பகுதி 45

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மழைச்சாரல் விழும் வேளை
மண்வாசம் மணம் வீச
உன் மூச்சி தொடுவேன் நான் மிதந்தேன்
ஹோ கோடையில அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
ஈரத்தில அணைக்கிற சுகத்த
பார்வையிலே கொடுத்தாயே
பாதகத்தி என்னை
ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல நான்

"முடியாது மேஹா சொன்னா சொன்னது தான்" மனோ லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டே அவளிடம் கூற

அவனைப் பார்த்து முறைத்தவள்
அவனது லேப்டாப்பை பிடுங்கி அருகில் வைத்து விட்டு அவன் மடிமீது அமர்ந்து அவன் கழுத்தைத் தன் கைகளால் கட்டிக் கொண்டு"மனோ பாவால என் தங்கம்ல என் செல்லம்ல ப்ளீஸ் வேணாமே" என கெஞ்ச

இப்போது அவன் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு" என் செல்லக் குட்டில என் அம்முக்குட்டில நம்ம போறோம்" எனக் கூறி சிரிக்க

அவனை முறைத்தவள்
எழுந்து அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.

சிரித்துக் கொண்டே அவளருகில் படுத்தவன் அவளைத் தன்புறம் இழுக்க அவன் புறம் திரும்பியவள்
" பாவா பாவா பாவாவாவா " என இழுக்க

"சொல்லுடி செல்லம்"

"என் செல்ல பாவா என் அம்மு பாவா நான் என்ன சொன்னாலும் கேட்பீங்க தானே"

" ம்ம் கேட்பேன்"

" நம்ம இன்னும் ஒரு வாரம் இங்கே இருந்துட்டு போலாமே அம்மா,அப்பா,அகி பேபியை லாம் விட்டுட்டு எப்படி அங்கே போறது"

"இப்போ உனக்கு அவங்களை விட்டுட்டு போறது தான பிரச்சனை அது தானே"

"ஆமா ஆமா " என அவள் வேகமாக தலையாட்ட

"அப்போ அவங்களையும் அங்கே கூட்டிட்டு போலாம்" எனக் கூறிச் சிரித்தவனை

"அய்யோ என்ன சொன்னாலும் இவர் இப்படி அணை போட்டா எப்படி மேஹா நீ பாவம் டி"  என மனதில் நினைத்தவள்

"அது அதுஅவங்களுக்கு... அவங்க அங்க இருக்க முடியாது மனோ சார் அங்கே எப்படி இருப்பாங்க...."

" ஏன் இருக்க மாட்டாங்களா?? அதெல்லாம் இருந்துப்பாங்க" என்றவன் அவள் திருத்திருவென முழித்துக் கொண்டே வேறு என்னவெல்லாம் சொல்லி இவனை சரி செய்யலாம் என யோசிக்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

" அங்கே இரண்டு ரூம் தானே இருக்கு"

" பரவால அட்ஜெஸ்ட் பண்ணிப்பாங்க"

"ம்ம்க்கும்" என்றவள்

" ப்ளீஸ் மனோ பாவா நம்ம இங்கேயே இருக்கலாமே" எனக் கெஞ்ச

" ஏண்டி உனக்கு என்ன தான் பிரச்சினை ஏன் ஊருக்கு போக வேணாம்னு சொல்லுற"

"ம்கக்கும் அங்கே போயிட்டா காலேஜ் வேற போகணுமே அது கடுப்பால இருக்கும்...இவரு வேற சும்மா தொணத்தொணுனு தொல்லைப்  பண்ணிக்கிட்டு" என மனதில்  புலம்பியவள் "ஒன்னுமில்லையே ஒன்னுமில்ல நீங்க ஊருக்கு போங்க பா நான் வரமாட்டேன்" எனக் கூறி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன்
"ஸ்கூல் பாப்பா மாதிரி இன்னும் லீவ் முடிஞ்சு போக கஷ்டப் படுறத பாரு அழகு செல்லம் " என மனதில் கொஞ்சியவன்

" அப்போ நான் மட்டும் ஊருக்கு போகணும் நீ வரமாட்ட அப்படிதானே..."

"ஆமா அப்படிதான் நான் வரமாட்டேன்"

" நான் இல்லாம இருந்துப்ப அப்படிதானே"

"ஆமா இருந்துப்பேன்"

அய்யய்யோ இருப்பேனு சொல்லிட்டேன் ஆனால் என்னால இவர் இல்லாம இருக்க முடியாதே...கடவுளே காப்பாத்து...அந்த சொட்ட தலையன் கொடுத்த அசைன்மெண்டை முடிக்கல இவரு வேற சும்மா வா வா னு தொல்லை பண்ணிக்கிட்டு நாளைக்கு முடிக்காம போன முட்டி போட வைப்பாரே ஸ்கூல் ஸ்டூடண்ட் மாதிரி..." என்றவள் புலம்பிக் கொண்டிருக்க

அவளைத் தன்புறம் திருப்பியவன்
அவள் என்ன எனக் கேட்பதற்குள் அவள் இதழ்களைச் சிறை செய்ய
திடீர் தாக்குதலில் மொத்தமாக அதிர்ந்தவள் திருத்திருவென விழிக்க

அவளை விடுவித்தவன் " நாளைக்கு என்கூட வர தானே"எனக் கேட்க

"இல்..." அவள் முடிப்பதற்குள் மறுபடியும் அவள் இதழ்களை சிறை செய்ய மொத்தமாக அவனுள் கறைந்தவள் " நாளைக்கு " என ஆரம்பிப்பதற்குள் " நான் வரேன் " என வேகமாக மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல் தலையாட்ட

" என் செல்லம் " என்றவன் அவளை அணைத்துக் கொண்டு படுத்தான்.

அதிகாலை நான்கு மணிக்கே எழுந்தவன் குளித்து ரெடியாகி மேஹாவை எழுப்ப கண்களைக் கசக்கி கொண்டே எழுந்தவள் " ஏன் மனோ சார் மிட் நைட்ல எழுப்புறீங்க" எனக் கேட்க

"நாலு ஆச்சு டி இது உனக்கு மிட் நைட்டா"

" அய்யோ நாலா?? அப்போ கண்டிப்பா இது மிட் நைட் தான் உங்களுக்கே இது அநியாயமா  இல்லை.
மிட் நைட்ல எழுந்தா சாமி கண்ணை குத்திடும் நான் தூங்க போறேன் பா" என்றவள் போர்வையை போத்திக் கொண்டு படுக்க

அவளை தூக்கியவன் " இப்போ நீயே குளிக்க போறியா?? இல்லை நான் குளிக்க வைக்கவா " எனக் கேட்க

அய்யோ என துள்ளி குதித்து கீழே நின்றவள்

"நானே போறேன்"

" ச்சச்ச இங்கே லேட் பண்ணிட்டா இன்னைக்கு கட் அடிச்சுடலாம்னு நினைச்சேனே எல்லாம் போச்சா..."என புலம்பிக் கொண்டே உள்ளே செல்ல

மறுபடியும் அவன் புறம் திரும்பியவள் " கண்டிப்பா குளிக்கணுமா?? சில்லுனு இருக்கும் எனக்கு வேற குளிருமே" எனக் கூறி உதட்டைப் பிதுக்க

" சுடு தண்ணீ தான் இருக்கு நீ போ" என மனோ கூற

" ம்க்கக்கும் சொட்ட தலையன் கிட்ட இன்னைக்கு சிறப்பு பூஜை கன்பார்ம்" என புலம்பிக் கொண்டே உள்ளே சென்றாள்.

அனைவரிடமும் கூறிக் கொண்டு கிளம்பியவர்கள் தங்களின் பிளாட்டிற்கு வர ஏழு மணியாகிவிட்டது.

விருப்பமே இல்லாமல் உள்ளே நுழைந்தவள் சோபாவில் அமர
" அவள் கைகளில் காபியை கொடுத்தவன் இந்தா குடி நான் ரெடியாகிட்டு வந்துடுறேன்" எனக் கூறி மனோ அறைக்கு சென்று விட

" இன்னைக்கு நீ செத்த மேஹா போச்சு எல்லாம் போச்சு...சொட்ட தலையனுக்கு ஏற்கனவே உன் மேல செம காண்டு இப்போ வெச்சு செய்ய போறாரு..."புலம்பிக் கொண்டு இருக்க

ப்ளாக் சர்ட்டில் முழுக்கை சர்ட்டினை மடக்கி விட்டுக் கொண்டே மனோ வெளியே வர இதுவரை இருந்த பயம் எல்லாம் பறந்தோடி விட்டது.

சந்தன கீற்று ,தலைக்கு குளித்திருப்பதால் அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருக்கும் முடி, தன் அக்மார்க் புன்னகையுடன் அவளைப் பார்த்து கண்ணடிக்க

அவனைப் பார்த்து பேந்த பேந்த விழித்தவள்  இன்னும் அவனை வைத்த கண் வாங்காமல் பார்க்க

" பாவா அவ்ளோ அழகாவா இருக்கேன்" எனக் கூறி கண் சிமிட்ட

" இல்லையே" என்றவள் தன் அனைத்துப் பற்களையும் காட்ட

"தெரியுது" என்றவன் காபி குடிக்க

அவனருகில் சென்றவள்
கைகளை பிசைந்து கொண்டே நின்றாள்.

" மேஹா செல்லம் நீ இன்னைக்கு லீவ் போட்டுக்கோ டா நான் கண்டிப்பா இன்னைக்கு போகணும்.
நீ ரெஸ்ட் எடு...நாளைக்கு போகலாம் சரியா" எனக் கேட்க
அவனிடம் இன்னைக்கு லீவ் எடுத்துக்கவா என அவனிடம் கேட்க நின்றிருந்தவளுக்கு இது பேரதிர்ச்சியாக இருக்க
உடனே அவனை அணைத்துக் கொண்டவள் முகம் முழுவதும் முத்த மழைப் பொழிய
சிரித்துக் கொண்டே அதை ஏற்றுக் கொண்டவன் " லாலிபாப் லவ் யூ டி நேத்தே தெரியும் நீ காலேஜ் போக கஷ்டப்பட்டுட்டு தான் வர மாட்டேனு சொல்லுறேனு" எனக் கூறிச் சிரிக்க

அவனைப் பார்த்து ஈஈஈஈ என இளிக்க
அவள் நெற்றியில் முத்தமிட்டு பாய் டி செல்லம் எனக் கூறி மனோ செல்ல

"பாய் மனோ சார்" என்றவள் சிரிக்க

அவளை முறைத்துக் கொண்டே மனோ சென்றான்.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

கைகள் நடுங்க மொபைல் கீழே போட்டவள் பிறகு தான் உணர்ந்தாள் இது கனவு என்பதை.

"சப்பா கனவுக்கா இப்படியா வீரப்பா  பேசிட்டு வேற வந்துட்டோம் இப்போ என்ன பண்ணலாம் " என யோசிக்க

" கால் பண்ணி யாரு பேசுறாங்கனு பாத்துட்டு நம்ம பேசலாம்..." என முடிவெடுத்து சரணிற்கு அழைத்தாள்.

" ஹலோ யாரு??"

" நீங்க யாரு " என திவி கேட்க

" நான் அச்சு சரண் மாமா எனக்கு சாக்லெட் வாங்கிட்டு இருக்காங்க"
எனக் கூற

" அச்சு மா நான் தான்டா உங்க அத்தை..." என திவி சிரித்துக் கொண்டே கூறினாள்.

" ஓஓஓ" என்றவள் " மாமா இதோ அத்தை பேசுறாங்க" என சரணிடம் கூற

" அச்சு மா மாமா கிட்ட கொடுக்காத டா நான் சொல்றதை மட்டும் மாமா கிட்ட சொல்லிடுங்க சரியா?? "

" ம்ம்ம சரி..."

"இன்னைக்கு ஈவ்னிங் ஆபிஸ்க்கு வர சொல்லிடு டா" எனக் கூறி கட் செய்து விட்டாள்.

அச்சு சரணிடம் கூற  நம்பர் வாங்கி பார்த்தவன் " இவ எதுக்கு கால் பண்ணிருக்கா" என யோசித்தவன் பிறகு ஒரு முடிவெடுத்து அச்சுவுடன் வீட்டிற்கு கிளம்பினான்.

" மாமா அது யாரு நிஜமாவே அத்தை யா" என அச்சு கேட்க

" அய்யோ இல்ல டா அவ சும்மா சொல்லிருக்கா" எனக் கூறியவன் ஏதேதோ கூறி சமாளிக்க

" அப்புறம் ஏன் நீ மினியன்❤❤ னு போட்டு ரெண்டு ஹார்ட் போட்டு சேவ் பண்ணிருக்க" எனக் கேட்க

" ஈஈஈஈ ஒன்னுமில்ல டா செல்லம் அமைதியா வந்தா மாமா உனக்கு என்னோட குலோப் ஜாமுனையும் உனக்கே தரேன் சரியா" எனக் கேட்க

சரி சரி பொழச்சு போ என்றவள் அவன் தந்த லாலிபாப்பை சாப்பிட்டு கொண்டு வந்தாள் அந்த அத்தை யாரு என்று யோசித்துக் கொண்டே...

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro