுத்த நொடி அவன் இதழில் அழுத்த இதழ் பதித்திருந்தாள்.

தாமதமாகியே தன் செயலை உணர்ந்தவள் வெட்கத்தில் முகம் சிவக்க அவன் மார்பிலே முகம் புதைத்துக்கொண்டாள். சிரித்த படி அவளை அணைத்துக்கொண்டவன் அவள் காதுக்கருகில் சென்று "ஐ லவ் யூ ஸ்வீட்டி" என்று சொல்ல "லவ் யூ டூ நிக்கி" என்று அவனை இறுகக்கட்டிக்கொண்டாள் சனா.

"பேபிமா"

"என்ன மாமா" -ரிதூ

"உனக்கொரு மெயில் வந்திருக்கே,  பார்த்தியா?" -நவா

"இல்லையே"
என்ற படி அவன் அருகில் வந்து லெப்டோப்பில் பார்வையை பதித்தாள் ரிதூ.

"உன்ன வேலைய விட்டு தூக்கிட்டாங்களாம் பேபி."
சீரியஸாக சொன்னவனைப் பார்த்து,

"ஓஹோ! சிறப்பு"
என்று கேலியாக கூறி இதழ் சுழித்தாள் ரிதூ.

"எத்துன வாட்டி இந்த மாதிரி இதழ் சுழிக்காதேன்னு சொல்லிருக்கேன் பேபி. மூட ஏத்துற." என்ற படி அவளது மென்மையான இதழை தன் முரட்டு இதழ்களால் சிறை செய்திருந்தான் ரிதூவின் கண்ணன் நவநீதன் ராகவ்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro