பகுதி 46

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்
அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்

"அம்மா உனக்கு ஒரு விசயம் தெரியுமா?? நம்ம மாமா இருக்குள்ள"  அச்சு ஆரம்பிப்பதற்குள் அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தவன்

" அச்சு மாமா பாவம்ல மா...நீ இப்படி அக்கா கிட்ட போட்டுக் கொடுத்தா நான் தாத்தா கிட்ட அவ்வளவு தான்.மாமாக்கு தாத்தா கிட்ட அடிவாங்க தெம்பு இல்ல டா தாத்தா அப்புறம் பட்டினி போட்டுருவாரு என்னை ப்ளீஸ் மா" சரண் கெஞ்ச

" சரி காலுல வேற விழுந்துட்ட போனா போகட்டும்னு  சும்மா விடுறேன் சரி சரி அதென்ன மினியன் " அவள் புருவத்தை உயர்த்த

" உன்னை மட்டும் எங்க அக்கா ஏன் தான் இவ்வளவு அறிவாளியா பெத்துட்டாங்கனு தெரியல மா.
அவ குட்டியா க்யூட்டா இருப்பா பொம்மை மாதிரி தொணத்தொணனு பேசிக்கிட்டே இருப்பா....அதான் மினியன் னு வெச்சேன்"

" அப்போ அந்த இரண்டு ஹார்ட் மொபைல் அதுவா வெச்சுக்கிச்சோ" அச்சு யோசனை செய்வது போல் தாடையில் கை வைக்க

" அம்மா தாயே நான் சரண்டர் என்னை விட்டுடு"என்றவன்

"அவளைப் பிடிக்கும் அச்சு மா ஆனால் எனக்கு அப்பாவா உங்க தாத்தா இருக்கும் போது லவ்னு லாம் நான் இருக்கலாமா.அதைப் பத்தி பேசக் கூட கூடாது" என்றவன் உள்ளே மெத்தையில் அமர

"விடு மாமா பாத்துக்கலாம்" என்றவள் அவன் மொபைல் வாங்கி அந்த இரண்டு ஹார்டை எடுத்து வெறும் மினியன் மட்டும் இருப்பது போல் திவியின் நேமை சேவ் செய்து விட்டு சென்றாள்.

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டவன் உனக்கு என்மேல இருக்க அக்கறை கூட எனக்கு என் மேல இல்லடா அச்சு மா.
சரணின் அப்பாவின் மிகப்பெரிய பணிகளில் இதுவும் ஒன்று மொபைல் வாங்கி செக் செய்வது.
ஹார்ட் மட்டும் அவர் கண்களுக்கு பட்டால் சரணுக்கு ஹார்ட் இல்லாமல் செய்து விடுவார்.

இன்னும் சரணின்  மொபைல் டிஷ்பிளே  ஏதாவது கடவுளின் போட்டோவாகத் தான் இருக்கும்.

ஒருமுறை தெரியாமல் அச்சு சாய்பல்லவியின் போட்டோவை வைக்க அதற்கு  அவர் ஒரு வாரம் பாடிய பல்லவியை அவன் மட்டுமே அறிவான்.

இப்போது லாம் கொஞ்சம் டெவலப் ஆகிவிட்டான்.
கடவுளின் படங்களுக்கு பதிலாக டாம் அன்ட் ஜெர்ரி, மினியன்  இதுபோன்ற கார்டூன்களை வைத்துக் கொள்கிறான்.
அதில் அவனுக்கு பிடித்தமானது மினியன்.
இப்போது திவி.
காதல் என்ற பெயரில் அவளுக்கு துன்பத்தை தர விரும்பவில்லை
பெண்களுடனே பழகாமல் இருந்தவனுக்கு ஏனோ திவியுடன் பேசுவது மிகவும் பிடித்த தருணங்களாக மாறி விட்டது.

"டொய்ங்" சத்தம் எழுப்ப மொபைல் வால்பேப்ராக
மினியன் அழகாக கைகளை கட்டிக் கொண்டு நிற்க அவனின் மினியனிடம் இருந்து தான் மெசேஜ் வந்திருந்தது.

" ஈவ்னிங் 5 க்கு ஆபிஸ் வந்துவிடு " என...

கடவுளே நான் அப்பா கிட்ட என்னனு சொல்லுவேன்
எப்படி போறது என சரண் யோசித்துக் கொண்டிருக்க
(கடவுள் இருக்கான் குமாரு இல்லை இல்லை  இந்த ஆதர் ஜி இருக்கேன் சரண்...நான் பாத்துக்கிறேன்🤭)

" சரண் இங்கே வா பா" அம்மா குரல் கொடுக்க வெளியே வந்தவன் கண்டது அவனது அப்பா, அம்மா ரெடியாக நின்றிருப்பதைத் தான்.

அவன் என்னவென்று புருவத்தை  உயர்த்த
"நானும் அப்பாவும் அக்கா கூட போறோம் டா ஒரு வாரம் அங்கே இருந்துட்டு வரோம்
.உன்னை வர சொன்னா நீ தான் வேலை இருக்குனு சொல்லுற நாங்க போய்ட்டு வறோம் நீ பத்திரமா இருந்துக்கோ..." என்றவர் அவன் நெற்றியில் இதழ் பதித்து பாத்து பத்திரமா இருடா எனக் கூறிச் செல்ல

" வீடு விட்டா ஆபிஸ் ஆபிஸ் விட்டா வீடுனு இருக்கணும்.
ஹோட்டல்ல வாங்கி சாப்பிடாத,மொபைல் 8 மணிக்கு மேல யூஸ் பண்ணாத,டிவி ரொம்ப நேரம் பாக்காத,ஒழுங்கா சாப்பிடு,ப்ரெண்ட்ஸ்னு யாராச்சும் வீட்டுக்கு வந்தா நீ அவ்வளவு தான் பாத்துக்கோ" விறைப்பாகவே சொல்லிவிட்டு நகர

" சரிங்கப்பா" தலை குனிந்தவன் இன்னும் தலை நிமிர வில்லை.

" மாமோய்" கீழே குனிந்தவனை அவனருகில் சென்று அவள் மேலே பார்க்க

அவளைப் பார்த்து சிரித்தவன் என்ன எனக் கேட்க

"எப்புடி எங்க ஐடியா?? " என்றவள் இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள

அவன் திருத்திருவென முழிக்க
" நான் தான அழுது அடம்பிடிச்சு அம்மம்மா தாத்தாவை ஊருக்கு கூட்டிட்டு போறேன்" என்றவள் அவனைப் பார்த்து கண்களை சிமிட்ட

ஆஆஆஆ என்று வாயைப் பிளந்தவனது வாயை மூடியவள்
" இதெல்லாம் கேர்ள்ஸ்க்கு பண்ண வேண்டிய அட்வைஸ் உனக்கு பண்ணுறாங்க சோ சேட் மாமா நீ போய் அத்தையை பாரு..." என்றவள்

" பாய் மாமா" எனக் கூறி விட்டு தன் தாத்தாவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன் "தேங்க் யூ அச்சு மா" மனதார கூறிக் கொண்டவன் தன் தந்தையின் முகத்தைக் கண்டு பயந்து கொண்டு மறுபடியும் கீழே குனிந்து கொண்டான்.

அனைவரும் கிளம்ப 4.30 மணிக்கு அவனும் கிளம்பினான்.
எப்போதும் தொலதொலவென்று இருக்கும் சர்ட் அதை இன் பண்ணி செல்பவன் இப்போதும்  அதே போல் தான் சென்றான்(🤭இவனையும் ஹீரோ ஆக்கலாம்னு பாத்தா முடியாது போலேயே...)

ஆபிஸ்  விட்டு வெளியே வந்தவள் அவனுக்காக காத்திருக்க அவனும் வந்தான்.
அவன் வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே வரும்வரை வெளியே நின்றிருந்தவளை அவன் பார்க்கவே இல்லை அவளை மட்டும் இல்லை வேறு எந்த ஒரு நபரையும்.

அவளைத் தாண்டி அவன் செல்ல அவன் கைகளைப் பிடித்து திவி இழுக்க முதலில் அதிர்ந்தவன் அவளைப் பார்த்ததும் மனதில் தோன்றிய மகிழ்ச்சியைக் கட்டுப் படுத்திக் கொண்டு " ஏய் என்ன லொள்ளா எதுக்கு என் கைப்பிடிச்சு இழுத்த" எனக் கூறி முறைக்க

"ம்க்கும் இதெல்லாம் நீ பண்ணனும் என் தலை எழுத்து நான் பண்ணுறேன் " என்றவன் தலையில் அடித்துக் கொள்ள

அவள் கூறியதைக் கண்டு சிரித்தவன் அவள் பார்ப்பதற்குள் அதை மறைத்துக் கொண்டான்.
பின்ன யாரு அவக்கிட்ட திட்டு வாங்குறது...

வா போலாம் என்றவள் முன்னே நடக்க

"எங்கே ஆபிஸ்க்கு போலாம் அங்கேயே பேசலாம்" என்றவன் கூறிக் கொண்டே அவள் பின்னால் சென்றான்.

அவள்தான் அவன் பேசுவதைக் கண்டு கொள்ளாமல் நடந்து கொண்டே இருக்கிறாளே...

தன் ஸ்கூட்டியில் ஏறியவள் அவனைப் பின்னால் ஏறச் சொல்ல

"அய்யோ நான் மாட்டேன் பா..." என்றவன் கைகளைக் கட்டிக் கொண்டு அந்தப் பக்கம் திரும்பிக் கொள்ள

கைகளைக் கட்டிக் கொண்டு அவளும் அவனைப் பார்த்த படியே நின்றிருந்தாள்.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

நீ வேணும் நான் வாழ
நீ வேணும் கண் மூட
வருவேனே உயிரை தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே நீதானே
நீ வேணும் நான் வாழ
நீ வேணும் கண் மூட வருவேனே உயிரை தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதானே

ரெட் டீசர்ட், ப்ளாக் ட்ராக்ஸில் கேசம் நெற்றியில் புரள பாடலைப் பாடிக் கொண்டே தியாவிற்காக காபி போட்டுக் கொண்டிருந்தான்.

இதோடு டேஸ்ட் செய்து டேஸ்ட் செய்து பத்து முறை கீழே கொட்டி விட்டான்.

இன்னும் காபி நன்றாக வரவில்லை.

"சப்பா காபி நல்லா போடுறவங்களுக்கு கோவில் கட்டணும் எவ்ளோ கஷ்டமான வேலை இது ..." என்றவன் இந்த முறையும் காபி நன்றாக வராததால் கீழே கொட்டிவிட்டு திரும்ப அங்கு தியா சிரிப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றிருந்தாள்.

அவளைப் பார்த்து திருத்திருவென முழித்தவன் "எப்போ வந்த " எனக் கேட்க

" நீங்க காபினு ஒன்னு டிரை பண்ண ஆரம்பிச்சு அதை பத்து முறை கீழே கொட்டுற வரை இங்கே தான் இருக்கேன்"

அவளைப் பார்த்து முறைத்தவன்
" எட்டு முறை தான்"

" ச்சச ச்சசச பத்து இப்போ பதினொன்று " அவள் வாய் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

அதில் கடுப்பானவன் " ஒருத்தன் நமக்காக காபி போடுறானே அவனுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு ஏதாச்சும் இருக்கா??"

" எனக்காகவா போடுறீங்க நான் உங்களுக்குனு நினைச்சு தானே அமைதியா இருந்தேன் எனக்குனு தெரிஞ்சிருந்தா அப்போவே நானே வந்து போட்டிருப்பேன்..." என்றவள் சிரிக்க

அவளை முறைத்தவன் " நான் போடுறத தான் நீ குடிக்கிற "எனக் கூறிவிட்டு   இந்த முறை போட்டதை டேஸ்ட்  செய்யாமல் அவளுக்கு கொடுக்க அதை வாங்கிப் பார்த்தவள் ஒரு ரியாக்ஷன் கொடுக்க

" அடியேய் இப்போ ஏன் நீ இப்படி ஒரு லுக் விடுற நல்லா தான் இருக்கும் குடி" எனக் கூற

வாயில் வைத்தவள் சூப்பர் என கையில் சைகை செய்ய எப்புடி என காலரைத் தூக்கி விட்டவன் தானும் ஒரு வாய் வைக்க அவ்வளவு தான் அதற்கு மேல் முடியாமல் துப்பி விட்டான்..

அவளை அவன் பாவமாக பார்க்க

" எனக்காக டிரை பண்ணிருக்கீங்க எனக்கு பிடிச்சிருக்கு " என்றவள் மறுபடியும் குடிக்க அதை அவளிடமிருந்து வாங்கியவன் " வேணாம் வேணாம் இதை குழி தோண்டி புதைக்கணும் இல்லைனா அவ்வளவு தான் " எனக் கூறிச் சிரிக்க
அவளும் சிரித்து விட்டாள்.

" அப்புறம் பாட்டெல்லாம் பாடிட்டே காபி போட்ட மாதிரி தெரிஞ்சுது"

" சூப்பர் சாங்க்ல" என்றவன் கண் சிமிட்ட

" ஆமா ஆமா" என்றவள் இவரு நமக்காக பாடுனா தான் அதிசயம் என நினைத்துக் கொண்டு சமையல் செய்ய உள்ளே செல்ல

" உன்னை நினைச்சு தான் நான் பாடுனேன் தியா நீ வேணும்....நீ இருந்தா மட்டும் தான் என் லைப் நல்லா இருக்கும்.ஆனால் உன்கிட்ட சொல்ல தான் முடியல" என்றவன் மனதில் நினைத்துக் கொண்டே அவளுக்கு சமையல் செய்ய உதவுவதாக கூறி தொல்லை செய்ய சென்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro