🌚15🌚

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

உலகம் விசித்திரமானது.
அதிலும் மனிதன் விசித்திரமானவன். மனிதனது தேவைகள், விருப்பங்கள் ஏன் மனித மனங்கள் கூட விசித்திரமானவையே.

உலகில் நிம்மதிக்காக பணத்தை தேடி அலைந்து கொண்டு ஒரு கூட்டம் என்றால் பணமிருந்தும் நிம்மதியை தேடி அலைந்து கொண்டு இன்னொரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

அன்றைய மதிய வேளை தன் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தன் அத்தை நிகிழினியோடு கதையளந்து கொண்டிருந்தாள் ரிதூ. இப்பொழுதெல்லாம் நிகிழினியின் முகத்தில் அவ்வளவாக பிரகாசம் கிடையாது. ஆனாலும் அதை அவர் பிள்ளைகள் முன்னிலையில் காட்டிக்கொள்வதில்லை. ரிதூவுக்கும் காரணம் தெரியும் என்பதால் அவளும் கேட்பதில்லை. ஆனாலும் தினந்தோறும் அவளது மனமும் அவ்விடயத்தை ஆராயாமல் விடுவதில்லை. இவளுக்கும் சில சந்தர்ப்பங்களில் கவலை மனதை கிழிக்கும். இவளையும் அறியாமல் கண்ணீராகக் கூட கவலை வெளிப்பட்டு விடும். அவரவர் தங்களுக்குள் தான் மருகுகின்றனரே தவிர ஏனையோருக்கு மத்தியில் காட்டிக்கொள்ளவதில்லை.

தன்னவனின் கார் வரும் சத்தத்தில் முகம் மலர எழுந்து வாசலுக்கு வந்தாள் ரிதூ. ஆனால் காரில் இருந்து இறங்கியவனோ அவர்கள் வீட்டு கார் சாரதி சுதா தான். அவர் மறுபக்கம் வந்து கதவை திறந்துவிட அதற்காகவே காத்திருந்தவன் போல் துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடி வெளியே வந்தான் ஜூனியர் நவா.

ஓடிவந்து "பேபி" என்றபடி தன் தந்தையின் அதே பாணியில் அழைத்து அன்னையை கட்டிக்கொண்டவன் தான் ஆறுவயது நிரம்பிய அபிஜித் ராகவ்.

இவர்கள் திருமணம் நடந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. இந்த ஏழு வருடங்களிலும் நவாவின் கார் சத்தம் கேட்டதும் வாசலுக்கு ஓடி வந்து விடுவதை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறாள் ரிதூ. தன்னவன் வேலை விட்டு வீட்டிற்கு வரும் போது முதல் தரிசனமாக தானே இருக்க வேண்டும் என்பது அவள் எண்ணம். இன்றும் அதேபடி வாசலுக்கு வர வந்ததென்னவோ கார் சாரதி தான்.

அபிஜித்தின் பையோடு வந்தார் சுதா. ரிதூவைப் பார்த்து புன்னகைத்தவர்,

"தம்பி ஏதோ முக்கிய மீட்டிங்ல இருக்குறதுனால குழந்தைய எனக்கு அழைச்சிட்டு வீட்டுக்கு போக சொன்னார் சின்னம்மா"தன்னோடு குழந்தை வந்ததுக்கான காரணத்தை கூறினார் அவர்.

"ஓஓஹ் அப்டியாணா.
உங்கள ஏதும் கஷ்டப்படுத்தினானோ என்னமோ"
அபிஜித்தின் துடுக்குத்தனம் தெரிந்ததனால் இப்படிக்கேட்டாள் ரிதூ.

"ஐயோ.
அதெதுவும் பண்ணலமா.
சமத்து பையன்."
என்றவர் அவளிடம் விடைபெற்று காரை எடுத்துக்கொண்டு சென்றார்.

ரிதூவோடு உள்ளே சென்றவன் ஹாலில் நிகிழினியை கண்டதும் "பாட்டி" என்று அவரிடம் ஓடினான்.

"வந்துட்டியா கண்ணா"
என்றபடி அவனை தூக்கி மடியில் வைத்துக்கொண்ட நிகிழினி அவன் பேசும் கதை கேட்பதில் ஆழ்ந்திருந்தார்.

அன்று இரவு ஏழு மணியளவில் வீட்டிற்குள் நுழைந்தான் நவா.

"என்ன இன்னேக்கி பேபியையும் காணோம் நம்ம ஜூனியர்ஸையும் காணோம்"
என்று தினம் தரிசனம் தரும் அவன் சரிபாதியை காணாமல் ஒரு நொடி நெற்றி சுருக்கியவன் சமையல் அறையில் அரவம் கேட்கவே விசிலடித்த படியே சமையல் அறைக்கு விரைந்தான்.

அங்கே அவனது மூன்றே வயதான சுப்பர் ஜூனியர் "இந்திரஜித் ராகவ்" பீஃடிங் ஷெயாரில் அமர்ந்த படி தன் இரவு உணவை பாட்டி ஊட்ட அடம்பிடித்த படி மெது மெதுவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

அவனை தூக்கும் நோக்கத்தில் அவனுக்கு அருகில் வரும் தன் மகனை பார்த்து முறைத்தவர்,
"வீட்டுக்குள்ள வந்ததுமே கொழந்தய தூக்க வராதேன்னு எத்துனை தடவ சொல்லிருக்கேன்.
இப்போ பாரு சாப்பிடுறவன வேற குழப்ப போற"
நவாவோடு கடிந்து கொண்டார் நிகிழினி.

"ஹீ ஹீ...
ஆமா சொல்லிருக்க இல்லமா. எனக்கு தான் அடிக்கடி மறக்குது.
வயசாகிடுச்சுல"
என்று நவா கூறிக்கொண்டிருக்கும் போதே நிஷ்மிதாவுடன் சமையல் அறைக்குள் நுழைந்தான் அபிஜித்.

"அப்பா"
என்று பெரியவன் நவாவின் கால்களில் தொங்கிக்கொள்ள ஆவலுடன் அவனைத் தூக்கி எடுத்து முத்தம் கொடுத்தவன்,

"அப்பா ப்ரஷப் ஆகிட்டு வந்துடுறேன் அபி"
என்று கூறி அவனை கீழே வைக்க.

"ஆமா கண்ணா அப்பா இப்போ வந்துருவாறு.
சாப்பிடுற கொழந்தயையும் குழப்பினதுக்கு அப்புறமா தான் அப்பாவுக்கு இதெல்லாம் தோனிருக்கு"
என்று கூறி மீண்டும் நவாவை முறைத்தார் நிகிழினி.

"எனக்கிருந்த கண்ணாங்குற பெயராவது இப்போ எனக்கில்ல.
எல்லாம் காலக்கொடுமை"
என்று போலியாக முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு போக எத்தணித்த நவாவை இழுத்து கன்னத்தில் முத்தம் பதித்த நிகிழினி
"நீ தான் எப்போவும் என்னோட முதல் கண்ணன்டா"
என்றார்.

"அப்டி வரணும் என்னோட வழிக்கு.
இது தான் என் செல்ல அம்மா"
என்று அவனும் தன் அன்னைக்கு முத்தம் கொடுக்க அவனது ஜூனியர்ஸ் இருவரும் பற்கள் தெரிய சிரித்தனர்.

இது தான் நேரம் என்று சின்னவன் வாயில் உணவுக்கவளத்தை நிகிழினி திணித்து விட சிரித்த படியே அதை மென்றான் சின்னவன்.

"எங்க பேபிய காணோம்?"
இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கேள்வியை கேட்டான் நவா.

நிகிழினி பதில் சொல்ல வாய்திறக்கும் போதே முந்திக்கொண்டு
"பேபிக்கு ஹெஃடெக் பா"
தலையை தொட்டுக்காண்பித்துக் கூறினான் அபிஜித்.

"ஓஓஹ்...!
நா அம்மாவ பார்த்துட்டு வர்றேன். நீங்க குட்டி கூட ஹோஃம் ஒர்க் பண்ணுங்க"
என்றவன் அபிஜித்தை நிஷ்மிதாவுடன் அனுப்பி விட்டு அம்மாவின் அறைக்கு சென்று தலைவலிக்கு தடவும் தைல போத்தல் ஒன்றை எடுத்துக்கொண்டு மாடிக்கு விரைந்தான்.

____________________________________

தான் வந்தது கூட தெரியாமல் பெல்கனி ஊஞ்சலில் அமர்ந்த படி வானத்தையும் அதில் உள்ள கருமேகக் கூட்டங்களையும் இலக்கே இல்லாமல் வெறித்துக்கொண்டிருக்கும் தன் மனைவியை பார்க்க நிகிலுக்கு ஏனோ உயிர் ஒரு நொடி உடலை விட்டு பிரிந்து செல்வது போன்று இருந்தது.

அவளை உரசியபடி நெருங்கி அமர்ந்தவன் அவள் கன்னத்தில் இதழ் ஒற்றி எடுத்தான். அதற்கும் சனாவில் எந்த அசைவும் இல்லை. அவளது வலக்கையை எடுத்து தன் கையோடு கோர்த்துக்கொண்டவன்,
"குட்டிமா"
என்று மெதுவாக அழைத்தான்.

அவனைத் திரும்பி பார்த்தவளின் கண்கள் அதே வேகத்தில் கண்ணீரால் நிறைந்து பொள பொளவென கீழிமையைத் தாண்டிக் கொட்டியது.

அவளை இழுத்து தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டவன்,
"ஷ்ஷ்ஷ்...
என்னடா குட்டிமா இது.
ப்ளீஸ் அழாதடா.
டெய்லி இப்டி அழுத்துட்டே இருந்தா என்னடா அர்த்தம்.
ப்ளீஸ் வேணாம் டா."
என்று அவளது முதுகை வருடிக்கொடுத்தான்.

"ஏன் நிக்கி.
நம்மளுக்கு இப்டியே பேபி பிறக்காமலே போயிடுமா?"
என்று கேட்டவள் அவனது மார்பில் புதைந்த படியே மீண்டும் குலுங்கி அழத்தொடங்கினாள்.

"ஏன் குட்டிமா இப்படியெல்லாம் பேசுற. நமக்கு கண்டிப்பா கொழந்த பிறக்கும்டா. உன்னை மாதிரியே ஒரு குட்டி தேவத.
கூடிய சீக்கிரமாவே...!"
அவனது குரலும் கரகரப்புக்கு மத்தியில் தான் வெளிவந்தது.

"இதையே தானே நீ எனக்கு இத்துன வருஷமா சொல்லிட்டிருக்க.

ஏன் நிக்கி கடவுள் என்னைய மட்டும் இப்டி சோதிக்கிறார்.
என்னால முடியலடா. "
என்றவள் அவனை இறுகக்கட்டிக்கொண்டாள்.

"இல்லடா குட்டிமா.
கடவுள் நமக்கு சின்ன சோதனையா தான் தந்திருக்காரு.
டாக்டர் கூட நமக்கு கொழந்த பிறக்கும்னு தானே சொல்லிருக்கார். பிறக்கவே மாட்டாதுன்னு அவர் கூட நம்மள கைவிடலேயே.
ஸோ நாம கொஞ்சம் பொறுமையா வைட் பண்ணலாம்டா.
ப்ளீஸ் குட்டிமா.
இதையே யோசிச்சு யோசிச்சு எதுக்குடா உன் உடம்ப நீயா கெடுத்துக்குற.
லஞ்சும் நீ சரியா சாப்பிடலன்னு அம்மா ஒரே புகார்.
உன் உடம்ப நீயே கெடுத்துக்குட்டா நம்ம பாப்பா வர்றப்போ யாரு பாத்துக்குறது."
சீரியஸாக ஆரம்பித்து பாவமாக முடித்தான் நிகில்.

"நா அன்னேக்கு சொன்னத தான் இப்போவும் சொல்றேன் குட்டிமா.
இப்போ கொழந்த உருவாகுறதுக்கு நிறைய வேஸ் இருக்கு..."
மேலே சொல்லப்போனவனின் வாயை தன் கரத்தால் மூடிய சனா.

"இருந்துட்டு போகட்டும் நிக்கி.
எனக்கு உன் கொழந்த என் வயித்துல தான் வளரனும்..."
உணர்ச்சி வசப்பட்டபடியே சொன்னாள் சனா.

"ஓகே ஓகே காம் டவுன் டா.
அப்போ இப்டி இருந்தா சரியாடா?இதுக்கெல்லாம் நீ நேரத்து சரியா சாப்பிட்டு உன் ஹெல்த்த கவனிச்சுக்க வேணாம்.."

அவனை விட்டு மெதுவாக பிரிந்தவள்,
"ஓகே இனிமே ஒழுங்கா சாப்பிடுவேன்.

இப்போ எனக்கு நிஜமாவே பசிக்குது நிக்கி"
பாவமாக சொன்னாள் சனா.

"இது என் குட்டிமா"
என்று அவளது கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தவன் அவளை அழைத்துக்கொண்டு இரவு உணவிற்காக கீழே சென்றான்.

சனாவும் நிகிலும் திருமண பந்தத்தில் இணைந்து சுமார் ஏழு வருடங்கள் ஆகின்றன. இருவரும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்வதற்காக தங்களை பல்வேறு வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் விட்டனர். இதுவரை பார்த்த அனைத்து வைத்தியர்களுக்கு அவர்கள் இருவரிலுமே எந்த சிக்கலும் இல்லை என்று தான் கூறியிருக்கின்றனர்.

ஆனால் அதே வைத்தியருக்கும் மேலால் ஒருவன் இருக்கிறான் அல்லவா. அவன் கையில் தானே நாமே சுழன்று கொண்டிருக்கிறோம். அந்த கடவுள் தான் இவர்களுக்கு அந்த செல்வத்தை வழங்க வேண்டும்.

திருமணம் முடித்த ஒவ்வொரு தம்பதியினருக்கும் கடவுளால் வழங்கப்படும் பரிசு தான் குழந்தை என்பது. ஏனோ அந்த பரிசை இவர்களுக்கு கடவுள் இன்னும் வழங்கவில்லை.

__________________________________________

தைல போத்தலோடு தன் அறைக்கு விரைந்த நவாவின் கண்களுக்கு படுக்கையில் சுருண்டு கொண்டிருந்த ரிதூவே முதலாவதாக தெரிந்தாள். அவளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றிய உணர்வை தட்டி அடக்கிக் கொண்டவன் தைல போத்தலை அறை மேசை மீது வைத்து விட்டு வேகமாக ப்ரஷப் ஆகி வந்து அதனை எடுத்துக்கொண்டு மெதுவாக ரிதூவுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

"பேபி"
என்று மெதுவாக அழைத்தவன் அவளது நெற்றியை மென்மையாக நீவி விட்டான். நவாவின் அழைப்புக்கு செவி சாய்த்தவள் போல் அவன் மடிக்கு தன் தலையை இடம்பெயர்த்தாள் அவனவள்.

"என்னடா ஆச்சு?"
கேட்டபடியே தலையில் தைலத்தை தடவி லேசாக மசாஜ் செய்துவிட்டான்.

"தெரியலங்க. ஈவினிங்ல இருந்தே ஒரே வலி."
என்றவள் அவனது இடுப்பை கட்டிக்கொண்டாள்.

"ஏதாவது கூலா சாப்டியா பேபி."
யோசனையாகக் கேட்டான் நவா.

பலபோது கூலாக சாப்பிடும் எதுவும் ரிதூவிற்கு ஒத்துப்போகாது என்பதை ரிதூ அறிந்திருக்கிறாளோ இல்லையோ நவா இவற்றையெல்லாம் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றான்.

"ம்ஹும்"
என்றவள் மௌனமாக இருக்க அவனும் அவளது தலையை தேய்த்து விட்டபடி மௌனமாக இருந்தான். அவனது அந்த தீண்டல் கூட சுகமாக இருக்கவே அதை இரசித்தபடி கண்கள் மூடி அவனது மடியில் படுத்திருந்தாள் ரிதூ.

நிமிடங்கள் சில கடக்க வேகமாக
"அச்சோ"
என்ற படி எழுந்தவள்,
"நீங்க டீ சாப்டீங்களா?"
என்று கேட்டாள்.

"வேணாம்டா பேபி.
டிரெக்ட்டா டின்னரே எடுத்துக்கலாம்."
என்றவன் அவளை மீண்டும் தன் மடியில் சாய்த்துக்கொண்டான்.

"நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துப்பீங்களாங்க?"
மெதுவாக எழுந்து அவனது தோளில் சாய்ந்தபடியே கேட்டாள் ரிதூ.

"நா எப்போவாச்சும் உன்ன தப்பா எடுத்துப்பேனா.
அதென்ன... எப்போ பாரு ஏதாவது கேட்கணுமா இருந்தா இந்த டையலோக விடுறதே உன் வேலையா போச்சு"
போலியாக முறைத்துக்கொண்டு கேட்டபடி அவளது மூக்கை பிடித்து ஆட்டி வைத்தவன்,
"கேளுடா"
என்றான்.

"நீதன்..."
இழுத்தாள் ரிதூ. பதிலுக்கு "சொல்லு" என்ற பார்வை அவனிடம் இருந்து வந்தது.

மீண்டும் அவளிடம் இருந்து அதே "நீதன்..." வர,
இப்பொழுது ரிதூவை உண்மையாகவே முறைத்தான் நவா.

"சொல்றேன் சொல்றேன்."
என்றவள்,
"அதுவந்து...
நாம இன்னொரு கொழந்தய பெத்துக்கிட்டு..."
அவனது பார்வையில் மேலே சொல்லாமல் நிறுத்தினாள் ரிதூ.

"பெத்துக்கிட்டு.....?"
புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டு இருக்க, அவளை ஊடுருவும் பார்வை பார்த்தான் நவா.

"பெத்துக்கிட்டு இல்லங்க.
இன்னொரு கொழந்த பெத்து சனாக்கு கொடுக்கலாமா?"
பல நாள் அரித்துக்கொண்டிருந்ததை கேட்டாள் ரிதூ.

தன் மனைவியிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராதவன் இதற்கு தான் எப்படி பதிலளிப்பது என்று புரியாமல் ஒரு நொடி விழித்தான். பின் தன் மனைவி தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை கண்ணுற்றவன்,
" இன்னும் கொஞ்ச நாள் வெய்ட் பண்ணலாம் பேபி...

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது. உனக்கு ரொம்ப தான் தாராள மனசு"
என்று கூறி ஆர்ப்பாட்டமாக நகைத்து அவளை தன் முன்னால் இழுத்தவன் அவள் நெற்றியில் இலேசாக முட்டி அவளிதழில் அழுத்த முத்தமிட்டான்.

சின்னதாக கதவு தட்டும் சத்தத்தில் அவளை விலக்கியவன்,
"வந்துட்டான் என்னோட ஜூனியர்"
என்று போய் கதவை திறக்க மூன்று வயது இந்திரஜித் உள்ளே ஓடிவர அவனை அள்ளி எடுத்துக்கொண்டான் நவா.

________________________________

அன்று ஞாயிற்றுக்கிழமை. தூக்கம் கலைந்தும் எழும்ப மனமின்றி கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான் நவா. இது அவனுக்கு வாடிக்கை தான். அதிலும் அவனுக்கு ஒரு சுகம்.

கொட்டில் தூங்கிக்கொண்டிருந்த இந்திரஜித் தூக்கம் லேசாக கலையவே முனங்க ஆரம்பித்திருந்தான். புன்னகையோடு கொட்டிற்கு அருகில் சென்றவன் அதை மெதுவாக ஆட்டி விட அவ்வாறே உறங்கிப்போனான் நவாவினது சுப்பர் ஜூனியர்.

அப்படியே போய் மீண்டும் கட்டிலில் விழுந்தவனை உள்ளிழுத்த மெத்தையில் தானும் ஒட்டிக்கொண்டவன் தலையணையில் முகத்தை புதைத்துக்கொண்டான். இப்பொழுது அவன் மனைவி அவனை எழுப்ப வரவேண்டும் என்ற வேண்டுதல் அவனிடம். அவசர வேண்டுதலை கடவுளுக்கு பார்சல் செய்திருந்தான் நவா.

அடுத்து வந்த பத்து நிமிடத்தில் அவனது வேண்டுதல் கடவுளால் அப்ரூவல் பண்ணப்பட்டிருக்க ரிதூவை தன் கூண்டுக்குள் சிறை செய்திருந்தான் நவா.

_______________________________

தன் தோழிகளோடு பேசி சிரித்தபடி காலேஜின் மெயின் கேட்டில் இருந்து வெளியே வந்தாள் நிஷ்மிதா. வழமைக்கு மாறாக தன் அண்ணன் காலேஜூக்கு வெளியே காரில் சாய்ந்தபடி இருந்ததை கண்டவள் அவசரமாக தோழிகளிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு தன் அண்ணனிடம் விரைந்தாள்.

"நவாண்ணா"
அவனுக்கருகில் போய் மெதுவாக அழைத்தாள் நிஷ்மிதா. அவளது பார்வை அவனது முகத்தில் நிலைத்து நின்றது.

"ஹேய் வந்துட்டியா குட்டி.
நா கவனிக்கலடா.
வா போலாம்"
என்றபடி மறுபுறம்போய் இருக்கையில் அமர்ந்தான் நவா.

யோசனையோடே அவனைப் பார்த்தவள் எதுவும் கேட்காமல் முன் இருக்கையில் தானும் அமர காரை சீரான வேகத்தில் செலுத்த ஆரம்பித்தான். தங்கள் வீட்டிற்கு செல்லும் பாதையையும் தாண்டி வண்டி போவதை கண்டவள் யோசனையோடே தன் அண்ணன் புறம் திரும்ப, அதற்காகவே காத்திருந்தவன் போல் அவளைப் பார்த்து சிரித்து வைத்தவன்,

"ரொம்ப நாள் உன்கூட ஐஸ்க்ரீம் சாப்பிடல இல்ல.
அதான் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போலாம் குட்டி.
எனி ஆப்ஜெக்ஷன்ஸ்??" -சிரிப்போடே கேட்டான் நவா.

"இல்லை"
என்பது போல் வேகமாக வலமும் இடமுமாக தலையை ஆட்டிவைத்தாள் நிஷ்மிதா.

அது ஒரு பெரிய "கூல் பார்".
பல வகையான வண்ண வண்ண ஐஸ்க்ரீம் வகைகளும் மென்பான வகைகளும் மட்டுமே அங்கு விற்பனை பொருட்கள். தங்களுக்கு பிடித்தமான ஐஸ்கீரிமை ஓடர் செய்து விட்டு இருவரும் போய் ஒரு மேசையில் அமர தன் பார்வையை சுழல விட்டபடி இருந்தாள் நிஷ்மிதா. நவாவோ தன் போனில் கவனமாக எதையோ செய்துகொண்டிருந்தாலும் நிஷ்மிதாவையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

ஒருநிலையில் அவளது பார்வை வாசல் பக்கமாக செல்ல அப்பொழுது உள்ளே வந்து கொண்டிருந்தவனை பார்த்ததும் தானாக ஏதோ வந்து அவளது தொண்டையை அடைத்தது. சட்டென்று தன் அண்ணனை திரும்பிப் பார்த்தவள் தன் அண்ணனும் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள். சட்டென்று பார்வையை தாழ்த்திக்கொண்டவள் மனத்திலோ பல போராட்ட அலைகள்.

ஏன் இந்த பதட்டம் என்று அவளாலே கண்டு பிடித்துக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு தடுமாற்றம்.

வந்தவன் நேராக இவர்களை நோக்கி வருவதை உணர்ந்தாள் நிஷ்மிதா. என்றாலும் அவளது தலை இருந்த நிலையில் இருந்து உயரவில்லை. இவர்களை நோக்கி வந்தவன் நவாவுடன் கைக்குழுக்கியபடி இவர்கள் மேசையில் இவர்களுக்கு எதிரே அமர்ந்தான்.

அவனது குரலில் வேகமாக உயர்ந்த இவளது தலையைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான் நவா. நிஷ்மிதாவை நவா அவனுக்கு அறிமுகப்படுத்த அவனை ஏற்கனவே இவள் அறிந்திருந்தாலும் நாகரீகம் கருதி அவனைப் பார்த்து வழிந்து புன்னகைத்தாள் நிஷ்மிதா. அதே போல் நவா அவனையும் இவளுக்கு அறிமுகம் செய்து வைக்கத் தவறவில்லை. அப்படி அறிமுகப்படுத்தும் போது புதியவனை தன் நண்பனின் தம்பி என்று தான் அறிமுகப்படுத்தினான் நவா.

ஆர்டர் செய்த ஐஸ்க்ரீம் வரவே அதில் மூவருக்குமாக இருந்ததை பார்த்து விட்டு இவை அனைத்தும் தன் அண்ணனின் வேலைதான் என்பதை புரிந்து கொண்டாள் நிஷமிதா. ஆனால் எப்படி தெரியும் என்ற கேள்வி அவளை பாடாய் படுத்திக்கொண்டிருந்தது. ஒருவேளை தற்செயலாக இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்குமோ என்று பல சிந்தனைகள் அவளுக்குள்.

நவாவும் அந்த புதியவனும் பல நாள் பழக்கம் போல் பேசிக்கொண்டிருக்க நிஷ்மிதா அவனுக்கு அர்ச்சனை செய்தபடியே மெது மெதுவாக ஐஸ்க்ரீமை சாப்பிட்டாள். மூன்றாம் நபர் இருப்பதனால் அவளால் வழமையாக சாப்பிடும் ரசனையுடன் அதை சாப்பிட முடியவில்லை. அதனால் தான் என்னமோ அவனுக்கு இலவச அர்ச்சனை இன்று.

ஒருவாறாக அவன் நவாவிடம் விடைபெற்றுவிட்டு இவளுடன் தலையசைப்புடன் புன்னகையோடே விடைபெற்றவன், அத்தோடு நில்லாமல் இறுதியில் ஒரு அர்த்தப் பார்வை வேறு சிந்தினான். அதில் "நான் என்னை பற்றி மட்டும் யோசிப்பவனல்ல". என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது இவளுக்கு.

அவன் இவர்களை விட்டு நகரவும் நவா ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.
"நல்ல பையன் இல்ல குட்டி"
அவனது பார்வை இவளிடம் தான்.

இவளது தலை அனிச்சையாக "ஆம்" என்பது போல் மேலும் கீழும் ஆடினாலும் சட்டென்று இடமும் வலமுமாக ஆட்டிவைத்தாள்.

"யெஸ் ஓர் நோ?"
சிரித்த படியே கேட்டான் நவா.

ஒருவித அவஸ்தையாக தன் அண்ணனைப் பார்த்தாள் நிஷ்மிதா.

அவளது தடுமாற்றத்தை கண்டுகொண்டவனாக வாய் விட்டு சிரித்தவன் அவளது கையை அழுத்த பற்றிக்கொண்டான்.
"குழப்பமா இருக்கா குட்டி?"

அவனது கேள்விக்கு பாவமான ஒரு பார்வையை பார்த்து வைத்தாள் நிஷ்மிதா. தன் அண்ணனிடம் அவன் அனைத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளான் என்பதும் நவாவின் இக்கேள்வியில் நிஷ்மிதாவால் புரிந்துகொள்ள முடிந்தது.

"அவனோட பெயர் ஹர்ஷான். "
உனக்கும் தெரிந்து இருக்குமே என்ற தோரணையில் தான் தன் தங்கையைப் பார்த்தான் நவா.

"எனக்கு அது தெரியும் நவாண்ணா"
தடுமாற்றம் இல்லாமல் சொன்னாள் நிஷ்மிதா.

"அவன்பத்தி வேறென்ன தெரியும் குட்டி?"
முகத்தில் புன்னகை தாண்டவமாட ஆவலாகக் கேட்டான் நவா.

"......."
தான் குனித்த தலையை நிமிர்த்தாமல் மேசையை வெறித்தாள் அவனது தங்கை.

அவளைப்பார்த்து சிரித்து வைத்தவன்,
"யாராவது, ஒருத்தர் வந்து ப்ரொபோஸ் பண்ணா அழுவாங்களா குட்டி?"

"......"

"ஏன்டா குட்டி...
பிடிச்சிருந்தா ஓகே சொல்லணும் பிடிக்கலையா நோ சொல்லணும்.
அதவிட்டுட்டு யாராச்சும் அழுவாங்களா?"

"......"
பதிலே இல்லை அவனது தங்கையிடம்.

"நா டிரெக்ட்டாவே கேக்குறேன்டா.
உனக்கு அவன பிடிக்கலையா?"
நிஷ்மிதாவின் மேல் இருந்த நவாவின் பார்வை கூர்மையாகியது.

"தெரியலணா."
மெதுவாக பதில் வந்தது.

"நான் பிடிச்சிருக்கான்னு கேக்கல குட்டி. பிடிக்கலையான்னு தான் கேட்டேன். ஸோ யெஸ் ஓர் நோ சொல்லு" -நவா

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தன் அண்ணாவை பார்த்து வைத்தாள் இவள்.

"அப்போ உனக்கு அவன பிடிக்காம இல்ல. உனக்கு அவன பிடிச்சிருக்கு. அதனால தான் "நோ"னு ஒரு வார்த்த சொல்ல இவ்ளோ யோசிக்கிற குட்டி.

உன்ன உனக்கு தெரிஞ்சதவிட எனக்கு உன்ன தெரியும்டா. ஒருத்தர பிடிக்காட்டி "நோ"னு சொல்ல சாதாரணமா நீ இவ்ளோ யோசிக்கமாட்ட.

உன் வாழ்க்கைய நீ தான் வாழனும் குட்டி. இன்னொருத்தர் வந்து ஒருத்தரோட வாழ்க்கையில எதனயும் திணிக்க முடியாது. அப்டி திணிக்கவும் கூடாது.

ஹர்ஷான் என் கிட்ட எல்லாம் சொன்னான். ரொம்ப நல்ல பையன் அவன். அதுக்காக நீ அவன தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு கெடயாது. உனக்கு பிடிச்சா அவன்கூட உனக்கு கல்யாணம் இல்லாட்டி விட்டுறலாம். அவனுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால தான் நா உன்கிட்ட இதபத்தி பேசிட்டிருக்கேன்டா.

இதப்பத்தி இப்போவே பேச வேணாம்னு தான் இருந்தேன். ஆனா நீ கொஞ்ச நாளாவே டிஸ்டர்ப்பன்ஸா இருக்குறதா தோணிச்சு. அதான் அம்மாகிட்டயும் கேட்டுட்டு உன்ன கூட்டிட்டு வந்தேன்."
இவன் முடிக்கும் போதே

"அம்மாவுக்கும் தெரியுமா?
என்கிட்ட ஒரு வார்த்த கேட்கல."

"ஹஹ்ஹா.
நான் தான் கேட்க வேணாம்னு சொன்னேன் குட்டி.
ஆனாலும் அம்மா ரொம்ப மோசம்.
நான் சொன்னதும் அவ்ளோ சிரிப்பு அம்மாவுக்கு.
எப்போ பாரு நீ எனக்கு மட்டும் ஒருத்தன் கூட செட் ஆக மாட்டான்னு சொல்லுவ இல்ல."
சொன்னவன் மீண்டும் வாய்விட்டு சிரிக்க அவன் கையை கிள்ளி வைத்தாள் குட்டி.

"ஹர்ஷான் வேறயாருமில்லடா. நம்ம ஹரிஷ், பவித்ராவோட தம்பி தான். அவன் அவங்களோட பாட்டிகூட தான் வளர்ந்தது, இருந்தது, படிச்சது எல்லாம். அதான் உனக்கு அவன தெரியல."

"ஓஓஹ்"
குரலில் ஒரு தெளிவு.

"இப்போ வீட்டுக்கு போலாமா?"
என்று கேட்ட நவாவின் கன்னத்தில் சட்டென்று முத்தம் கொடுத்தவள்,

"தேங்க்ஸ்ணா.
நீ எப்போவும் என்ன குட்டி குட்டினு சொல்லியே கூப்பிடுவ இல்ல. அதான் ஏதாவது தப்பா முடிவு பண்ணிடுவோமோன்னு பயந்துட்டேன்ணா."

"அடிப்பாவி.
எதையும் எதையும் கனெக்ட் பண்ற பாரு. நீ கேடி குட்டி. இதுக்கும் பழிய என் மேலயா போடுற.
ராமா!!! நீ தான் என்ன இந்த பெண் குலத்திடம் இருந்து காப்பாத்தனும்."
மேலே பார்த்து கும்பிடு போட்டான் நவா.

வராத காலை வந்தததாக பிக்கப் செய்தவள்,
"ஹலோ அண்ணி"
என்று சொல்ல ,
"எஸ்கேஎப்" என்று சிரித்தபடி அவ்விடம் விட்டு நகர்ந்தான் நவா.

பல நாள் மனதில் இருந்த குழப்பம் விலகி நிம்மதி பரவியிருக்க சிரித்த படி தன் அண்ணன் பின்னால் சென்றாள் தங்கையவள்.

_________________________________

"செல்லம்"

"......"

"செல்லம்"

"......"

"ஏய் செல்லம்"

"......"

"மேக்கப் போக்ஸ்'

"......"

"அடியேய் CB"

"ம்ம்ம்ம்" என்று முனங்கினாள் அஞ்சலி. அவளை இவ்வளவு நேரம் துயில் எழுப்பிக்கொண்டிருந்தவன் தர்ஷன். அவள் கணவன். நவாவின் நண்பன். டாம் அண்ட் ஜெரியாக நவாவின் திருமணத்தில் சுத்திக்கொண்டிருந்த அதே இரண்டு ஜீவன்களும் தான்.

"பொண்டாட்டி!!!
உன் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் இன்னேக்கி நம்ம வீட்டில லன்ஞ்ச் ரெடி பண்ணிருக்கோம்" அவள் தலையை வருடியவாறே சொன்னான் தர்ஷன்.

"தெரியும் புருஷா"
என்றவள் அவனையும் கட்டிலுக்கு இழுத்து அவன் மீது ஒரு காலையும் கையையும் போட்டுக்கொண்டாள்.

"கடவுளே!!!
எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை.
இங்க மட்டும் எல்லாமே மாறி நடக்குதே"
போலியாக வருத்தப்பட்டான் தர்ஷன்.

"புரியலயே தர்ஷு"
என்ற அஞ்சலி மேலும் அவனை நெருங்கிப்படுத்தாள்.

"ஹஹ்ஹா.
இதுல புரியுற மாதரி வேற உனக்கு சொல்லனுமா டார்லி.
ஹ்ம்ம்ம்...

அது என்னான்னா...
இங்க நீ வெட்கப்பட வேண்டியதுக்கு நான் வெட்கப்படுறன்.
நான் உனக்கு கவித சொல்லபோனா நீ என்ன வர்ணிச்சு கவித சொல்ற.
மோரினிங் நீ பெட் காபியோட என்ன எழுப்புறதுக்கு பதிலா நா உன்ன வந்து எழுப்பிக்கிட்டு இருக்கேன்.
நா உன்ன இழுத்து வெச்சிக்கிட்டு ரொமேன்ஸ் பண்ணணும்னா நீ என்ன இழுத்து போட்டுக்கிட்டு ரொமேன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்க.
ஹ்ம்ம்ம். இப்டி நிறைய சொல்லலாம்.

சிரித்த படி இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவள், அவனை மேலும் இறுக்கிக்கொண்டு,
"இதெல்லாம் நீ செஞ்சா என்ன நா செஞ்சா என்ன மாமா"
என்றவள்,
"நாம தான் ஒன்னுக்குள்ள ஒன்னாச்சே"
என்று அவன் காதில் கிசுகிசுத்தாள் அஞ்சலி.

"இப்டியே கவுத்திடு ராட்ஷசி."
என்றவன் அவள் காதில் இதழ் உரசவும் இவர்களது நான்கு வயது குழந்தை தூக்கம் கலைந்து எழும்பவும் சரியாக இருந்தது.

"அது எப்டீங்குறதே தெரியல. நா உன்ன கொஞ்சலாம்னு வரும் போது மட்டும் என் வாரிசு விழிச்சுக்குறான்"
மனைவியைப் பார்த்த படியே சொன்னான் தர்ஷன்.

"ட்ரைனிங் ட்ரைனிங்"
இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள் அஞ்சலி.

"நைட் மாட்டாமலா போயிடுவ. அப்போ கவனிச்சுக்கிறேன் உன்ன"
தர்ஷனின் பார்வை மனைவியை வருட செவ்வானமாக சிவந்தாள் அஞ்சலி.

"அப்பாடா...!
இதுக்காச்சும் வெட்கப்படுறியே"
சொன்னவன் மறுநொடி அறையில் இருக்கவில்லை. இருந்தால்தான் அஞ்சலியின் அடியை தாங்க வேண்டுமே.

இன்று மதியம் இவர்கள் வீட்டில் நண்பர்களான நவா -ரிதூ, சனா-நிகில், வித்யா-வினீத், நேஹா-அர்ஜூன் என அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல நாள் கழித்து நண்பிகள் அனைவரையும் ஒரே நேரத்தில் சந்திக்க போவதை எண்ணி மகிழ்வுடன் சமையலில் ஈடுபட்டிருந்தாள் அஞ்சலி.

மதிய வேளை நெருங்க இவர்கள் வீடே சிரிப்பாலும் பேச்சாலும் நிறைந்திருந்தது. சனாவும் கொஞ்சம் தெளிவாக இருந்தாள். ரிதூவின் குழந்தைகள் இரண்டும் ஏனைய குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதும் கொஞ்ச நேரத்துக்கு ஒரு முறை தன் அம்மாவை தேடினார்களோ என்னமோ ஆனால் "அத்தை அத்தை" என்று சனாவின் மடியில் வந்து அமர்வதும் கொஞ்ச நேரம் கழித்து போவதுமாக இருந்தனர். அப்பொழுதெல்லம் அவர்களை வாரி அணைத்துக்கொண்டாள் சனா.

இப்படி ஒரு முறை இந்திரஜித் வந்து அமர்ந்து விட்டு வேகமாக இறங்கி ஓட அவன் விழுந்து விடாமல் இருக்க அவனை பிடிப்பதற்காக பின்னாலே ஓடிய சனா அவனை பிடிப்பதற்கு முன்பாகவே மயங்கி சரிந்தாள்.

ஏதோ விழும் சத்தம் கேட்டு இந்தப் பக்கம் திரும்பிய ஆண்கள் சனா கீழே மயங்கி விழுந்திருப்பதை பார்த்து விட்டு இவ்விடம் விரையவே அனைவருக்கும் முன்பாகவே "சனா" என்ற கூவலுடன் மின்னலென வந்த நிகில் அவளை அள்ளிக்கொண்டு காரை நோக்கி ஓட, "ரிதூவிடம் சொல்லி விடு தர்ஷு" என்று திரும்பிப் பாராமலே சொன்ன நவாவும் பின்னாலே வேகமாக ஓடினான்.

அவளுக்கு வந்திருப்பது சாதாரன ஒரு மயக்கம் என்றோ கொஞ்சம் தண்ணீர் தெளித்துப் பார்க்கலாம் என்றோ கூட அந்த ஆண் மக்கள் யாருக்கும் தோன்றவில்லை. திடீரென உருவான கலக்கம். சனாவின் அண்மைக்கால அமைதி இதுவெல்லாம் அவர்களை இப்படி யோசிக்க வைக்கவில்லை.

நவா காரை வேகமாக ஓட்ட பின்னாலே சனாவின் கன்னத்தை தட்டிய படி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான் நிகில். ஏதோ பெரியதாக நடந்த விபத்து போன்ற ஒரு எண்ணம் அவன் மனதினுள்.

செய்தி அறிந்த தோழிகளும் ஒரே பரபரப்பாக இருக்க இவர்கள் வைத்தியசாலையை அடைந்திருந்தனர். ஊழியர்கள் சனாவை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி அவசரப்பிரிவுக்குள் அழைத்துச்செல்ல வெளியே நிகிலும் நவாவும் ஒரே மனநிலையில் நடைபயின்று கொண்டிருந்தனர்.

"ந..வா சனாவுக்கு எதுவும் ஆகாதில்ல. என.. க்கு எனக்கு பயமா இருக்குடா..."
நடுங்கும் தன் கரத்தால் நவாவின் தோளைப்பற்றி கண்களை அழுத்த மூடிக்கொண்டவனின் இமைகளுக்கு இடையில் கண்ணீர் வழிந்தது.

அவனது தோளைச்சுற்றி கைபோட்டு
"ஹேய் கூல் நிகி. நம்ம சனாவுக்கு எதுவும் ஆகாது. ஆகவும் விட மாட்டேன்"

நவா சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெளியே வந்த டாக்டரை இருவரும் அவசரமாக அணுக அவரது சிரித்த முகம் நிகிலுக்கு எதை பறைசாற்றியதோ அவர் விடயத்தை சொல்வதற்கு முன்பாகவே ஊகித்தவன் அவர் "கங்கராட்ஸ்...." என்று ஆரம்பிக்கும் போதே முந்திக்கொண்டு "தேங்க்யூ டாக்டர்" என்றவன் அவரை கடந்து சனா இருக்கும் அறைக்குள் மின்னலென நுழைய நிகிலின் நிலையை டாக்டருக்கு விளக்கினான் நவா. அவரும் சிரித்தபடியே அதை ஏற்றுக்கொண்டு நவாவின் தோளை தட்டிக்கொடுத்து விலகிச்சென்றார்.

மின்னலென நுழைந்த தன் கணவனை இழுத்து அணைத்தாள் சனா. எலும்புகள் முறிந்து விடுமோ என்று பயப்படும் படியான இறுக்கம். வினாடிகள் கரைய சனாவின் அணைப்பு மேலும் மேலும் இறுகியதே தவிர கொஞ்சம் கூட தளரவில்லை.

"குட்டிமா..."

".........."

"குட்டிமா..."

"............."

"வயித்துல பேபி இருக்குடா. பேபிக்கு ஏதாச்சும் ஆகிடப்போகுது"
அக்கறையாக சொன்னான் நிகில். அவனுக்கும் சனாவை இயல்பாக்க வேறு என்ன சொல்வதென்று புரியவில்லை.

மெது மெதுவாக அணைப்பை தளர்த்திய சனா நிகிலின் முகத்தை சட்டென்று தன் கைகளில் ஏந்தி முத்த மழை பொழிந்தாள். கொஞ்ச நேரத்தில் மாறி மாறி முத்தமே அவர்களுக்கு இடையில் பேசும் மொழியாகியது.

அறைக்குள் இவர்கள் இருவரும் இவ்வாறு இருக்க வெளியில் அனைவருக்கும் தகவல் பரிமாற்றும் ஊடகமாகவே மாறியிருந்தான் நவா. இவர்களது முழுக்குடும்பமுமே உச்சக்கட்ட சந்தோஷத்தில் திளைத்தது. நண்பிகள் ஒரு பக்கம் சந்தோஷத்தில் மிதந்தனர். நிகிழினி உடனே பூஜை அறையில் நுழைந்து கொண்டார். இந்த பரிசிலை இவர்களுக்கு அளித்தது கடவுள் அல்லவா. அதுவும் ஏழு வருடங்கள் கழித்து.

ஒருவரின் அணைப்பில் மற்றவர் எவ்வளவு நேரம் இருந்தனரோ நிகிலின் அலைபேசி சத்தம் எழுப்பவும் தான் தம்நிலை உணர்ந்தனர். அழைத்தது நிகிழினி. அதை தொடர்ந்து நிகிலின் அம்மா. அழைப்பை ஏற்று இருவருமாக பேசி முடித்தனர்,

"குட்டிமா நாம வீட்டுக்கு போலாமாடா?"
அவளிடம் இருந்து என்ன பதில் வரும் என்பதை அறிந்திருந்தாலும் கேட்டான் நிகில்.

"அஞ்சலி வீட்டுக்கு போலாம் நிக்கி. ப்ளீஸ்" என்றாள்.

அவளைப்பார்த்து அர்த்தமாக சிரித்தவன்,
"ஓகே. அப்போ அங்கயே போலாம் "
என்றவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் சனா.

கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த தன் அண்ணனைப் பார்த்தவள் நிகிலின் தோளில் இருந்து விலகி நவாவை ஆரத்தழுவிக்கொண்டாள். நவாவின் கண்களுமே ஆனந்தத்தில் கலங்கியிருந்தது.

வாங்கிய இனிப்புக்களோடு இவர்கள் மூவரும் அஞ்சலியின் வீட்டினுள் நுழைய தோழர்கள் அனைவரும் ஒன்றாகவே வாழ்த்துக்கூறி இவர்களை வரவேற்றனர். அந்த நிமிடம் சனாவின் நெஞ்சில் அப்படியொரு ஆனந்தம். பல நாள் கனவு ஈடேற்றம் அடைந்த பெருமிதம் அவளிடம். இவ்வளவு காலம் அவளது முகத்தில் குடிகொண்டிருந்த கலக்கம் நீங்கி பிரகாசம் குடிகொண்டிருந்தது. முகத்தில் புன்னகையோடே தன்னவளின் தெளிந்த முகத்தை தன் மனக்கணக்கில் பதிவு செய்து கொண்டிருந்த நிகில் நண்பர்களின் கேலிப் பேச்சில் மறுபுறம் திரும்பிக்கொண்டான்.

எந்த சிக்கலும் இல்லாமல் சாப்பிடும் மனைவியின் பக்கம் அடிக்கடி பார்வையை செலுத்தியபடியே சாப்பிட்டு முடித்தான் நிகில்.

ஆண்கள் அனைவரும் ஒரு பக்கமாக அமர்ந்திருக்க பெண்கள் அனைவரும் இவர்களுக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்தனர். ஜூனியர்ஸ் அனைவரும் தங்கள் விளையாட்டில் மும்முரமாக இருந்தனர்.

சோபாவின் நுனியில் அமர்ந்த படி சனாவின் மேல் பார்வையை பதித்திருந்தான் நிகில். இவனை கேலியாகப் பார்த்த நவா,
"டேய் மச்சான் சனாவ கூட்டிக்கிட்டு பேசாமா வீட்டுக்கே ஓடுரியா."
எனக்கேட்க,

"ஈஈஈஈஈ."
என்று அவனைப் பார்த்து அசடுவழிந்தவன்,
"அதொன்னும் இல்லடா.
அவள் எந்த குழப்படியும் இல்லாம சாப்பிட்டாள் இல்ல. அதான் வாமிட் பண்ணிருவாளோன்னு பயமா இருக்கு"
பாவமாக சொன்னான் நிகில்.

"நீயே அவள வாமிட் பண்ண வெச்சிருவ போல.
பேசாம இரு"
என்ற நவா சனாவைப் பாரு என்று கண்களாலே நிகிலுக்கு காட்ட முகம் முழுவதும் பிரகாசமாகி இருக்க தன் தோழிகளுடன் கதையளந்து கொண்டிருந்தாள் அவள்.

கடந்து வந்த பத்து மாதங்களும் சனாவை ஒவ்வொரு நொடியும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டான் நிகில்.

இதோ இன்று அவர்களது குட்டி தேவதைக்கு பெயர் சூட்டும் விழா. நவாவின் வீட்டிலே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க பிங் நிற ஆடையில் தன் குட்டி குட்டி கால் கையுடன் தேவதையாகவே மிளிர்ந்தாள் அவள்.

சுபநேரத்தில் "விதர்ஷிகா" என்ற பெயரை தங்கள் தேவதைக்கு சூட்ட அவ்விடமே உறவினர்கலன்,நண்பர்கள் துணையால் கலகலப்பாக மாறியிருந்தது.

அன்று இரவு தன் அறைக்கு வந்த நவாவின் கண்களில் முதலில் பட்டது கொட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் இந்திரஜித் தான். அபிஜித் பல போது நிஷ்மிதாவுடன் உறங்குவது வழக்கம். இன்றும் அதே போல் அவன் தன் அத்தையுடன் உறங்கச்சென்றிருந்தான்.

படுக்கையை சரி செய்து கொண்டிருந்த தன் மனைவியை பூனை நடைபோட்டு நெருங்கிய நவா, பின்னால் இருந்து அணைத்து அவள் வெற்றிடையைப் பிடித்து தன்னோடு சேர்த்துக்கொண்டான். என்னவோஅவனது முதல் தொடுகை போல் கூச்சத்தில் நெளிந்தவள்,

"நமக்கு கல்யாணம் ஆகி எட்டுவருஷம் ஆக போகுது."
கூச்சத்தில் உட்சென்ற குரலில் சொன்னாள் ரிதூ.

"அதுக்கு என்ன பேபி"
தன் மீசையால் அவள் கழுத்தில் குறுகுறுப்புக் காட்டினான் நவா.

"நமக்கு ரெண்டு பசங்க இருக்காங்க."
இப்பொழுது கூச்சத்தில் நெளிந்து கொண்டே சொன்னாள் ரிதூ.

"ஓஓஹ்...
அதனால உன்ன மாதிரியே பொண்ணு ஒன்னு பெத்துக்கலாம்னு சொல்றியா பேபி"
சிரிப்புக்கு மத்தியில் கேட்டபடி அவளை தன் புறம் திருப்பினான் நவா.

"ம்ஹும். நா ஒன்னும் புது பொண்டாட்டி இல்லன்னு சொல்ல வந்தேன் "
என்றவள் வளைவாக இதழ் சுழிக்க வேகமாக அதை சிறை செய்தவனின் காதல் முதல் இருந்ததை விட அதிகரித்திருப்பதை உணர்ந்தாள் ரிதூ.

சிறிதுநேரம் கழித்துஅவளை விடுவித்தவன் அவளை அணைத்து கழுத்தில் முகம் புதைத்தவாரு.

"நூறு வருஷம் போனாலும் நீதான் பேபி என்னைக்குமே எனக்கு புதுப்பொண்டாட்டி"
என்று சொல்ல.

"லவ் யூ"
என்ற படி அவனுள் புதைந்தாள் ரிதூ.

"ஐ லவ் யூ மோர் அண்ட் மோர் எவ்ரி டே பேபி"
என்றவன் அவளை தன்னோடு இறுக்கிக்கொண்டான்.

💞இனி எல்லாம் சுகமே💞

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro