பகுதி 48

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


டைனிங் டேபிள் மேல் புத்தகம், நோட் அனைத்தையும் பரப்பி வைத்துக் கொண்டு காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு தன் அசைன்மெண்ட் வேலையை செய்து கொண்டிருந்தாள் மேஹா.

டையார்டாக வந்தவன் கதவினை தன்னிடம் இருக்கும் சாவி கொண்டு திறந்து உள்ளே வர அவனுக்கு முதுகு காட்டி அவள் எழுவதில் மும்மரமாக இருந்தாள்.

கழுத்தில் கட்டியிருந்த டையை கழட்டிக் கொண்டே சத்தமில்லாமல் அறைக்குச் சென்றவன் ப்ரஸ்ஸாகி கதவின் அருகே சாய்ந்து நின்று கொண்டு மேஹாவிற்கு அழைத்தான்.

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்

மொபைல் சிணுங்க அதில் தெரிந்த லாலிபாப்😍😘 பெயரைக் கண்டு முகம் மலரந்தவள் "காலைல இருந்து ஒரு கால் இல்ல பொண்டாட்டி மேல அக்கறையே இல்ல லாலிபாப் உனக்கு. போ நான் கால் அட்டெண்ட் பண்ண மாட்டேன் என்றவள் அட்டெண்ட் பண்ணாமல் அதையேப் பார்த்துக் கொண்டிருக்க
அழைப்பு நின்றது.

மறுபடியும் அழைப்பான் என எதிர்ப்பார்த்திருக்க அவன் அவள் செய்கையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்,அப்படியே சிரித்தும் கொண்டிருந்தான்.(உனக்கு லொள்ளு என் மேஹா டார்லிங்கை பாத்து சிரிக்கிற😡)

அழைப்பு மறுபடியும் வராததால் அவனைத் திட்டிக் கொண்டிருந்தவள் வால்பேப்பரில் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே "லாலிபாப் நீங்க என்கிட்ட உங்க காதலை சொல்லிட்டீங்க ஆனால் நான் இன்னும் சொல்லலை நான் சொல்லித் தான் தெரியணும்னு இல்லை...எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச என் செல்ல லாலிபாப் நீங்க" என்றவள் மொபைலில் தெரிந்த அவன் போட்டோவிற்கு முத்தம் கொடுக்க
அதைப் பார்த்தவன் ஒருத்தன் இங்கே குத்துக் கல்லாட்டம் நிக்கிறான் அவனுக்கு கொடுக்காம போட்டோவிற்கு கொடுக்கிறா இவளை என பற்களைக் கடித்துக் கொண்டிருக்க

" அடேய் முட்டாப்பயலே நீ இருக்கிறது அவளுக்கு எப்படி டா தெரியும் " அவனோட மனசாட்சி கேள்வி கேட்க

ஈஈஈஈ என இளித்தவன் அவள் என்ன செய்கிறாள் எனப் பார்க்கத் தொடங்கினான்.

பாடல் கேட்டுக் கொண்டே எழுதிக் கொண்டிருந்தவள் தன்னவன் நியாபகம் வந்து விட்டதால் அதை ரசித்து அவனை நினைத்துக் கொண்டே அவளும் பாடிக் கொண்டிருந்தாள்.

திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

இந்த வரிகளைப் பாடியவளின் முகம் அவளை அறியாமலே அந்த கள்வனின் நினைவில் முகம் சிவக்க

" அய்யோ லாலிபாப் குட் கேர்ள்ளா எழுதிட்டு இருந்தேன்
என்னை இப்ப எழுத விடாம பண்ணிட்டியே! பெருமானே நான் என்ன பண்ணுவேன் வெட்கம்னா என்ன அது எந்த கடைல கிடைக்கும் கேட்கிற ஆளை இப்படி மாத்திட்டாரே" எனப் புலம்பியவள் தன் முகத்தை மூடிக் கொள்ள

அதைக் கேட்டு சத்தமாக சிரித்தவன் அவள் பார்ப்பதற்கும் ஒளிந்து கொண்டான்.

மனோவின் நினைவிலே இருந்தவளுக்கு அவனின் சிரிப்பு சத்தமும் கேட்கவில்லை.

பூனை போல் மெதுவாக தன்னவளை நோக்கி சென்றவன் அவள் பின் கழுத்தில் ஊத
அவன் ஸ்பரிசத்தில் மெய் சிலிர்த்தவள் பதறி அடித்து எழ கீழே குனிந்து கொண்டவன் அவள் பின்புறம் சென்று அணைத்துக் கொண்டான்.

"அய்யோ மனோ சார் வி...டு...ங்க..." அவள் வாய் திக்கி திணற அதற்கு மேலும் அவளை அவன் பேச விடவில்லை.

அவன் சேட்டைகள் அதிகமாகிக் கொண்டே போக அவன் காலை மிதித்தவள் அவனை முறைக்க
"அய்யோ அம்மா ஏண்டி குண்டு தக்காளி காலை மிதிச்ச...."என்றவன் அவளைப் பாவமாக பார்க்க

அதில் சிரிப்பு வந்து விட சிரிப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டவள் அவனை பார்த்து முறைக்க

"நீ தானே திருடன் போல் பதுங்கியேனு பாட்டுலாம் பாடுன அதான் வொய்ப் ஆசை பட்டுட்டாலே அதை நிறைவேத்தணுமேனு வந்தா என் காலை மிதிக்கிற சரியில்ல டி...இது நியாயமே இல்ல.
உனக்காக தான் நீ பாவம் னு தான் இப்படி பண்ண" வீர வசனங்களைப் பேசியவன் குழந்தைப் போல் முகத்தை வைத்துக் கொள்ள

அய்யோ என தலையில் அடித்துக் கொண்டவள் அவனை ரசிக்க தவறவில்லை.

அவனை நெருங்கி அவன் கால்களின் மேல் ஏறி நின்றவள் அவன் நெற்றியில் இதழ் பதிக்க
சிரித்துக் கொண்டே அதைப் பெற்றுக் கொண்டவன் கண்களை மூட
அவளுக்கு பிடித்த அவன் விழிகளிலும் இதழ் பதித்தாள்.

அப்போ இங்கே என அவன் கன்னத்தைக் காட்ட
சிரித்துக் கொண்டே கன்னத்தைக் கிள்ளியவள் அங்கேயும் தன் இதழ்களைப் பதித்தாள்.

" போதுமா??" என்றவள் புன்னகைத்துக் கொண்டே அவனை ஏறிட

"இது மட்டும் என்ன பாவம் பண்ணுச்சாம்" என்றவன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு தன் இதழ்களைக் காட்ட

அதில் முகம் சிவந்தவள் "அய்யோ லாலிபாப் " என அவன் மார்பில் சாய்ந்து அவனை அணைத்துக் கொள்ள அவனும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் விழிகளைப் பார்க்க
அதில் தானே அவள் முதல் முதலாக தொலைந்தாள்.

அவன் பார்வையை தாங்க முடியாமல் அவள் கீழே குனிய
தன்னவள் முகத்தை நிமிர்த்தியவன்
அவள் இதழ்களில் தன்னிதழை பதித்து அவளுள் தொலைந்து போனான்.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

அலுவலகத்தில் முன் வண்டியை நிறுத்தியவள் அவனைப் பார்க்காது அப்படியே நிற்க அதிலிருந்து இறங்கியவன் அவளையேப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.(சைட் அடித்துக் கொண்டு நின்றிருந்தான்🤭🤭)

அவள் இன்னும் அவனை நிமிர்ந்து பார்க்காமல் தன் வண்டியில் அமர்ந்திருக்க " ஏன்ங்க திவிங்க என் மேல கோபமாங்க" கேட்டவன் முகம் வாட

அப்போது தான் தன் நினைவில் இருந்து வெளியே வந்தவள் அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே
" அய்யோ சரு குட்டி உன் மேல எனக்கு கோபமா அது நடக்காது அதுக்கு வாய்ப்பே இல்லைங்கிறேன்"எனக் கூற

மனது இதமானாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சரண் நின்றிருக்க
அவளுக்குத் தெரியாதா அவன் சருவைப் பற்றி...

"அப்புறம் ஏங்க என் கூட பேசல"

"மாமாவை எப்படி கவுக்கலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன் " எனக் கூறிக் கண்ணடிக்க

அதில் அதிர்ச்சி ஆனவன் அவளையே வியப்பாக பார்க்க

" இங்கே பாரு சருக்குட்டி இந்த திவிக்கு இதுவரை லவ் மேல சுத்தமாக நம்பிக்கை இருந்தது இல்ல என் ப்ரெண்ட் தியானால தான் லவ் மேல ஒரு நம்பிக்கை வந்துச்சு அதுவும் அவ அபி அண்ணா கூட சேர்ந்ததுனால....எனக்குலாம் லவ் வராது நமக்கு அதுலாம் செட் ஆகாதுனு தான் நினைச்சேன்...அதுலாம் உன்னை பார்க்கிற வரை தான் முதல் நாள் நான் என்னமோ உங்கிட்ட இருந்து அவங்களை பிரிக்க வந்த மாதிரி நீ பில்டப் கொடுத்தியே அப்போவே உன்னை ரொம்ப பிடிச்சிருச்சு...ஏதோ பொம்மை வேணும்னு அடம்பிடிக்கிற குழந்தை மாதிரி தான் தெரிஞ்ச மாதிரிலாம் இல்ல நீ குழந்தை தான்...உன்னே கண்டிப்பா நான் நல்லா பாத்துப்பேன் நீ எனக்கு வேணும் உனக்கு இந்த திவி பொம்மை வேணாமா" கண்களில் அத்தனை காதலுடன் அவள் கேட்க
ஒரு நிமிடம் தன்னையும் அறியாமல் அவளைப் பார்த்தவன் அடுத்த நொடியே அவன் தந்தையின் நினைவு வர வேகமாக அந்த இடத்திலிருந்து சென்று விட்டான்.

அவன் இதைத் தான் செய்வான் என அறிந்திருந்தவள் அவன் செல்வதையேப் பார்த்துக் கொண்டு "லவ் யூ சருக்குட்டி" என்றவள் தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

தன் வண்டியில் அமர்ந்திருந்தவனுக்கு கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க அவன் நினைவு முழுவதும் திவி மட்டுமே நிறைந்திருந்தாள்.

"நீ வேணும்,திவி பொம்மை எனக்கு வேணும் ஆனால் அப்பா...காதல்னு சொன்னா கொலை செய்ய கூட தயங்க மாட்டாரே என்னால திவிக்கு ஏதாவதுனா??? அய்யோ" தலை வெடித்து விடும் போல இருக்க எப்போதும் பைக்கில் 40ல் செல்பவன் இன்று வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

அபிக்கும் தன்னை பிடிக்கும் என்ற நினைவே அவளை நன்றாக உறங்க வைத்திருந்தது.

காலையில் கண் விழித்தவள் தன்னருகே அபியைத் தேட அவன் இல்லாததால் வெளியே எழுந்து சென்றாள்.

டைனிங் டேபிளின் மேல் காபி கப் இருக்க அதற்கு கீழே ஒரு காகிதம் இருந்தது.

அதை எடுத்து பிரித்துப் பார்க்க
"என்னுள் புதுப்புது மாற்றங்களை ஏற்படுத்திய என்னவளே உனக்காக நான் தயார் செய்த காபி நம்பி குடிக்கலாம்...நான் குடித்து உயிரோடு இருப்பதை உறுதி செய்த பின்னரே உனக்கு கொடுத்தேன் இந்த காபியை குடிச்சுட்டு கிட்சனுக்கு வா" என்றிருக்க அதைப் பார்த்து சிரித்தவள் அவன் கிட்சனில் தான் இருக்கிறான் போல என நினைத்தவள் அந்த காபி கப்பை எடுத்துக் கொண்டே கிட்சன் செல்ல அங்கு பிரிட்ஜில் ஒரு ஸ்மைலியுடன் காகிதம் ஒன்று இருந்தது.

அதை எடுத்துப் பிரிக்க " எனக்குத் தெரியும் நீ காபி குடிக்காமலே இங்கே வந்துடுவனு கேடி முதல்ல பெட் ரூம்க்கு வா" என்றிருக்க

அங்கு சென்று பார்த்தவள் பேஸ்ட் ப்ரஸ் உடன் ஒரு காகிதம் இருக்க அதைப் பிரித்துப் பார்த்தாள்.

" நீ இன்னும் பல்லே விளக்கலனு தெரியும். முதல்ல ப்ரஸ் ஆகு போபோ அதுக்கப்புறம் கிட்சன் க்கு போய் காபி குடி இப்போ உன் கைல இருக்கிறது காபியே இல்ல ஈஈஈஈ அது சும்மா டிரையல் பாத்தது" என்றிருக்க

நல்ல வேளை குடிக்கல என்றவள் ப்ரஸ்ஸாகி வந்து கிட்சன் சென்று காபியை எடுத்துக் கொண்டு குடித்தவாறே வெளியே வந்து சோபாவில் அமர்ந்தாள்.

" காபி நல்லா தான் இருக்கு" என்று புன்னகைத்தவள் எதிரே பார்க்க அங்கும் ஒரு காகிதம் இருந்தது.

"காபி சூப்பர்ல போதும் போதும் என்னை புகழ்ந்தது...எனக்கு புகழ்ச்சி பிடிக்காது சீக்கிரம் வெளியே வா " என்றிருக்க

கடவுளே என தலையில் அடித்துக் கொண்டவள் அவனைப் பார்க்கும் ஆர்வம் மேலோங்க வெளியே சென்றாள்.

அந்த குளிரில் ஜர்க்கின் கூட போடாமல் அவள் நடுங்கிக் கொண்டே நடந்து செல்ல ஒரு சிறுவன் ஜர்க்கினைக் கொடுத்து சிறு புன்னகையுடன் ஐ என்று கூற
அவனைப் புரியாமல் பார்த்தவள் அதைப் போட்டுக் கொண்டு நடந்தாள்.

எதுக்கு அவன் ஐ சொன்னான் என யோசித்துக் கொண்டே சென்றவள் அருகே ஒரு முதியவர் வந்து பூங்கொத்தைக் கொடுத்து சிரித்து விட்டு செல்ல அதில் லவ் என்றிருந்தது.

ஒன்றும் புரியாமல் செல்ல அங்கே அருகில் இருக்கும் பார்க்கில் அபி அமர்ந்துக் கொண்டிருந்தான்.

அவனருகே ஓடி சென்றவள் அவனைப் பார்க்க அவன் ஆள்காட்டி விரலால் அவளைக் காட்டினான்.

அவள் என்ன என்பதாக புருவத்தை உயர்த்த
அந்த குட்டி தம்பி என்ன சொன்னான் என்று கேட்வனிடம்

இதுல என்ன இருக்கு

லவ்

இப்போ சொல்லு என்றவன் அவளை நோக்கி கை நீட்ட

திருத்திருவென விழித்தவள் அவனைப் பாவமாக பார்க்க

அவளைத் தலையில் தட்டியவன் அவள் கண்கள் மூடி அழைத்துச் செல்ல " தியா ஐ லவ் யூ" என அங்கிருந்த சிறுவர்கள் கூற

" ஓய் அடி" என அபி மிரட்ட

சிரித்தவர்கள் " ஹு லவ்ஸ் யூ..." எனக் கூறி சிரிக்க

அதிர்ச்சியில் கண்களை விரித்தவள் அவனைப் பார்க்க
அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் " தியா மா" எனக் கூற

"ஹாய் அபி" என அழைத்த சத்தத்தில் அவன் பார்க்க அங்கு ஆனந்தி அவனைப் பார்த்து சிரித்தவாறே கையை ஆட்டினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro